Latest Updates
-
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்..
எச்சரிக்கை !இந்த இடங்களில் அரிப்பது உங்களுக்கு மோசமான நோய்கள் உள்ளதற்கான அறிகுறிகளாகும்
அரிப்பு என்பது சரும பாதிப்புக்கு மட்டுமின்றி உடலின் பல உறுப்புகளில் ஏற்படும் பாதிப்புகளுக்கும் இது அறிகுறியாக இருக்க வாய்ப்புள்ளது.
நமது சருமத்தில் அரிப்பு ஏற்படுவது சாதாரணமான ஒன்றுதான். பொதுவாக சருமத்தில் அரிப்புகள் ஏற்பட உலர் சருமம், சில அலர்ஜிகள், பூச்சிக்கடிகள் போன்று பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் தொடர்ச்சியான நாள்பட்ட அரிப்பு இருப்பது சாதரணமான பிரச்சினை அல்ல. ஏனெனில் தொடர்ச்சியாக அரிப்பு ஏற்படுவது பல மோசமான நோய்களுக்கு அறிகுறியாக கூட இருக்கலாம்.

உண்மைதான் அரிப்பு என்பது சரும பாதிப்புக்கு மட்டுமின்றி உடலின் பல உறுப்புகளில் ஏற்படும் பாதிப்புகளுக்கும் இது அறிகுறியாக இருக்க வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுகி சோதனைகள் செய்துகொள்ள வேண்டியது அவசியம். இந்த பதிவில் தொடர்ச்சியான அரிப்பு எந்தெந்த நோய்களுக்கான அறிகுறியாக இருக்கலாம் என்பதை பார்க்கலாம்.

சிறுநீரக நோய்
சிறுநீரக பாதிப்போ அல்லது சிறுநீரக செயலிழப்போ இறுதி கட்டத்தில் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் உள்ள பகுதியில் தொடர்ச்சியான அரிப்பு இருக்கும். ஆய்வின் படி டயாலிசிஸ் சிகிச்சை எடுத்துக்கொள்பவர்களில் 42 சதவீதத்தினருக்கு அதீத அரிப்பு இருக்கும். இதற்கு காரணம் சிறுநீரக பாதிப்பால் உங்கள் உடலில் உள்ள நச்சுப்பொருட்கள் வெளியேற முடியாமல் தவிப்பதால் அதன் பக்க விளைவாக அரிப்பு ஏற்படுகிறது.

கல்லீரல் நோய்
உடல் முழுவதும் அரிப்பது கல்லீரல் நோய்க்கான மறைமுக அறிகுறியாகும். உங்கள் கல்லீரல் சரியாக செய்லபடவில்லை என்றால் உங்கள் உடலில் உள்ள பித்த அமிலங்களின் அளவு அதிகரிக்கும். இதற்கு சரியான நேரத்தில் மருந்துகள் எடுத்துக்கொள்வது பித்த அமிலத்தின் அளவை குறைக்க உதவும்.

டெர்மாடோக்ராபியா
உங்கள் சருமத்தில் அரிக்கும் போது சொரிந்த சில நிமிடத்தில் சிவப்பு நிற புள்ளிகள் தோன்றினால் உங்களுக்கு டெர்மாடோக்ராபியா நோய் இருக்க வாய்ப்புள்ளது. இதற்கு காரணம் உங்கள் சருமம் அதிகளவு ஹிஸ்டமைன் ஹார்மோனை வெளியிடுவதுதான் காரணம். இந்த குறைபாடு உடலின் எந்த பாகத்தில் வேண்டுமென்றாலும் ஏற்படலாம். இதனை எளிதில் சரிசெய்து விடலாம் ஆனால் சரியான நேரத்தில் குணப்படுத்தாவிட்டால் சருமத்தில் வீக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

முதுகெலும்பு நோய்
முதுகின் மேற்புறத்தின் மீது தொடர்ந்து அரிப்பு ஏற்பட்டால் அது நரம்பு மண்டல செயலிழப்பின் அறிகுறியாகும். முதுகெலும்பில் ஏற்படும் காயமோ அல்லது வயதாவதாலோ நரம்பு மண்டலத்தின் மீது அழுத்தத்தை உண்டாக்கும். இதன் விளைவாக உங்கள் சருமத்தின் மேற்புறத்தில் அரிப்பு ஏற்படும். இது நரம்பு தளர்ச்சி அல்லது பக்கவாதத்திற்கான அறிகுறியாக கூட இருக்கலாம். இந்த வாதம் உடலின் ஒருபுறமோ அல்லது இரண்டு புறமும் ஏற்படலாம்.

செலியாக் நோய்
கைமுட்டி, கால்முட்டிகள் போன்ற இடங்களில் அதிக அரிப்பு ஏற்படுவது செலியாக் நோயின் அறிகுறியாக கூட இருக்கலாம். செழிக்க நோய் உள்ளவர்கள் க்ளுட்டினை சேர்த்துக்கொள்ளும்போது உங்கள் நோயெதிர்ப்பு மண்டலம் இம்முனோக்ளோபாலின் என்னும் வேதிப்பொருளை சுரக்கிறது. இந்த இம்முனோகுளோபின் இரத்த ஓட்டத்தில் கலக்கும்போது அது அரிக்கும் உணர்வை ஏற்படுத்துகிறது.

லிம்போமா
இரத்தம் தொடர்பான கோளாறுகளில் முக்கியமானது லிம்போமா நோயாகும். தடிப்புகள் கூடிய அல்லது தடிப்புகள் இல்லாத எந்த அரிப்பாக இருந்தாலும் அது ஹாடகின்ஸ் நோயின் அறிகுறியாக இருக்க வாய்ப்புள்ளது. இது உங்கள் மார்பக பகுதியில் ஏற்படும் பாதிப்பாகும். உங்களுக்கு இந்த நோய் இருப்பது உறுதிசெய்யப்பட்டால் கீமோதெரபி மூலம் சிகிச்சை அளிக்கப்படும்.

தைராய்டு
தைராய்டு நோயானது அதிகப்படியான செயல்திறனுடன் இருந்தாலும் சரி, செயல்திறன் அற்றதாக இருந்தாலும் சரி அது உங்கள் சருமத்தின் மீது பாதிப்பை ஏற்படுத்தும். இந்த இணைப்பு பலரும் அறியாத ஒன்று, ஆனால் வியர்வை சுரப்பிகள் உங்கள் சருமத்தின் மீது பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். ஹைப்போதைராய்டு உள்ளவர்களுக்கு பெரும்பாலும் சருமம் வறட்சியாகவே இருக்கும்.

மாதவிடாய்
பெண்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டவுடன் அவர்கள் தோற்றத்தில் பல மாற்றங்களை பார்க்கலாம், குறிப்பாக அவர்கள் சருமம் வறட்சியாக காணப்படும். ஈஸ்ட்ரோஜனின் அளவு குறையும்போது கொலாஜெனின் உற்பத்திக்கு காரணமான அமைப்பு பாதிக்கப்படுவதால் அதனால் சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைத்துக்கொள்ள இயலாது. கற்றாழை சாறு அல்லது கொலாஜென் ஜெல்லை பயன்படுத்தி இந்த ஈரப்பத இழப்பை சரிசெய்யலாம்.

மார்பக புற்றுநோய்
மார்பக காம்புகளில் ஏற்படும் பேஜட் நோயானது மார்பக புற்றுநோயின் முக்கியமான அறிகுறியாகும். மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 10 சதவீதத்திற்கு மேலானவர்கள் இந்த பேஜட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதன் முதல் அறிகுறி மார்பக காம்புகளை சுற்றி அரிப்பது, தடிப்புகள் ஏற்படுவது, சிவப்புநிற புள்ளிகள் தோன்றுவது போன்றவையாகும். இது சிலசமயம் இரத்தசோகையின் அறிகுறியென தவறாக கணக்கிடப்படுகிறது, ஆனால் இது மார்பக புற்றுநோயின் முக்கிய அறிகுறியாகும்.



Click it and Unblock the Notifications