For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெண்களின் அழகிற்கும், ஆரோக்கியத்திற்கும் அவசியமான வைட்டமின்கள்

பெண்களின் ஆரோக்கியத்திற்கு வைட்டமின்கள் மிகவும் அவசியமானவை. அந்த வைட்டமின்கள் போதுமான அளவு கிடைக்காத போது அது அவர்களின் ஆரோக்கியத்தில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும்.

|

பெண்களின் ஆரோக்கியத்திற்கு வைட்டமின்கள் மிகவும் அவசியமானவை. அந்த வைட்டமின்கள் போதுமான அளவு கிடைக்காத போது அது அவர்களின் ஆரோக்கியத்தில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி பெண்களின் அழகை பேணிக்காப்பதிலும் சில வைட்டமின்கள் முக்கியப்பங்கு வகிக்கிறது. வைட்டமின்கள் பெரும்பாலும் சத்தான உணவுகளில் இருந்து கிடைக்கிறது, சில சமயங்களில் மாத்திரைகள் மூலமாகவும் கிடைக்கிறது.

best vitamins for women for better health

மாத்திரைகளை காட்டிலும் இயற்கையாக கிடைக்கும் வைட்டமின்கள் பெண்களுக்கு தேவையான ஆற்றலை அதிகம் வழங்குகிறது. வைட்டமின் குறைபாடு பெண்களின் கருவுறுதல் மற்றும் மாதவிடாயில் கூட பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். பெண்களுக்கு தேவையான வைட்டமின்கள் என்னென்ன அதன் பலன்கள் என்னென்ன என்பதை இங்கு பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் ஏ

பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் ஏ

நமது உடல் பீட்டா கரோட்டினை வைட்டமின் ஏ வாக மாற்றக்கூடியது. இது மென்மையான சருமம், மென்மையான திசுக்கள் மற்றும் பார்வைத்திறனுக்கு இது மிகவும் அவசியமானது. தக்காளி, கீரைகள், மிளகு, பூசணிக்காய், பப்பாளி கேரட், மீன் போன்ற உணவுகளில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. ஆனால் இது அதிகமாக உடலில் சேர்வது பெண்களுக்கு எலும்பு முறிவு மற்றும் மாதவிடாய் கோளாறு போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

வைட்டமின் சி

வைட்டமின் சி

வைட்டமின் சி அல்லது அஷ்கார்பிக் அமிலம் இது ஆரோக்கியத்திற்கு முக்கியமான இரத்த சிவப்பு அணுக்களின் உற்பத்திக்கு அவசியமானது. மேலும் காயங்களை குணப்படுத்த, மூளையின் ஆரோக்கியத்திற்கு அவசியமான நோரடரீனலின் உற்பத்தி மற்றும் நமது எச்சரிக்கை உணர்வை அதிகரிக்கிறது. தக்காளி, ஸ்ட்ராபெரி, உருளைக்கிழங்கு, ஆரஞ்சு, திராட்சை போன்றவற்றில் வைட்டமின் சி அதிகம் உள்ளது.

வைட்டமின் ஈ

வைட்டமின் ஈ

வைட்டமின் ஈ அல்லது டோகோபெரோல் வயதாவதை தள்ளிப்போடக்கூடிய ஆற்றலுடையது, மேலும் செல்களை ஆரோக்கியமாக பராமரிக்க கூடியது. ஆனால் இதன் அளவுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். ஏனெனில் இதன் அளவு அதிகரிக்கும்போது அது பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். இதனை சூரியகாந்தி விதைகள், பீனட் பட்டர், சோள எண்ணெய் போன்ற பொருள்களில் இருந்து இதனை பெறலாம்.

வைட்டமின் பி

வைட்டமின் பி

பி12 வைட்டமின் மற்றும் பி6 வைட்டமின் இரண்டும் பெண்களுக்கு மிகவும் அவசியமானது. வைட்டமின் பி6 மூளையை நன்றாக செயல்பட முக்கியமானது. ஓட்ஸ், இறைச்சி, அவகேடோ, வாழைப்பழம் போன்றவற்றில் வைட்டமின் பி6 அதிகமுள்ளது. வைட்டமின் பி12 இரத்த சிவப்பு அணுக்கள் உற்பத்தியை அதிகரிப்பதுடன் வளர்ச்சிதை மாற்றத்தையும் ஊக்குவிக்கிறது. தயிர், பால், இறைச்சி, வெண்ணெய் போன்ற உணவுகளில் வைட்டமின் பி12 அதிகம் உள்ளது.

MOST READ:இரத்தம் கலந்து வெளிவரும் தாய்ப்பாலை குடித்தால் குழந்தைகள் இறந்து விடுமா?

வைட்டமின் டி

வைட்டமின் டி

30 வயதை கடந்த பெண்களுக்கு வைட்டமின் டி மிகவும் அவசியமான ஒன்று. அதேசமயம் கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு தேவையான வைட்டமினும் இதுதான். எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும், எலும்பு முறிவை தடுப்பதற்கும் வைட்டமின் டி முக்கியமானது. மீன், முட்டை, பீட்ரூட் போன்றவற்றில் வைட்டமின் டி அதிகமுள்ளது. உங்கள் உடலில் வைட்டமின் டி குறைபாடு உள்ளதா என்பதை அடிக்கடி சோதித்து பார்க்க வேண்டியது அவசியம். பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் பிரச்சினைகளை குணப்படுத்தவும் வைட்டமின் டி அவசியம். வைட்டமின்களின் முக்கியத்துவங்கள் பற்றி கீழே பார்க்கலாம்.

எலும்புகளின் ஆரோக்கியம்

எலும்புகளின் ஆரோக்கியம்

எலும்புகளின் ஆரோக்கியத்தை அதிகரிக்க வைட்டமின்களை எடுத்துக்கொள்வது அவசியம். பெரும்பாலான பெண்கள் அவர்கள் உணவில் வைட்டமின் டி, வைட்டமின் சி மற்றும் கால்சியத்தை சேர்த்துக்கொள்வதில்லை. இது அவர்களுக்கு ஆஸ்டோப்ரோசிஸ் ஏற்படும் வாய்ப்புகளை அதிகரிக்கிறது. வைட்டமின் சி மற்றும் டி இரண்டும் அதிகளவில் சேர்த்துக்கொள்ளும்போது அது உடலின் கால்சியம் உறிஞ்சும் அளவை அதிகரிக்கிறது.

மனஅழுத்தத்தை குறைக்கிறது

மனஅழுத்தத்தை குறைக்கிறது

உங்கள் உடல் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கப்பட்டிருக்கும் போது உங்களின் மனஅழுத்தம் அதிகரிக்கும். இதற்கு வைட்டமின் பற்றாக்குறையும் ஒரு காரணமாகும். வைட்டமின்கள் உங்கள் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குவதுடன் வளர்ச்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கிறது. மேலும் இது மனஅழுத்தத்தை உருவாக்கும் கார்டிசால் ஹார்மோனின் சுரப்பை குறைப்பதுடன் நோயெதிர்ப்பு மண்டலத்தையும் பலப்படுத்துகிறது.மேலும் ஹார்மோன் சமநிலையின்மையையும் சரிசெய்கிறது.

தசைகளின் இயக்கம்

தசைகளின் இயக்கம்

வைட்டமின்கள் தசைகளின் இயக்கத்திற்கும், அவை குணமடையும் வாய்ப்பையும் அதிகரிக்கக்கூடியது. வாரம் குறைந்தது மூன்று முறை தீவிர உடற்பயிற்சியில் ஈடுபடுவது உடலுக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுப்பொருட்களை வழங்குகிறது. மேலும் தசைகள் சிறப்பாக செயல்பட வைட்டமின்களின் தேவை அவசியமானது.

MOST READ:பெண்கள் பற்றி இதுவரை நீங்கள் அறியாத ஆச்சரியமான தகவல்கள்

மூளை ஆரோக்கியம்

மூளை ஆரோக்கியம்

வீடு, அலுவலகம், குழந்தைகள் என அனைத்தையும் நிர்வகிக்க பெண்களுக்கு புத்திகூர்மை அதிகமாக இருக்கவேண்டியது அவசியம். மூளை செயல்பாடு மற்றும் மனஆரோக்கியத்திற்கு அயோடின், ஜிங்க், வைட்டமின் ஈ, பி6 மற்றும் போலிக் அமிலம் அவசியம். இந்த ஊட்டச்சத்துக்களை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வது உங்கள் மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கும்.

சரும ஆரோக்கியம்

சரும ஆரோக்கியம்

வைட்டமின்கள் சருமத்தின் நெகிழ்வுத்தன்மைக்கு தேவையானவை, சருமத்தை மென்மையாகவும், ஆரோக்கியமாகவும் மாற்ற வைட்டமின்கள் அவசியம். நீங்கள் இளமையாக இருக்க விரும்பினால் உணவில் வைட்டமின் ஈ உணவில் அதிகம் இருக்க வேண்டும்.

மாதவிடாய் சுழற்சி

மாதவிடாய் சுழற்சி

வைட்டமின் பி6 மற்றும் ஜிங்க் இந்த இரண்டும் வலிமிகுந்த மாதவிடாய் மற்றும் மாதவிடாயின் அசௌகரியமான அறிகுறிகளை தடுக்கக்கூடியது என்று ஆய்வுமுடிவுகள் கூறுகிறது. மேலும் இது சீரான மாதவிடாய் சுழற்சியை பரமரிக்க உதவுகிறது. உடலில் வைட்டமின் குறைபாடு ஏற்படுவது எடை அதிகரிக்க காரணமாகும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

MOST READ:இத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

best vitamins for women for better health

A majority of women even the healthy ones, are still missing many important nutrients like vitamin B1, iodine, folic acid, and iron.
Story first published: Wednesday, October 17, 2018, 18:01 [IST]
Desktop Bottom Promotion