மாதவிடாய் காலம் முடிந்த பிறகும் உதிரப்போக்கு ஏற்படுகிறதா? பெண்களே உஷார்!

Posted By:
Subscribe to Boldsky

பெண்கள் மாதாமாதம் சந்திக்கிற பிரச்சனைகளில் ஒன்று மாதவிடாய், பொதுவாக பெண்களுக்கு இந்த மாதவிடாய் காலம் மிகவும் சிக்கலானது என்றே சொல்ல வேண்டும். அந்த குறிப்பிட்ட ஐந்து நாட்களில் பெண்கள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஏராளமான உபாதைகளை சந்திப்பார்கள்.

அது அவர்களுக்கு பெரும் தொல்லையாகவே இருக்கும். அவற்றையெல்லாம் பொருட்படுத்தாது அதனை கடந்து வரும் பெண்களுக்கு ஒரு சபாஷ் சொல்லியபடி இந்தக் கட்டுரையை தொடரலாம்.

பொதுவாக ஒரு மாதத்தில் ஏற்படுகிற மாதவிடாய்க்கும் அடுத்த மாதத்தில் வருகிற மாதவிடாய்க்கும் 28 முதல் 32 நாட்கள் வரை இடைவேளி இருக்கும். ஆனால் எல்லாருக்கும் இது சரியாக நடைபெறுகிறது என்று சொல்ல முடியாது. அவரவர் வாழ்க்கை முறை மற்றும் உடல் வாகுக்கிற்கு ஏற்ப இந்த இடைவேளி கூடவோ அல்லது குறையவோ செய்திடும்.

இதில் இருக்கும் சிக்கல் என்ன தெரியுமா? பீரியட்ஸ் முடிந்து ஒரு வாரமோ சில நாட்கள் கழித்து மீண்டும் ப்ளீடிங் ஏற்படும்.இதற்கான காரணங்களும் சிகிச்சை முறைகளும்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இன்ஃபிக்ஷன் :

இன்ஃபிக்ஷன் :

சிலருக்கு நோய்த் தொற்று காரணமாக கூட இன்ஃபிக்ஷன் ஏற்பட்டு உதிரப்போக்கு ஏற்படக்கூடும். பெரும்பாலானருக்கு இப்படி தாமதமான உதிரப்போக்கு ஏற்படுவதற்கு நோய்த்தொற்று தான் பிரதான காரணமாக இருக்கிறது.

நோய் தோற்று ஏற்ப்பட்டிருக்கிறது என்பதை நீங்கள் எளிதாக கண்டுபிடிக்கலாம். உதிரப்போக்கு ஏற்படும் போது கடினமாக வயிறு வலிக்கும் அதோடு கெட்ட வாடை வரும்.

 பழைய ரத்தம் :

பழைய ரத்தம் :

மென்ச்சுரேசன் காலத்தில் நம் உடலில் இருக்கிற கெட்ட ரத்தம் எல்லாம் வெளியேறாமல் இருந்தால் கூட பழைய ரத்தம் இப்படி தாமதமாக வெளியேறிடும். இப்படி வெளியேறு ரத்தம் பிரவுன் அல்லது டார்க் நிறத்தில் இருந்திடும். இது சாதரண மாதவிடாய் முடிந்து ஒன்று முதல் இரண்டு வாரங்கள் கழித்து கூட இப்படியான மாதவிடாய் ஏற்படக்கூடும்.

உடலுறவு :

உடலுறவு :

சாதரணமாக சிலருக்கு உடலுறவு முடித்து சில மணி நேரத்தில் பெண்களுக்கு உதிரப்போக்கு ஏற்படக்கூடும் என்பது தெரியும். ஆனால் மாதவிடாய் காலத்திலோ அல்லது அதற்கு முன்னதாகவோ உடலுறவு கொள்ளும் போது சிலருக்கு உதிரப்போக்கு ஏற்பட வாய்ப்புண்டு.

இர்ரெகுலர் பீரியட் :

இர்ரெகுலர் பீரியட் :

சரிசமமில்லாத மாதவிடாய் பெரும்பாலும் இளம்பெண்களுக்குத் தான் ஏற்படக்கூடும். அவர்களது உடல் மாதவிடாய் உதிரப்போக்கிற்கு ஏற்ப பழக நேரம் பிடிக்கும். அதற்காக ஹார்மோன் மாற்றங்களால் கூட இந்தப் பிரச்சனை ஏற்படும். அதே போல மெனோபாஸ் பிரச்சனை ஏற்படும் வயதிலும் கூட பெண்களுக்கு இந்தச் சிக்கல் ஏற்படக்கூடும்.

கர்ப்பத்தடை மாத்திரைகள் :

கர்ப்பத்தடை மாத்திரைகள் :

அடிக்கடி கர்ப்பத்தடை மாத்திரை பயன்படுத்துபவர்களுக்கு இப்படி மாதவிடாயில் சிக்கல்கள் ஏற்படக்கூடும். பயன்படுத்திய சிறிது மாத இடைவேளியில் இந்த சிக்கல் ஏற்படக்கூடும். இந்த மாத்திரை சாப்பிடுவதை திடீரென்று ஆரம்பித்தாலோ அல்லது நிறுத்திய சிறிது காலத்திலேயோ இந்தப் பிரச்சனை ஏற்படக்கூடும்.

யுட்ரைன் ஃபிப்ராய்ட்ஸ் :

யுட்ரைன் ஃபிப்ராய்ட்ஸ் :

கருப்பைப்பையில் ஏற்படக்கூடிய கட்டி ஏற்பட்டிருந்தால் கூட காலந்தாழ்ந்த மாதவிடாய் ஏற்படும். கர்ப்பப்பையில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டிருந்தால் கூட மாதவிடாயில் இப்படியான சிக்கல்கள் ஏற்படக்கூடும்.

ஓவுலேஷன் :

ஓவுலேஷன் :

பெண்களுக்கு ஓவுலேஷன் ஏற்படும் போது இப்படியான மாதவிடாய் பிரச்சனை ஏற்படும். ஹார்மோன் மாற்றத்தினால் உங்களது உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவு வேறுபடும் போது அதீத வயிற்று வலி மற்றும் மாதவிடாய் ஏற்படும்.

கர்ப்பம் :

கர்ப்பம் :

கர்ப்பமாக இருக்கும் போது முதல் ட்ரைம்ஸ்டரில் சில பெண்களுக்கு உதிரப்போக்கு ஏற்படக்கூடும். உதிரப்போக்கு ஏற்பட்டவுடனேயே அது குழந்தையை பாதித்திருக்கும் என்று தான் பலரும் பயப்படுகிறார்கள்.

கரு கலைந்திருக்குமோ என்று அஞ்சாமல் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற்றிட வேண்டும்.

சிலருக்கு மாதவிடாய் ஆரம்பிப்பதற்கு முன்னரே இர்ரெகுலர் பீரியட் ஏற்படும்.

மன அழுத்தம் :

மன அழுத்தம் :

இன்றைய வாழ்க்கை முறை மாற்றத்தினால் யாவருக்கும் மன அழுத்தம் என்பது சர்வ சாதரண விஷயமாகி விட்டது. மன அழுத்தம் அதிகமானால் கூட பெண்கள் சிலருக்கு உதிரப்போக்கு ஏற்படுவதுண்டு.

முறையற்ற மாதவிடாய்க்கு அடிப்படை காரணியாக இந்த மன அழுத்தம் தான் சொல்லப்படுகிறது.

நிவாரணம் :

நிவாரணம் :

முறையற்ற உதிரப்போக்கினை புதிதாக ஏதேனும் மாத்திரை சாப்பிட்டு நிவர்த்தி செய்ய முடியாது. இது ஹார்மோன் மாற்றத்தால் ஏற்படக்கூடிய ஒரு உடலியல் மாற்றம். தானாகவே சரி செய்யும். அப்படிச் சரியாக நீங்கள் சில முன்னேற்பாடுகளை செய்யலாம்.

செய்ய வேண்டியவை :

செய்ய வேண்டியவை :

அதீத உடல் எடை கொண்டுள்ள பெண்களுக்கு கூட உதிரப்போக்கு பிரச்சனை ஏற்பட அதிக வாய்ப்புண்டு என்பதால் உடல் எடையை அவசியம் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.மெனோபாஸ் காலத்தில் கூட உங்களுக்கு இது சிக்கலை ஏற்படுத்தும்.

ஆஸ்ப்ரின் :

ஆஸ்ப்ரின் :

ஆஸ்ப்ரின் மாத்திரை தொடர்ந்து எடுத்துக் கொள்கிறவர்களாக இருந்தால் அதனை கட்டுபடுத்துங்கள். ஏனென்றால் ஆஸ்ப்ரின் மாத்திரைக்கு உங்கள் ரத்தத்தின் அடர்த்தியை குறைக்கும் ஆற்றல் இருக்கிறது. இதனால் முறையற்ற உதிரப்போக்கு ஏற்படக்கூடும்.இவை எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை முறை தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Bleeding After Your Period Days.

Bleeding After Your Period Days.
Story first published: Monday, January 1, 2018, 18:20 [IST]