Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
30 வயதுக்குட்பட்டோருக்கு வரும் கொடிய வகை புற்றுநோய்கள்..! அண்மை ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு...!
30 வயதுக்குட்பட்டோருக்கு வரும் புற்றுநோய்கள் மிகவும் ஆபத்தானது. முதல் நிலையில் இதனை கண்டறியா விட்டால் அடுத்த நிலைகளில் உயிரையே எடுத்துவிடும்.
தினம்தினமும் எதாவது ஒரு வகை நோய்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிக்கதான் செய்கிறார்கள். நோய்களின் எண்ணிக்கை அதிகம் ஆகிறதே தவிர, அதன் தீர்வுகள் அதிகம் ஆகாமல் இருக்கிறது. குறிப்பாக புற்றுநோய் போன்ற சற்றே கொடிய நோய்களுக்கான மருந்துகளை பற்றிய ஆராய்ச்சிகள் இன்றளவும் நிலுவையில் இருக்கத்தான் செய்கிறது. புற்றுநோய்களில் பல வகைகள் உண்டு. அவற்றின் வீரியமும் நாளுக்கு நாள் அதிகம் ஆகி கொண்டே போகிறது.

இப்போதெல்லாம் ஒரு சில வயத்துக்குட்பட்டோருக்கு ஏற்படும் புற்றுநோய்களின் தாக்கம் மெல்ல மெல்ல ஏறுகிறது. அதிலும் குறிப்பாக 30 வயதுக்குள் இருக்கும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு வரும் புற்றுநோய்கள் மிகவும் ஆபத்தானது. முதல் நிலையில் இதனை கண்டறியா விட்டால் அடுத்த நிலைகளில் உயிரையே எடுக்கும் அளவிற்கு உடல் முழுவதும் பரவி விடும். இந்த வகையான புற்றுநோய்களை பற்றி இந்த பதிவில் முழுமையாக அறிவோம்.

புற்றுநோய் வகைகள் :-
30 வயதுக்குட்பட்டோருக்கு வரும் முக்கியமான புற்றுநோய்களின் வகைகள்.
1. மார்பக புற்றுநோய்
2. விரைப்பை புற்றுநோய்
3. தைராய்டு புற்றுநோய்
4. மெலனோமா
5. எலும்பு புற்றுநோய்
6. லெக்குமியா (Leukemia)
7.கர்ப்பப்பை புற்றுநோய்
8. மூளை மற்றும் முதுகு தண்டு கட்டிகள்

1. மார்பக புற்றுநோய்
அதிகப்படியான மக்களுக்கு இன்று வந்து கொண்டிருக்கின்ற புற்றுநோய் இது. இந்த புற்றுநோய் அதிகம் பெண்களையே தாக்குகிறது. 30 வயதுக்குட்பட்ட பெண்களை பெரிதும் பாதிக்கிறது. ஆண்களுக்கும் இந்த மார்பக புற்றநோய் ஏற்படும். மார்பகங்களில் வலியோ, மார்பக காம்புகளில் சீழ் அல்லது பால் வடிந்தாலோ, அதிகம் வீக்கம் ஏற்பட்டாலோ இந்த புற்றுநோய் இருப்பதாக அறிகுறியாம்.

2. விரைப்பை புற்றுநோய்
20 முதல் 30 வயதுக்குள் இருக்கும் ஆண்களை அதிகம் பாதிக்க கூடியது இந்த விரைப்பை புற்றுநோய். உங்களின் விரைப்பையில் ஏதேனும் கட்டிகள் இருந்தாலோ, அதிக வலி ஏற்பட்டாலோ இந்த வகை புற்றுநோய் இருப்பதற்கான அறிகுறி. புற்றுநோய் செல்கள் விரைப்பையில் வளர்ந்து, மெல்ல மெல்ல கட்டியாக மாறி பெரிய அபாயத்தை ஏற்படுத்தும்.

3. தைராய்டு புற்றுநோய்
கழுத்தில் கட்டி போன்று ஏதேனும் உருவாக்கினாலோ, மூச்சு விட கடினப்பட்டாலோ, குரல் வளையத்தில் மாற்றம் ஏற்பட்டாலோ உடனே மருத்துவரை அணுகி பரிசோதித்து கொள்ளுங்கள். ஏனென்றால் இந்த தைராய்டு புற்றுநோய் கழுத்து பகுதியில் கட்டிகளாக வர கூடும். மேலும் கழுத்தில் வரும் எல்லா கட்டிகளும் புற்றுநோயாக இருக்காது.

4. மெலனோமா
இது ஒரு வகையான தோல் புற்றுநோய் ஆகும். இது தோளில் உள்ள மெலனின் நிறமி சுரக்கும் இடத்தில் புற்றுநோய் செல்களாக வளர கூடும். தோளில் ஏதேனும் திடீர் மாற்றம், அதன் நிறம் மாறுதல், வடிவம் மாறுதல், அதிக வலி போன்றவை இருந்தால் கட்டாயம் மருத்துவரை அணுகுங்கள். மேலும் இது ஆண்களை காட்டிலும் பெண்களுக்கே அதிகம் வரக்கூடியது.

5. எலும்பு புற்றுநோய்
எலும்புகள்தான் ஒரு மனிதனுக்கு அதிக பலத்தை தருகிறது. நமது உடலில் எலும்புகள் இல்லையென்றால் நம்மால் எந்தவித செயல்களும் செய்ய இயலாது. இந்த வகை புற்றுநோய், எலும்பு மஞ்சையில் உருவாகி நாளடைவில் பெரிய ஆபத்தை தரும். அத்துடன் தசைகளின் வலுவை குறைக்க செய்யும்.

6. லெக்குமியா (Leukemia)
ரத்தம் மற்றும் எலும்பு மஞ்சைகளில் இந்த வகை புற்றுநோய் வரும். இது பொதுவாகவே எல்லா வயதினருக்கும் வரக்கூடிய புற்றுநோய் வகை. இருப்பினும் அதிக படியாக 30 வயதுக்குள் இருப்போருக்கு ஏற்படும். மூட்டு வலி, அதிக சோர்வு, வெளிர்ந்த தோல், ரத்தம் வடிதல், உடல் எடை குறைதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் விரைவாக மருத்துவரை அணுகுங்கள்.

7.கர்ப்பப்பை புற்றுநோய்
பெண்களுக்கு அதிகம் வரும் புற்றுநோய்களில் இதுவும் ஒன்று. பெண்களின் கர்ப்பப்பையில் புற்றுநோய் செல்கள் வளர்ந்து ரத்த போக்கை ஏற்படுத்தும். மேலும் மாதவிடாய் இல்லா காலத்திலும் உதிர போக்கு அடிக்கடி ஏற்படுத்தும். தீராத வயிற்றில் வலி, ரத்த போக்கு, வீக்கம் இருந்தால் கட்டாயம் மருத்துவரிடம் பரிசோதித்து கொள்ளுங்கள்.

8. மூளை மற்றும் தண்டுவட கட்டிகள்
குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை இந்த வகை புற்றுநோய் ஏற்படும். சிறுமூளை மற்றும் தண்டுவடம் ஆகிய பகுதிகளில் புற்றுநோய் செல்கள் உருவாகி புற்றுநோயை உண்டாக்கும். அடிக்கடி தலை வலி, வாந்தி, மயக்கம், கண்கள் மங்கலாகுதல் போன்றவை இதன் அறிகுறிகள்.
மேற்கண்ட ஏதேனும் அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் கட்டாயம் மருத்துவரை அணுகுங்கள். மேலும் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.



Click it and Unblock the Notifications