காலையில் எழும் போது குடிக்கும் தண்ணீரால் உண்டாகும் நன்மைகள்

Posted By: R. SUGANTHI Rajalingam
Subscribe to Boldsky

நீர் என்பது நமது பூமியில இருக்கும் முக்கியமான மூலாதாரம் ஆகும். பூமியில் வசிக்கின்ற ஒவ்வொரு உயிர்களுக்கும் அவைகள் உயிர் வாழ நீர் மிகவும் அவசியம். சாப்பிட்ட பிறகோ அல்லது தாகம் எடுக்கும் போதோ நமது உடலுக்கு நீர் என்பது மிகவும் தேவை. நீங்கள் அதிக காரமான உணவுகளை உட்கொண்டால் கூட நாம் உடனே தேடுவது இந்த நீரைத் தான். அந்த அளவுக்கு இதன் அத்தியாவசியம் அவசியமானது.

நமது உடலில் 70-75 சதவீதம் வரை நீரால் ஆக்கப்பட்டுள்ளது. நமது உடலின் ஒவ்வொரு சீரான மெட்டா பாலிச செயலுக்கும் 15-20 நிமிடங்களுக்கு ஒரு முறை நீர் அருந்த வேண்டியுள்ளது.

உங்களுக்கு தெரியுமா ஐப்பானியர்கள் காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் தண்ணீர் அருந்துவதை பழக்கமாக கொண்டுள்ளனர். எனவே தான் அவர்கள் கச்சிதமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறார்கள். காலையில் வெறும் வயிற்றில் லேசான வெதுவெதுப்பான நீரை பருகுவதால் நமக்கு அப்படி என்ன நன்மை கிடைக்கிறது.

காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்கும் போது இரவில் நமது உடலில் தங்கியுள்ள நச்சுக்கள் அனைத்தையும் வெளியேற்றி விடுகிறது. இதுவே நீங்கள் காலையில் வெறும் வயிற்றில் லேசான வெதுவெதுப்பான நீரை பருகும் போது மலம் கழித்தல் சீராகுகிறது, நச்சுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றுகிறது. பசியை தூண்டுகிறது, தலைவலி வராமல் தடுக்கிறது.

இது மட்டுமல்லாமல் இன்னும் நிறைய நன்மைகள் கிடைக்கின்றன. அதைப் பற்றி இப்பொழுது பார்க்கலாம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மெட்டா பாலிசத்தை அதிகரித்தல்

மெட்டா பாலிசத்தை அதிகரித்தல்

நீங்கள் உங்கள் உடல் எடையை குறைக்க நினைத்தால் காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரை குடியுங்கள். இது உங்கள் உடல் மெட்டா பாலிசத்தை 25% வரை அதிகரித்து உடல் எடையை குறைக்கிறது. சீரண சக்தியை துரிதப்படுத்துவதால் உடல் எடையை வேகமாக குறைக்க முடியும். எனவே இன்றையிலிருந்தே காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரை குடிக்கும் பழக்கத்தை மேற்கொள்ளுங்கள்.

மலம் கழித்தலை சீராக வெளியேற்றுகிறது

மலம் கழித்தலை சீராக வெளியேற்றுகிறது

காலையில் வெறும் வயிற்றில் லேசான வெதுவெதுப்பான நீரை பருகும் போது மலக்குடல் சுத்தமாகி மலம் கழித்தலை சீராக்குகிறது. தினமும் காலையில் மலம் கழிக்கும் பழக்கத்தை கொண்டு வருகிறது. மேலும் உங்கள் உடலில் நச்சுக்களை சேர்த்தும் வெளியேற்றுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

தண்ணீர் நமது உடலுக்கு மிகவும் முக்கியம். உடலில் நீர்ச்சத்தை சரியான அளவில் வைக்க இது உதவுகிறது. வெறும் வயிற்றில் நீர் குடிப்பதால் நமது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நம் உடலை தாக்கும் கிருமிகள் மற்றும் நோய்களுக்கு எதிராக செயல்படுகிறது. மேலும் ஒரு டம்ளர் தண்ணீரை பருகுவது நம்மை நோய்களின் தாக்குதல் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ உதவுகிறது.

தலைவலி தொல்லையிலிருந்து விடுபட

தலைவலி தொல்லையிலிருந்து விடுபட

உடலில் போதுமான நீர்ச்சத்து இல்லாவிட்டால் அடிக்கடி தலைவலி தொல்லையால் அவதிப்பட நேரிடும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கும் போது உடலுக்கு போதுமான நீர்ச்சத்து கிடைத்து தலைவலி வராமல் தடுக்கிறது. மேலும் உங்கள் பல் பிரச்சினைகளிலிருந்தும் விடுதலை தருகிறது.

பசியை அதிகரித்தல்

பசியை அதிகரித்தல்

நீங்கள் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் பசியும் அதிகரிக்கும் என தெரியுமா. ஆமாங்க காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கும் போது குடலில் உள்ள நச்சுக்கள் கழிவுகள் அனைத்தையும் வெளியேற்றி விடுவதால் நமக்கு வயிறு நன்றாக பசிக்கும்.

சருமத்தை அழகாக்க உதவுகிறது

சருமத்தை அழகாக்க உதவுகிறது

நீங்கள் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் அழகான பொலிவான சருமத்தை பெறலாம். கரும்புள்ளிகள், பருக்கள் போன்றவை நமது சருமத்தில் தங்கியுள்ள நச்சுக்களால் ஏற்படுகிறது. எனவே காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கும் போது அந்த நச்சுக்கள் எல்லாம் வெளியேற்றப்படுவதால் இது போன்ற சரும பிரச்சினைகள் நம்மை எட்டிப் பார்ப்பதில்லை. இதனால் ஆரோக்கியமான பொலிவான சருமத்தை பெற இயலும்.

குடலை சுத்தம் செய்தல்

குடலை சுத்தம் செய்தல்

காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் தண்ணீர் பருகும் போது நமது குடல் பாதையில் உள்ள கழிவுகள் நச்சுக்கள் எல்லாம் வெளியேற்றப்படுகின்றன. மேலும் நாம் உண்ணும் உணவில் உள்ள ஊட்டச்சத்துகளை நமது குடல் சீக்கிரமாக உறிஞ்சி கொள்ள இந்த பழக்கம் உதவுகிறது. இதன் மூலம் குடலில் ஏற்படும் கொடிய புற்று நோய் அபாயத்திலிருந்து நம்மை காத்துக் கொள்ள முடியும்.

உடல் ஆற்றலை அதிகரிக்கிறது

உடல் ஆற்றலை அதிகரிக்கிறது

நீங்கள் காலையில் எழும் போதே ரெம்ப களைப்பாக சோம்பேறியாக நினைத்தால் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரை மட்டும் குடியுங்கள். இதனால் உங்கள் இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் வளர்ச்சி அதிகரித்து இரத்தத்திற்கு அதிகப்படியான ஆக்ஸிஜன் செல்கிறது. இதன் மூலம் அந்த நாள் முழுவதும் நீங்கள் சுறுசுறுப்பாக உற்சாகமாக செயல்பட முடியும்.

எடையை குறைக்க உதவுகிறது

எடையை குறைக்க உதவுகிறது

உங்கள் எல்லாருக்குமே தெரியும் தண்ணீருக்கு கலோரி கிடையாது என்பது. எனவே இந்த நீரை காலையில் வெறும் வயிற்றில் குடிக்கும் போது நீங்கள் எதிர்பார்க்காத வகையில் உடல் எடையை குறைக்க முடியும். மேலும் போதுமான இடைவெளியில் தண்ணீர் குடித்து வரும் போது வயிறு நிறைந்து நொறுக்கு தீனிகள் சாப்பிடுவது போன்றவை கட்டுப்படுத்தப்படும். இதனாலும் எடையை எளிதாக குறைக்க முடியும். மேலும் போதுமான தண்ணீர் நமது உடலின் மெட்டா பாலிசத்தை அதிகரித்து கொழுப்புகளை கரைக்கிறது.

ஆரோக்கியமான அழகான கூந்தலை பெற

ஆரோக்கியமான அழகான கூந்தலை பெற

காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது உங்கள் உடலுக்கு மட்டுமல்ல உங்கள் கூந்தலுக்கும் எல்லா விதமான ஊட்டத்துக்கள் கிடைக்க உதவுகிறது. உங்கள் உடலில் போதுமான நீர்ச்சத்து இல்லாவிட்டால் உங்கள் கூந்தலும் வறண்டு பொலிவில்லாமல் போய்விடும். எனவே தினமும் போதுமான தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்து உங்கள் கூந்தலையும் அழகாக பராமரியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் ஆச்சரியமூட்டும் நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா

10-benefits-of-drinking-water-on-an-empty-stomach
Story first published: Tuesday, March 6, 2018, 18:30 [IST]