உடலுக்கு போதுமான அளவு தூக்கம் இல்லையென்றால் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

தூக்கப் பிரச்சனை தான் இன்றைய பெரும்பாலானோர்களின் முக்கியப் பிரச்சனைகளாக இருக்கிறது. தூங்குவதற்காக பல மெனக்கெடல்களை எடுத்தாலும் இரவு படுகக்ச் சென்றால் தூக்கமே வரவில்லை என்று கவலைப்படுபவரா நீங்கள். அப்போ இந்த கட்டுரை உங்க்ளுக்குத் தான்.

What Happens When You Dont sleep properly.

தூங்கினால் தான் உடம்புக்கு நல்லது என்று பலமுறை சொல்லியும் உங்களால் அதனை கடைபிடிக்க முடியவில்லை என்பதால் ஒரு மாறுதலுக்காக, நீங்கள் தூங்காமல் இருந்தால் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும்? நீங்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்படுவீடுகள் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நோய்த் தொற்று :

நோய்த் தொற்று :

தூக்கமின்மை உங்களின் சோர்வை அதிகப்படுத்தும். அத்துடன் உடலில் உள்ள ஆன்ட்டிபயோட்டிக்ஸையும் குறைத்திடும். நோய்களை எதிர்த்து போராடவும் தயங்கும் என்பதால் விரைவில் நோய்வாய்ப்படுவீர்கள்.

இதயம் :

இதயம் :

ஒரு நாளைக்கு ஐந்து மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குக்கிறவர்களுக்கு இதயம் தொடர்பான பிரச்சனைகள் கண்டிப்பாக வரும். சில நேரங்களில் பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் கூட இருக்கின்றன.

புற்றுநோய் :

புற்றுநோய் :

குறைவான தூக்கம் என்பது மார்பக புற்று நோய், மலக்குடல் புற்றுநோய் மற்றும் ப்ரோஸ்டேட் புற்றுநோய் போன்றவை ஏற்படுத்தும் சதவீதங்களை அதிகரிக்கும். இரவு நேரம் பணியாற்றுபவர்களுக்கு இதற்கான வாய்ப்புகள் அதிகம்.

மறதி :

மறதி :

இரவு நேர ஆழ்ந்த தூக்கத்தை தவிர்ப்பவர்களுக்கு சுயமாக சிந்தித்து முடிவெடுக்கும் தன்மை பாதிக்கப்படும். ஞாபக சக்தி, முடிவெடுப்பது, சிக்கலான பிரச்சனைகளை தீர்ப்பது போன்றவை எல்லாம் தடைபடும் மிக முக்கியமாக சுதாரிப்புடன் இருக்க முடியாது என்பதால் பல பிரச்சனைகள் சந்திக்க நேரிடும்.

நினைவுத்திறன் :

நினைவுத்திறன் :

தூக்கமின்மையால் மறதி மட்டுமல்ல உங்களது நினைவுத் திறனும் குறைகிறது.புதிதாக ஒன்றை கற்றுக் கொள்வதும், அதனை நினைவில் வைத்துக் கொள்ளவும் தூக்கம் மிகவும் அவசியம்.

புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதற்கு முன்னால் தேவையான அளவு இடைவெளியும் ஓய்வும் தேவை.

செக்ஸ் :

செக்ஸ் :

தூக்கமின்மை காரணமாக ஆண்களுக்கு டெஸ்ட்ரோன் அளவு குறைந்திடும். ஒரு நாளில் ஐந்து அல்லது அதற்கு குறைவான நேர தூங்குபவர்களுக்கு செக்ஸுவல் ஹார்மோன் பத்து சதவீதம் குறைகிறது.

அதிகரிக்கும் எடை :

அதிகரிக்கும் எடை :

தூக்கமின்மை காரணமாக எப்போதும் சோம்பலாக இருப்பீர்கள் சோம்பலை தவிர்க்க தொடர்ந்து உணவுகளை உட்கொள்வீர்கள் அதோடு உடலில் ஏற்படும் மாற்றங்களால் உடல் எடை அதிகரிக்கும்.

 கவனச் சிதறல் :

கவனச் சிதறல் :

இரவு நேரத்தில் தூங்காமல், அல்லது குறைந்த நேரம் தூங்கினால் கூர்ந்து கவனிக்கும் திறன் குறையும். மூளை தனக்கு தேவையான ஓய்வை வலுக்கட்டாயமாக எடுத்துக் கொள்ளும் போது நமக்கு மிகப்பெரிய பிரச்சனைகள் ஏற்படும். மூளை ஓய்வு கேட்கும் நேரம் சாப்பிடும் நேரமாகவும் இருக்கலாம், வாகனத்தை ஓட்டிக் கொண்டிருக்கலாம், முக்கியமான மீட்டிங்கில் உட்கார்ந்திருக்கலாம்.

சருமம் :

சருமம் :

தூக்கமின்மை உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்ல சருமத்தையும் பாதிக்கிறது. கருவளையம், சரும வறட்சி, அரிப்பு போன்றவை ஏற்படும். இதனால் சரும சுருக்கங்கள் ஏற்படக்கூட வாய்ப்பு அதிகம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

What Happens When You Dont sleep properly.

Let You Know,What Really happens when you dont take sufficient sleep
Story first published: Tuesday, July 25, 2017, 11:42 [IST]