30 வயதைத் தாண்டப் போகிறவரா நீங்கள்? இது உங்களுக்காகத்தான்...

30 வயதைக் கடந்து 40 வயதை நெருங்குகின்ற பொழுது, என்னென்ன மாதிரியான மாற்றங்கள் உண்டாகும் என்று இங்கே விவாதித்திருக்கிறோம்.

உடம்பினுடைய நடுப்பகுதி வயிறு என்பது போல, முப்பது வயதைக் கடந்து நாற்பதைத் தொடுவது தான் வாழ்க்கையினுடைய நடுப்பகுதி. இந்த முப்பது, நாற்பது வயதுகளில் நீங்கள் எப்படி இருப்பீர்களோ அப்படித்தான் நீங்கள் இறுதி வரையிலும் இருப்பீர்கள்.

are you crossing the age of 30. be aware this

அதனால் கீழ்க்கண்ட சில விஷயங்களை மனதில் வைத்து நடந்து கொள்ளுங்கள். வாழ்க்கை இறுதி வரையிலும் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தொப்பை

தொப்பை

முப்பதைத் தாண்டி, நாப்பதுகளில் நிச்சயம் தொப்பை கனக்கும்படி வளர்த்து விடாதீர்கள். அதனால் உங்களுக்கு வீண் தொந்தரவுகள் வரும். அதனால் தேவையில்லாமல் தொப்பையை வளர விடாமல், அதில் உள்ள கொழுப்பைக் கரைக்க முயற்சி செய்யுங்கள்.

மன அழுத்தம்

மன அழுத்தம்

முப்பது வயதைத் தாண்டி நாற்பதுகளில் வாழ்க்கை மீதான அழுத்தம், அடுத்த கட்டமாக என்ன செய்யப் போகிறோம் என்ற தேடல் ஆகியவை அதிகரித்துக் கொண்டே தான் செல்லும். அதனால் மன அழுத்தங்கள் ஏற்பட்டாலும் அதை சரிசெய்யும் வழிகளை முதலில் கண்டடையுங்கள். நாற்பதுக்கு மேல் மனம் கனக்க விட்டால், மரணம் நேரும். அதனால் தேவையில்லாத மனக்குழப்பங்களைத் தூக்கி எறியுங்கள்.

ஆரோக்கியம்

ஆரோக்கியம்

ஒரு மனிதன் தன்னுடைய வாழ்க்கையில் வியாதியுடன் வாழப் போகிறானா இல்லை வீரியத்துடன் வாழப் போகிறானா அல்லது நெஞ்சம் நிறைவோடு வாழப் போகிறானா என்பதைத் தீர்மானிக்கின்ற வயதே இந்த நாற்பதுகள் தான். இந்த 30 வயதைத் தாண்டிய பின் தான் முழு ஆரோக்கியத்துடன் நெஞ்சம் நிறைவாக வாழ்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

பயமும் கவலையும்

பயமும் கவலையும்

உடல் உழைப்பை செலுத்தி நாம் எவ்வளவு வுலை செய்தாலும் அதன்மூலம் பெரிதாக நாம் நிம்மதியை இறந்துவிடப் போவதில்லை. உடம்பு வெறும் உடல் உழைப்பு, வேலையில் மட்டும் உடல் உருக்குலைவதில்லை. நமக்கு என்ன நடக்குமோ என்ற பயமும் கவலையும் தான் மிக அதிகமாக உங்களுடைய மனதையும் உடலையும் பாதிக்கும். எந்த கஷ்டமாக இருந்தாலும் அது உடல் அளவில் இருப்பதை விட மனதுக்குள் போய் முழுதாக அழுத்தும் போதுதான் அந்த மனிதன் முழுதாக நொறுங்கிவிடும்.

கோபம் வேண்டாம்

கோபம் வேண்டாம்

பொதுவாக எதிர்காலம் பற்றி கலவையும் முயற்சியும் அதிகமாகும் போது தான் மனதுக்குள் மிக அதிகப்படியான கோபம், பரபரப்பு ஆகிய அத்தனையும் உண்டாகும். அதனால் முப்பது வயதைத் தாண்டி, நாற்பது வயதை நோக்கி போகின்ற பொழுது, பரபரப்பின்றிச் செயல்படுங்கள். எந்த செயலாக இருந்தாலும் கோபப்படாமல் நடந்து கொள்ளுங்கள். எந்த காரியமாக இருந்தாலும் அதில் கொஞ்சம் நிதானமாக நடந்து கொள்ளுங்கள். எதிலும் ஆரவாரம் காட்டாதீர்கள். அலட்டிக் கொள்ளாதீர்கள். உங்களுக்கு இருக்கின்ற பொறுப்புகளைச் சீராக நிறைவேற்ற முயற்சி செய்யுங்கள்.

தூக்கம்

தூக்கம்

இந்த வயதில் உடல் மற்றும் மனதளவில் சில பிரச்னைகள் இருக்கும். அதனால் மனதுக்குள் அவசியமற்ற சுமைகளை மனதுக்குள் போட்டுக் கொள்ளாதீர்கள். அவ்வப்போது அடிக்கடி ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். தினசரி மதிய உணவுக்குப் பின் சின்னதான ஒரு குட்டித் தூக்கம் போடுங்கள். இரவு பன்னிரண்டு மணிக்கு மேல் எக்காரணத்தை முன்னிட்டும் விழித்திருக்கக் கூடாது. பத்து மணிக்கே படுத்துவிடுவது தான் சரி. அதிகாலையில் நீங்கள் எழுந்து கொள்ளுங்கள். மனம் தளர்ந்து விடாமல் தினந்தோறும் கடவுளை வழிபடுங்கள். இன்று முழுவதும் நீ என்னை நல்வழிப்படுத்தினாய். என்னைத் தொடர்ந்து நீ வழி நடத்த வேண்டும் என்று மனதுக்குள் நினைத்துக் கொள்ளுங்கள்.

முக மலர்ச்சி

முக மலர்ச்சி

எப்போதும் முகத்தை மலர்ச்சியுடன் வைத்திருங்கள். யாரிடமும் தேவையற்ற கோபம், முகம் கடுகடுப்பு, சிடுசிடுப்பைக் காட்டாதீர்கள். மனதுக்குள் டென்ஷன் இல்லாமல் இருங்கள். மனதுக்குள் ஸ்டிரெஸ் இல்லாமல் மன அமைதியுடன் நிம்மதியுடன் இருங்கள். அதனால் கவலையைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிவிடுங்கள். முடிந்தவரையில், அடுத்தவர்களுக்கு உதவி செய்யுங்கள். ஒருபோதும் கெடுதல் நினைக்காதீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion