Latest Updates
-
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம்
ஒற்றை தலைவலியால் படாத பாடுபட்ட பிரபலங்கள்... கடைசியில் என்னதான் செய்தார்கள்?...
ஒற்றைத் தலைவலி என்பது சாதாரண தலைவலியில் இருந்து வேறுபட்டது. அதைவிட தாங்கிக் கொள்ள முடியாத ஒன்றும் ஆகும். அடிக்கடி வரும் இந்த ஒற்றைத் தலைவலியை தாங்கிக் கொண்டு, தன்னுடைய துறையில் பெரிய அளவில் சாதித்துக்
ஒற்றைத் தலைவலி என்பது சாதாரண தலைவலியில் இருந்து வேறுபட்டது. அதைவிட தாங்கிக் கொள்ள முடியாத ஒன்றும் ஆகும். அடிக்கடி வரும் இந்த ஒற்றைத் தலைவலியை தாங்கிக் கொண்டு, தன்னுடைய துறையில் பெரிய அளவில் சாதித்துக் காட்டிய பிரபலங்கள் பலர் உள்ளனர். குறிப்பாக, இதில் செரீனா வில்லியம்ஸ், மார்சியா கிராஸ், கார்லி சைமன் போன்ற மிகப்பெரிய பிரபலங்கள் இந்த ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

செரீனா வில்லியம்ஸ்
ஒரு டென்னிஸ் போட்டியின்போது தான் செரீனா வில்லியம்ஸ் தனக்கு ஏற்பட்ட ஒற்றைத் தலைவலி மாதவிடாய் சுழற்சியினால் உண்டானது என்பதை தெரிந்து கொண்டார். "இதற்கு முன் இந்த செய்தியை தான் அறிந்ததில்லை (மாதவிடாய் ஒற்றைத் தலைவலி)" என்று அவர் கூறுகிறார். இத்தனை நாட்கள் இதனை சாதாரண ஒற்றைத் தலைவலி என்று நினைத்திருந்தேன் என்றும் அவர் கூறுகிறார். 60% பெண்கள் மாதவிடாயின் போது ஒற்றை தலைவலி அதிகமாக ஏற்படுவதாக கூறுகின்றனர். இதற்குக் காரணம் ஹார்மோன் மாற்றம் தான். உங்கள் ஹார்மோன் அளவை சீராக்க மருத்துவரிடம் மருந்துகள் பரிந்துரைக்க சொல்லலாம்.

பென் அப்லேக்
பெரும்பாலும் பெண்களுக்கு தான் ஒற்றை தலைவலி பாதிப்பு அதிகமாக உள்ளது. ஆனால் 6% ஆண்களுக்கும் இந்த பாதிப்பு ஏற்படுவதுண்டு. நடிகரும் இயக்குநருமான பென் அப்லேக் ஒற்றை தலைவலியால் பாதிக்கப்பட்ட ஆண்களில் ஒருவர். 2006ம் ஆண்டு கான், பேபி, கான் இயக்கும்போது அவர் தீராத ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். "அப்போது நான் தூங்கிக் கொண்டே இருப்பேன்" என்று அப்லேக் கூறுகிறார். ஒரு வழக்கமான தூங்கும் அட்டவணை ஒற்றைத்தலைவலியைத் தடுக்க உதவுகிறது. ஒரே நேரத்தில் தூங்கி ஒரே நேரத்தில் எழும் பழக்கத்தை வார இறுதி நாட்களிலும் கடைபிடிப்பதால் இந்த பாதிப்பு குறைகிறது.

லிசா குட்ரோ
டிஸ்னி லேன்ட் பயணம் எப்போதும் ஒரு வித சந்தோஷத்தைக் கொடுக்கும். பிரபல நடிகை லிசா குட்ரோவிற்கு, ஒரு நாள் முழுவதும் இருக்கும் உற்சாகமும், அதிகமாக சாப்பிடுவதும் அந்த நாளின் முடிவில் ஒற்றை தலைவலியைக் கொடுக்கும். என்று அவர் கூறுகிறார். இவருடைய தந்தை மற்றும் சகோதரர்களும் இதே மாதிரி ஒற்றைத் தலைவலியை அனுபவிக்கின்றனர். இது ஒரு குடும்ப நோயாக கருத்தப்படுகிறது. பெற்றோருக்கு ஒற்றைத் தலைவலி இருக்கும் பட்சத்தில் 50-75% அவர்களுடைய குழந்தைகளையும் இந்த நோய் பாதிக்கிறது. உங்கள் பாரம்பரியத்தின் வரலாறு தெரிந்தால் உங்கள் மருத்துவரால் உங்களுக்கு எளிதாக சிகிச்சை அளிக்க முடியும்.

மார்சியா கிராஸ்
நடிகை மார்ஷியா கிராஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியான டெஸ்பரேட் ஹவுஸ்வைப் இல் ப்ரீ வான் டி காம்ப் என்ற கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர். கேமராவிற்கு பின் அவர் ஒற்றைத் தலைவலியால் அவதிப்பட்டார். இந்த ஒற்றைத் தலைவலியுடன் வேலை செய்வது மிகவும் கடினமாக உள்ளது என்று அவர் கூறினார். "நான் மிகவும் நொந்து போனேன், குமட்டல் மற்று சோர்வு அதிகம் இருந்தது. என் பார்வை பாதிக்கப்பட்டது" என்றும் அவர் கூறினார். ஒற்றைத் தலைவலி மருந்தான டிரிப்டனுடைய செய்து தொடர்பாளர் ஆவார் மார்சியா க்ராஸ். இரத்த நாளங்களை குறுக்கி. வாந்தி மற்றும் ஒற்றைத் தலைவலியைக் குறைக்கிறது டிரிப்டன்.

ஜேனட் ஜாக்சன்
வெஸ்டிபுலார் ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்ட பின்னர், 2008ம் ஆண்டு தொடர்ந்து பல கச்சேரிகளை ரத்து செய்தார் பிரபல பாடகி ஜேனட் ஜாக்சன். இந்த வகை ஒற்றைத் தலைவலி, தலை சுற்றும் உணர்வைத் தரும். நீங்கள் இருக்கும் அறையே சுற்றுவது போல் ஒரு உணர்வு உங்களுக்குத் தோன்றும். வெளிச்சம் மற்றும் அதிக சத்தம் உங்களுக்கு தொந்தரவாக இருக்கும். ஒற்றைத் தலைவலியை அனுபவிக்கும் 30% பேர், இந்த தலைசுற்றலை அனுபவிப்பார்கள். மற்ற ஒற்றைத் தலைவலியைப் போல், வெஸ்டிபுலார் ஒற்றைத் தலைவலிக்கு சிகிச்சை உண்டு. மருத்துகள் மூலம் இந்த வலியை அதிகரிக்க விடாமல் செய்ய முடியும்.

கிறிஸ்டின் கேனோவத்
2009ம் ஆண்டு எம்மி விருது வாங்கிய பின்னர், நடிகையும் பாடகியுமான கிறிஸ்டின் செனோவேத் ஒற்றை தலைவலியால் பாதிக்கப்பட்டார். இவருடைய மருத்துவர் இவருக்கு போடோக்ஸ் மருந்து ஊசியை பரிந்துரை செய்தார். "அதில் இருந்து எனக்கு அதிக தலைவலி இல்லை "என்று அவர் கூறுகிறார். ஒரு மாதத்தில் 15 முறைக்கும் மேல் ஒற்றைத் தலைவலி வருபவர்களுக்கு இந்த போடோக்ஸ் பரிந்துரை செய்யப்படுகிறது. ஆனால் இது ஒற்றை தலைவலியை முற்றிலும் குணப்படுத்துவதில்லை. மிதமான அளவு நிவாரணத்தை இந்த மருந்து வழங்குவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
Image Courtesy

கார்லி சைமன்
கார்லி சைமன் கிராமி விருதைப் பெற்றவர். இவர் ஒற்றைத் தலைவலியைத் தடுக்க வாழ்க்கை முறையில் பல்வேறு மாற்றங்களை செய்தார் . "நான் புகை பிடிப்பதில்லை , எட்டு மணி எரம் தூங்குகிறேன், காபியை நான் தொடுவதே இல்லை", என்று சைமன் கூறுகிறார். பொதுவாக ஒற்றைத் தலைவலியைத் தூண்டும் மதுவையும் அவர் அருந்துவதில்லை. சில நேரங்களில் சிவப்பு ஒயின் ஒற்றைத் தலைவலியைக் குறைக்கும்.
Image Courtesy

சின்டி மக்கெயின்
சிந்தி, ஒற்றை தலைவலியை டார்ச்சர் என்று விவரிக்கிறார். நெற்றியில் சுத்தியலை வைத்து அடிப்பது போல் உணர்வை இந்த வலி தருவதாக கூறுகிறார். 2008 ஆம் ஆண்டில் அவரது கணவர் சென் ஜோன் மெக்கெயின் ஜனாதிபதியின் பிரச்சாரத்தில் இந்த ஒற்றை தலைவலியின் தாக்குதல்கள் மிகவும் மோசமாக இருந்தது. கேமராவில் இருந்து வெளிப்படும் பிரகாசமான ஒளியால் இந்த தலைவலி அதிகரிக்கும் வாய்ப்பு உண்டு. ஒற்றை தலைவலியால் பாதிக்கப்பட்டவர்களின் உற்ற தோழனாக இருப்பது சன் க்ளாஸ் என்று அவர் கூறுகிறார்.
Image Courtesy

ட்ராய் ஐக்மன்
ட்ராய் சிறு வயதில் இருக்கும்போதே அவருக்கு ஒற்றைத் தலைவலி இருந்து வந்தது. "மனிதனாக இருக்கும் ஒவ்வொருவருக்கும் தலை வலி வந்தே தீரும். ஆகவே அதனை பற்றி பேசிக் கொண்டே இருக்க வேண்டாம்" என்று ட்ராய் கூறுகிறார். அதிலும், அடிக்கடி பயணம் மேற்கொள்வதால் மற்றும் தூக்கம் தடை படுவதால் இந்த நிலைமை மேலும் மோசமடைகிறது. ஒற்றைத் தலைவலி பாதிப்பு ஒவ்வொருவருக்கும் வேறுபடும். ஆனால் தொடர் பிரயாணம் மற்றும் வழக்கமான தூக்கத்தில் தடை போன்றவை தலைவலியை அதிகரிக்கலாம். பருவ நிலை மாற்றம் மற்றும் பயண வாந்தி போன்றவை இந்த நிலைமையை மேலும் அதிகரிக்கலாம்.
Image Courtesy

எல்லி மக்பெர்சன்
பிரகாசமான விளக்குகள் கீழ் வேலை செய்யும் போது தலைவலியை தடுக்க, மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த தான் அக்குபஞ்சர் முறையை பின்பற்றுவதாக மாடல் அழகி, எல்லி மக்பெர்சன் கூறுகிறார். ஒற்றை தலைவலி தாக்குதலால் ஏறபடும் அதிர்வுகள் அக்குபஞ்சர் முறையால் கணிசமாக குறைவதாக 2017ம் ஆண்டு நடந்த ஒரு ஆய்வு முடிவு ஜாமாவில் வெளியிட்டுள்ளது. அக்குபஞ்சர், மன நிலை மற்றும் தூக்கத்தை மேம்படுத்தி , பதட்டத்தைக் குறைக்கிறது.
Image Courtesy

டேரேல் டேவிஸ்
1998ம் ஆண்டு சூப்பர் பௌலின் போது டேவிஸ்க்கு ஒற்றை தலைவலி ஏற்பட்டது. "எனக்கு எல்லாமே இரண்டு மூன்றாக தெரிந்தது" என்று அவர் கூறுகிறார். அவருக்கு முதலில் ஒற்றைத் தலைவலி ஏற்பட்டவுடன் அவர் அதனை பற்றி யாரிடமும் சொல்ல வில்லை. சொன்னால் எல்லோரும் அவரை கிண்டல் செய்வார்கள் என்று எண்ணினார். இப்போது ஒற்றைத் தலைவலியை அதிகரிக்கும் உணவுகளான சாக்லேட், காபின், மற்றும் உணவு சேர்க்கையான MSG போன்றவற்றை அவர் எடுத்துக் கொள்வதில்லை.
Image Courtesy

கரீம் அப்துல் ஜாபர்
பிரபல கூடை பந்து வீரரான கரீம் அப்துல் ஜாபர், தனது தீராத தலை வலிக்கு அழுத்தம் தான் காரணம் என்று கூறுகிறார். மன அழுத்தம் ,கழுத்து மற்றும் உச்சந்தலையில் இருக்கும் தசைகளை சுருக்கி , பதற்றம் மற்றும் தலைவலிக்கு வழிவகுக்கும். தனது 14 வயதில் முதன் முறையாக ஒற்றை தலைவலி பாதிப்பு ஏற்பட்டவுடன் அழுத்தத்தைக் குறைக்கும் விதத்தில் யோகா, அக்குபஞ்சர், மசாஜ், பயோ-பீட் பேக் போன்ற முறைகளை இவர் மேற்கொண்டார். "நம்மால் அழுத்தத்தை போக்க முடியாது, ஆனால் அதனை நிர்வகிக்க கற்றுக் கொள்ள முடியும்", என்று அவர் கூறுகிறார்.
Image Courtesy

மிக்கேல் பக்மன்
ஜனாதிபதி பிரச்சாரத்தின் போது மிக்கேல் பக்மன் , ஒற்றைத்தலைவலி பற்றி பேசினார். தலைவலியை மருந்து மூலம் எளிதாக விரட்ட முடியும். இதனால் நான் வேலை செய்வதை தடுக்க முடியாது என்று பேசினார்.
ஒற்றை தலைவலி தலைவலி கொண்ட பலர் இறுதியில் ஒரு வேலையைப் பெறுகிறார்கள். மருத்துவரின் ஆலோசனையை பின்பற்றுவதால் ஒற்றை தலைவலியைத் தடுக்க முடியும். ஆகவே மருத்துவ ஆலோசனையின்படி நடப்பது மிகவும் முக்கியம்.
Image Courtesy

சூசன் ஒல்சன்
"த பிராடி பன்ச்" படத்தில் சிந்தி ப்ரடியாக நடித்த சூசன் ஒல்சன் உங்களுக்கு நினைவிருக்கலாம். அந்த காலம் முதல் இவருக்கு ஒற்றைத் தலைவலி இருந்ததாக இவர் பொதுஇடங்களில் சொல்லி இருக்கிறார். "11 வயதில் முதன்முதலாக நான் ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்டபோது, எனது மருத்துவர் என் நெற்றியில் முத்தமிட்டு, நான் மிகவும் நேர்மையானவள்" என்று கூறினார், என்று பழைய நினைவில் மூழ்கினார். ஒற்றைத் தலைவலியை கட்டுப்பாட்டில் வைக்க அவர் ட்ரிப்டன் பயன்படுத்தினார். 15 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளில் 10% பேர் ஒற்றைத்தலைவலியால் பாதிக்கப்படுகின்றனர். இந்த எண்ணிக்கையில் பாதிக்கும் அதிகமானோர் தனது இளம் வயதிலும் தொடர்ந்து இந்த பாதிப்பை கொண்டுள்ளனர்.
Image Courtesy



Click it and Unblock the Notifications