Latest Updates
-
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும்
இந்த பொருட்களில் ஏதாவது ஒன்றை காலை உணவில் சேர்த்துக்கொள்வது உங்கள் ஆரோக்கியத்தை இரட்டிப்பாக்கும்
ஆரோக்கியமில்லாத காலை உணவை உண்பது உங்களுக்கு எந்தவித நன்மையையும் வழங்கப்போவதில்லை. எனவே ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவதில் உறுதியாக இருங்கள்.
காலை உணவு என்பது ஒருவரின் ஒட்டுமொத்த ஆரோக்கியாயத்திற்கும் மிகவும் மிக முக்கியமான ஒன்றாகும். காலை உணவை தவிர்ப்பது அன்றைய நாள் முழுவதும் உங்களின் செயல்பாடுகளை பாதிக்கும். எனவே காலை உணவை ஒருபோதும் தவிர்த்துவிடாதீர்கள். இந்த சூழ்நிலையில் நீங்கள் சாப்பிடும் காலை உணவு ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம்.

ஏனெனில் ஆரோக்கியமில்லாத காலை உணவை உண்பது உங்களுக்கு எந்தவித நன்மையையும் வழங்கப்போவதில்லை. எனவே ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவதில் உறுதியாக இருங்கள். இந்த பதிவில் நீங்கள் சாப்பிடும் எந்தெந்த காலை உணவுகள் உங்களுக்கு அதிக ஆற்றலையும், ஊட்டச்சத்துக்களையும் வழங்கும் என்று பார்க்கலாம்.

க்ரீக் தயிர்
இந்த தயிரில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உங்களின் ஒட்டுமொத்த வளர்சிதை மாற்றத்தை இயற்கை முறையில் அதிகரிக்க உதவும். இதில் அதிகமாக உள்ள கால்சியம் மற்றும் அமிலங்கள் உங்கள் குடல் ஆரோக்கியம், பசியை கட்டுப்படுத்துவுது, சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது போன்ற செயல்களை செய்கிறது. இந்த தயிரை முடிந்தளவு உங்கள் காலை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

ஓட்ஸ்
காலை உணவிற்கு ஓட்ஸ் ஒரு மிகச்சிறந்த தேர்வாகும். ஏனெனில் இதில் குறைந்தளவே க்ளெசமிக் உள்ளது. இதில் உள்ள அதிகளவு நார்ச்சத்துக்கள் உங்களுக்கு நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்க செய்கிறது மேலும் இதில் குறைந்தளவே கொழுப்பு உள்ளது. இதனை தயிருடன் சேர்த்தோ அல்லது சிறிதளவு புரோட்டின் பவுடருடன் சேர்த்தோ சாப்பிடுங்கள்.

முட்டை
உங்களின் சிறப்பான வளர்ச்சிதை மாற்றத்திற்கு முட்டை மிகச்சிறந்த தேர்வாகும். இதில் சரியான அளவில் புரோட்டின்களும், ஒமேகா 3 அமிலங்களும், வைட்டமின் பி மற்றும் அமினோ அமிலம் உள்ளது. ஆய்வுகளின் படி காலை உணவில் முட்டை சேர்த்துக்கொள்வது உங்கள் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதுடன் இன்சுலின் அளவையும் சீராக வைத்திருக்க உதவுகிறது.

காபி
உங்களின் வளர்ச்சிதை மாற்றத்திற்கு காபி அவசியமான ஒன்றாகும். அதிகளவு காபி குடிப்பது உங்களுக்கு சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம். ஆனால் குறிப்பிட்ட அளவிலான காபி குடிப்பது உங்களுக்கு நன்மைகளை வழங்கக்கூடியது. உங்கள் மனநிலையை மாற்றக்கூடிய இந்த காபி உங்கள் உடலில் கலோரிகளை எரிப்பதுடன் உங்கள் ஆரோக்கியத்தின் அளவை அதிகரிக்கக்கூடும்.

பாலாடைக்கட்டி
பாலாடைக்கட்டி புரோட்டின்களின் சுரங்கமாகும். இது உங்களின் பசியை நீண்ட நேரத்திற்கு கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும். பாலடைக்கட்டியுடன் சில தானியங்களை சேர்த்து சாப்பிடுவது மிகச்சிறந்த காலை உணவாகும்.

ப்ரோக்கோலி
பல ஆய்வுகளின் படி ப்ரோக்கோலி சர்க்கரை அளவை குறைக்கவும், அசாதாரண வளர்ச்சிதை மாற்றத்தை சரிசெய்யவும் பயன்படுகிறது. இதை ஓட்ஸ் அல்லது தயிருடன் சேர்த்து சாப்பிடுங்கள்.

பெர்ரீஸ்
பெர்ரீஸ் வகைகளான ப்ளூபெர்ரீ, ப்ளாக்பெர்ரீ, ராஸ்பெர்ரீ போன்ற பழங்களை காலையில் சாப்பிடுவது நல்லது. இது உங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்க உதவும். ஓட்ஸுடன் சேர்த்தோ அல்லது தயிரில் கலந்தோ இவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

வாழைப்பழம்
வாழைப்பழத்தில் உள்ள ஸ்டார்ச்சு மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் உங்களுக்கு பசி ஏற்படாமல் நீண்ட நேரம் கட்டுப்படுத்தும். இதில் உள்ள அதிகளவு பொட்டாசியம் உங்கள் உடலில் உள்ள ஊட்டச்சத்துக்களை செல்களுக்கு கடத்த உதவுகிறது. இது உங்கள் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும்.



Click it and Unblock the Notifications