Latest Updates
-
வார ராசிபலன் (19 April 2026 - 25 April 2026) - இந்த வாரம் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்தில் கவனமா இருக்கணும்.. -
மட்டன் வாங்குனா.. ஒருடைம் இந்த செட்டிநாடு ஸ்டைல் மட்டன் சுக்கா செய்யுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
அடுத்தடுத்து நட்சத்திரத்தை மாற்றும் 3 கிரகங்கள்: இந்த 4 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது! -
வெயிலால் முகம் டல்லாகிடுச்சா? அப்ப 1 ஸ்பூன் அரிசி மாவு வெச்சு தினமும் நைட் இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. நீங்க அட்சய திருதியை நாளில் என்ன வாங்கணும்-ன்னு சொல்றோம். .. -
நாவூறும்.. சேலத்து மாங்காய் கறி - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணிப் பாருங்க.. -
Mango Benefits: மாம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளும்.. மாம்பழம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகளும்.. -
100 ஆண்டுகள் கழித்து அட்சய திருதியை அன்று உருவாகும் 5 ராஜயோகங்கள்: இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கபோகுது! -
ரவா இட்லியும், மல்லி சட்னியும் - சட்டுன்னு 15 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்! -
இன்றைய ராசிபலன் 18 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்
ஆண்களின் தாம்பத்திய உறவை சீர்குலைக்கும் 15 அன்றாட செயல்கள்..!
உலகின் தலை சிறந்தது எதுவென்று கேட்டால் அது நாம் வாயால் சொல்வதை விட அதனை நிகழ்த்தி காட்டுவதே. அதாவது "செயல்" தான் முதன்மையான ஒன்றாக என்றுமே இப்பூமியில் போற்றப்படுகிறது. நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு முக்கிய காரணம் இருக்க கூடும். குழந்தையாக பிறந்த போது செய்யும் செயலின் அர்த்தம் புரியாமல் செய்து வந்திருப்போம். காலம் போக போக, அவற்றின் புரிதல் அதிகம் ஆகி கொண்டே போகும்.

அந்த வகையில் நாம் திருமண பருவம் அடைந்தவுடன் நாம் செய்யும் செயல் நம் இணையை பாதிக்குமா, என்பதை நன்கு புரிந்து கொண்டு செய்தல் வேண்டும். ஏனெனில் அவை உங்கள் இல்லற வாழ்வை முற்றிலுமாக சீர்கேடு அடைய செய்து விடும். இந்த பதிவில் ஆண்களின் தாம்பத்திய வாழ்வை கெடுக்கும் 15 பழக்க வழக்கங்கள் பற்றி அறிந்து கொள்வோம்.

இல்லற வாழ்வு இனிதே..!
தனக்கு பிடித்தமானவரை தேர்வு செய்து, அவருடன் காதல் வயப்பட்டு இனிமையான வாழ்வை மேற்கொள்வதே மனித பிறப்பின் உன்னத நோக்கமாகும். அடுத்து அவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து புணரும் போது அற்புதமான நிகழ்வு நடைபெறும். அதாவது, இவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு உயிரை உயிர்ப்பிப்பது மிகவும் மகத்தான செயலாக இந்த பூமியில் கருதப்படுகிறது. இதுவே இல்லற வாழ்வின் முக்கிய அங்கமாகும்.

அதிக உப்பு, குறைந்த இன்பம்..!
பெரும்பாலான ஆண்கள் தங்களின் உணவில் அதிக உப்பை சேர்த்து கொள்கின்றனர். இது அவர்களின் ரத்தை அழுத்தத்தை உயர்த்தி, ஆணுறுப்பை பாதிக்கிறது. இதனால் அவர்களின் இணை இல்லற வாழ்வில் திருப்தி அடைய முடிவதில்லை. மேலும், அதிக உப்பு ஆண்களின் மன நிலையையும் பாதித்து விடுமாம்.

உறவை கெடுக்கும் உறக்கம்..!
இன்றைய நவீன உலக வாழ்வில் பலர் நிம்மதியான வாழ்வை மேற்கொள்வதில்லை. இதற்கு காரணம் அவர்களின் உணவு முறை, உறக்க முறை, இல்லற வாழ்வு போன்றவற்றை கூறலாம். ஆண்கள் போதுமான நேரம் தூங்கவில்லை என்றால், அவர்களின் உடலை பாதித்து விறைப்பு தன்மை போன்றவை ஏற்பட கூடும். இது இல்லற வாழ்வை பெரிதும் பாதிக்கும்.

நான் ரொம்ப பிசி..!
ஆண்கள் செய்யும் பல செயல்களில் இந்த ஒரு செயல் அவர்களின் இணையை அதிகம் பாதிக்கிறதாம். பெரும்பாலும், ஆண்கள் தங்கள் வேலைகளில் மிகவும் பிசியாக இருப்பதால் அவர்களின் இணையுடன் இருக்கும் நேரம் குறைகிறது. இது அவர்களின் புரிதலை குறைத்து, இல்லற வாழ்வை பெரிதும் பாதிக்குமாம்.

ஸ்மார்ட் போன் வேண்டாமே..!
இன்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஆட்டி படைத்து கொண்டிருப்பது ஸ்மார்ட் போன்கள் தான். நீங்கள் அதிக நேரம் ஸ்மார்ட் போனில் கவனம் செலுத்தினால் இது உங்கள் இணையுடன் உறவு முறிதலை ஏற்படுத்தும். மேலும், இன்பமான வாழ்வு நரகமாக மாற கூடும்.

ஜீன்ஸ் தரும் பாதிப்புகள்..!
பல ஆராய்ச்சிகளும் ஆண் மற்றும் பெண் இறுக்கமான உடைய அணிவதை தவிர்க்க வேண்டும் என்றே சொல்கிறது. குறிப்பாக ஜீன்ஸ் போன்ற உடைகளை இறுக்கமாக அணிவதால், அவர்களின் இல்லற வாழ்வை பாதிக்குமாம். சில சமயஙக்ளில் பிறப்புறுப்பில் தொற்றுகள் கூட உருவாக கூடும்.

விறைப்பு தன்மை தரும் ஜங்க்..!
ஆண்கள் வீட்டில் சாப்பிடும் உணவை விட வெளியில் சாப்பிடும் ஜங்க் ஃபூட்ஸே அதிகம். இது உங்களின் இல்லற வாழ்வில் எத்தகைய பாதிப்பை தரும் என்பதை நீங்கள் உணராமல் இருக்கிறீர்கள். ஜங்க் ஃபூட்ஸ் விறைப்பு தன்மையை ஏற்படுத்த கூடியது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். எனவே உங்கள் தாம்பத்திய உறவை இவை கெடுத்து விடும்.

மது, உறவுக்கு கேடு..!
பெண்களை விட ஆண்களே அதிகம் மது பழக்கத்திற்கு அடிமை ஆகியுள்ளனர். பொதுவாகவே மது பழக்கம் ஆரோக்கியமான உடல் நலத்தை தராது. மேலும், இது உளவியல் ரீதியாகவும் எண்ணற்ற பிரச்சினைகளை ஏற்படுத்த கூடும். ஆதலால், மது பழக்கம் பல்வேறு வகையில் உங்கள் இல்லற வாழ்வில் இடர்பாடுகளை ஏற்படுத்தும்.

மன அழுத்தம்...
வேலையில் உள்ள கோபங்களை பல ஆண்கள் வீட்டில் வந்து கொட்டி விடுகின்றனர். தனது இணையுடன் பகிந்து கொள்ளுதல் வேறு, இணையுடன் கோபமாக கத்துவது வேறு. இவ்வாறு அதிக மன அழுத்த நிலையில் நீங்கள் இருந்தால் கட்டாயம் தாம்பத்திய வாழ்வை கெடுத்துவிடும்.

குறட்டை செய்யும் பாடுகள்..!
பல வீடுகளில் குறட்டை விடுவதால் அன்றாடம் சண்டை நடக்க கூடும். இது உங்கள் இருவருக்கும் இடையில் ஒருவித விரிசலை ஏற்படுத்தும். காரணம் என்னவென்றால், ஆழ்ந்த தூக்கத்தில் உள்ள உங்கள் இணை, நீங்கள் விடும் குறட்டையால் கடுப்பாக நேரலாம். இதனை சரி செய்ய மருத்துவரை அணுகுங்கள் நண்பர்களே.

எப்போதும் ஒரே மாதிரியா..?
யாருக்காக இருந்தாலும் செய்த ஒரே செயலை மறுபடி மறுபடி செய்தால், நிச்சயம் எரிச்சலை தரும். அதே போன்றுதான், இல்லற வாழ்வில் இனிமையாய் என்றும் இருக்க ஆணும் பெண்ணும் புது புது விஷயங்களை பகிர்ந்து கொள்ளுதல் வேண்டும். அத்துடன் புதிய தாம்பத்திய முறையையும் கையாளுங்கள்.

உங்கள் இணையிற்கான நேரம்..!
பெரும்பாலும் பல விவாகரத்து பிரச்சினைகள் ஏற்பட காரணம், ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்ளாமலே இல்லற வாழ்வில் சேர்வதுதான். ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் முதலில் தங்கள் இணையுடன் புரிதலை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். இல்லையென்றால், இது பொய்யான இனிமையற்ற நினைவுகளையே தரும்.

புகை உறவுக்கும் பகை...!
யாராக இருந்தாலும் புகை பழக்கம் கட்டாயம் அவர்களின் தாம்பத்திய வாழ்வை முற்றிலுமாக கெடுத்து விடும் என மருத்துவர்களை கூறுகின்றனர். புகை பழக்கம் திருப்தியான இல்லற வாழ்வை தராதாம். மேலும், இருவருக்கும் பல வித உடல் கோளாறுகளை ஏற்படுத்தும்.

இதய கோளாறுகள்...
ஆண்களுக்கு இதயம் சார்ந்த பிரச்சினை இருந்தால் கட்டாயம் இல்லற வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்தும். இதய நோய்கள் வர காரணமாக இருப்பது சீரற்ற உணவுகளே. எனவே குறைந்த கரைய கூடிய கொழுப்புகள் கொண்ட உணவுகளை எடுத்து கொள்ளுங்கள்.

குழந்தைகளால் ஏற்படும் கசப்புகள்...!
பலர் குழந்தை பிறந்தவுடன் தனது இணையை கவனிக்காமல் இருப்பர். இது முற்றிலும் தவறே. நீங்கள் உங்கள் இணையுடன் சேரும்போது குழந்தைகளை அடுத்த அறையில் தூங்க வைத்து விடுங்கள். இல்லையேல் இது உங்கள் இருவரின் வாழ்வில் சற்றே கசப்பை ஏற்படுத்தும்.
இது போன்ற பயனுள்ள குறிப்புகளை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.



Click it and Unblock the Notifications











