Latest Updates
-
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா?
காலில் வரும் சேற்றுப்புண்ணை எப்படி சரிசெய்யறதுன்னே தெரியலையா? இத செய்ங்க...
மழைக்காலத்தில் காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் நமது சருமமும் எப்பொழுதும் ஈரப்பதத்துடனே காணப்படும். இதனால் எளிதாக பூஞ்சை தொற்று ஏற்பட்டு அவதி ஏற்படும். எனவே இதை தடுக்க சில எளிய இயற்கை வழிகள் உள்ளன
இந்த மழைக்காலத்தில் எல்லாரும் அனுபவிக்கும் ஒரு மிகப்பெரிய பிரச்சனை என்றால் அது இந்த பூஞ்சை தொற்று தான்.

காரணம் இந்த கால கட்டத்தில் காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் நமது சருமமும் எப்பொழுதும் ஈரப்பதத்துடனே காணப்படும். இதனால் எளிதாக பூஞ்சை தொற்று ஏற்பட்டு அவதி ஏற்படும். எனவே இதை தடுக்க சில எளிய இயற்கை வழிகள் உள்ளன. அதைப் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

வறண்ட சருமம்
மழைக்காலத்தில் முடிந்த வரை உங்கள் சருமத்தை வறண்ட நிலையில் வைத்துக் கொள்ளுங்கள். பாதங்களில் அதிகப்படியான ஈரப்பதம் இருக்கும் போது எளிதாக பாக்டீரியா தொற்று ஏற்பட்டு விடும். எனவே உங்கள் பாதங்களை நன்றாக தண்ணீர் கொண்டு கழுவி சுத்தம் செய்து ஒரு டவலை கொண்டு உலர்த்தி வைத்துக் கொள்ளுங்கள். இதே மாதிரி உங்கள் கைகளையும் பராமரிப்பது முக்கியம். வீட்டு வேலைகளை செய்யும் போது அடிக்கடி தண்ணீர் பழங்குவதால் டவலை கொண்டு கைகளை துடைத்துக் கொண்டே இருங்கள்.

பவுடர் போடுங்கள்
இந்த மழைக்காலத்தில் அதிகப்படியான ஈரப்பதம் வியர்வை எல்லாம் சேர்ந்து பாதங்களை ஈரப்பதமாக வைத்திருக்கும்.இறுக்கமான காலணிகளை அணியும் போது வியர்வையால் பாக்டீரியா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே ஷூ போன்றவற்றை அணிவதற்கு முன் உங்கள் பாதங்களிலும் காலணிகளிலும் பவுடர் போட்டு கொள்ளுங்கள். இவை காலில் உள்ள அதிகப்படியான ஈரப்பதத்தை உறிஞ்சி பாக்டீரியா தொற்றிலிருந்து உங்களை காக்கும்.

வாட்டர் ப்ரூவ் காலணிகள்
மழைக்காலத்தில் தண்ணீரால் பாதிக்காத வாட்டர் ப்ரூவ் காலணிகளை தேர்ந்தெடுங்கள். தண்ணீர் புகாத பாலிவினைல் குளோரைடு பொருளால் ஆக்கப்பட்ட காலணிகளை தேர்ந்தெடுங்கள். நல்ல காற்றோட்டமான காலணிகளை அணியும் போது வியர்வை இல்லாமல் பாக்டீரியா தொற்று இல்லாமல் பாதங்களை காக்கலாம்.

டீ ட்ரி ஆயில்
சரும தொற்றை போக்குவதில் டீ ட்ரி ஆயில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே இதை பாதங்களில் தடவி வரும் போது தொற்று களுக்கு எதிராக செயல்பட்டு நிவாரணம் அளிக்கிறது. ஆனால் கவனமாக சரியான அளவில் பயன்படுத்துங்கள்.

பேக்கிங் பவுடர்
உங்கள் சரும தொற்றை போக்குவதில் பேக்கிங் பவுடரும் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே பேக்கிங் பவுடர் மற்றும் தண்ணீர் சேர்த்து பேஸ்ட்டாக்கி கொள்ளவும். இந்த பேஸ்ட்டை சருமத்தில் தடவி உலர விடவும். பிறகு தண்ணீரை கொண்டு கழுவி டவலை கொண்டு உலர்த்த வேண்டும். இவையும் சரும தொற்றுகளை குணப்படுத்துகிறது.

வினிகர்
வினிகர் இவையும் பூஞ்சை தொற்றிற்கு எதிராக செயல்படுகிறது. சருமத்தில் உள்ள அதிகப்படியான மாய்ஸ்சரைசரை உறிஞ்சி பாக்டீரியா தொற்று ஏற்படாமல் தடுக்கிறது. முதலில் உங்கள் தொற்று இயற்கையாகவே காய்ந்து ஆறும் வரை காத்திருந்து செயல்படுங்கள். இது மேலும் மேலும் தொற்று பரவாமல் தடுக்க உதவும்



Click it and Unblock the Notifications
