இந்தியர்களின் மரணத்திற்கு அதிகப்படியான காரணமாக இருக்கும் 10 நோய்கள்!

Posted By:
Subscribe to Boldsky

இந்தியா, உலக மக்கள் தொகையில் சீனாவை முந்தி, முதல் இடத்தை பிடிக்கும் வாய்ப்பு உள்ள ஒரே நாடு. இந்தியாவில் தான் அனுதினமும் அதிக குழந்தைகள் பிறக்கிறது என நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், இந்தியாவில் தான் தினமும் அதிகளவில் மரணங்களும் நிகழ்கின்றன.

ஒருவர் இறக்க பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், பொதுவாக கணக்கெடுப்பு எடுத்து பார்க்கும் போது குறிப்பிட்ட காரணங்கள் / நோய்கள் முதல் பத்து இடங்களை பிடித்துள்ளன. அவற்றை பற்றியும், அவை எப்படி பரவுகிறது, அதிலிருந்து எப்படி தப்பிக்கலாம் என இங்கே காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
# இதய நோய்கள்

# இதய நோய்கள்

முதன்மை காரணிகளாக காணப்படுவது புகையிலை பயன்பாடு. மோசமான டயட், சரியாக உடற்பயிற்சி செய்யாதிருப்பது, உடல் பருமன். அதிக கொலஸ்ட்ரால் மற்றும் உயர் இரத்த அழுத்தம் மற்றும் பரம்பரை காரணங்கள்.

இதய நோய் ஏற்படாமல் தவிர்க்க செய்ய வேண்டியவை,

 • புகை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
 • இதயத்திற்கு ஆரோக்கியமான உணவுகள் உண்ணுங்கள் மற்றும்
 • உடல் எடையை சீராக வைத்துக் கொள்ளுங்கள்.
# சுவாச கோளாறு நோய்கள்

# சுவாச கோளாறு நோய்கள்

புகைப்பிடித்தல், காற்று மாசுபடுதல் மற்றும் தொழிற்சாலை குப்பை, குப்பை எரித்தல் போன்றவை சுவாச கோளாறு நோய்கள் உண்டாக முக்கிய காரணிகளாக திகழ்கின்றன.

சுவாச நோய்கள் உண்டாகாமல் இருக்க,

 • வேலை இடத்தை சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும்
 • ஆரோக்கியாமான உணவுகள் உட்கொள்ள வேண்டும்.
 • நன்கு மூச்சு விட வேண்டும்
 • புகைப்பிடித்தல் தவிர்க்க வேண்டும்
# காசநோய்

# காசநோய்

காசநோய் உண்டாக காரணிகளாக இருப்பது தொற்று காரணங்களாகும். இதிலிருந்து பாதுகாப்பாக இருக்க தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும், ஆரோக்கியமான உணவுகள் உட்கொள்ள வேண்டும். சீரான முறையில் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

# வீரியம் மிக்க கட்டிகள்

# வீரியம் மிக்க கட்டிகள்

கெமிக்கல், நச்சுக்கள் உடலில் கலப்பது, ரேடியேஷன், மரபணு, நோய் கிருமிகள் மற்றும் சில அறியப்படாதவை காரணிகளாக இருக்கின்றன.

கட்டிகள் உருவாகமால் இருக்க,

 • புகை தவிர்க்க வேண்டும்
 • ஆரோக்கியமான டயட்
 • உடல் எடை சீராக இருக்க வேண்டும்., பிசிக்கல் ஆக்டிவிட்டி மிகவும் முக்கியம்.
 • சீரான மருத்துவ பரிசோதனைகள் செய்துக் கொள்ள வேண்டும்.
# சரியான, தெளிவான புரிதல் இல்லாத நோய்கள்

# சரியான, தெளிவான புரிதல் இல்லாத நோய்கள்

பெயர் அறியப்படாத நோய்கள், தொற்றுகள் காரணமாகவும் பல மரணங்கள் நிகழ்கின்றன. எந்த நோயாக இருந்தாலும், அதனால் உடலில் ஏதேனும் அறிகுறிகள் தென்படும்.

அப்படி உடலில் ஏதனும் புதிய அறிகுறிகள், மாற்றங்கள் தென்பட்டால் அதை உடனே பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள். இதன் மூலமாக ஆரம்பத்திலேயே என்ன, ஏது என அறிந்துக் கொள்ள முடியும்.

# செரிமான நோய்கள்

# செரிமான நோய்கள்

ஆரோக்கியமான உணவு மீதான கவனக்குறைவு. அதிகளவில் மருத்துவர் ஆலோசனை இல்லாமல் மருந்துகள் உட்கொள்வது. மற்றும் ஆல்கஹால், புகை போன்றவை செரிமான மண்டல நோய் சார்ந்த மரணங்கள் ஏற்பட காரணிகளாக இருக்கின்றன.

ஆரோக்கியமான டயட் மற்றும் போதை பழக்கங்கள் கைவிடுதல், மருந்துகளை மருத்துவர் பரிசோதனைகள் இல்லாமல் உட்கொள்வதை தவிர்த்தல் போன்றவை செரிமான மண்டலம் பாதிப்படையாமல் இருக்க உதவும்.

# வயிற்றுப்போக்கு

# வயிற்றுப்போக்கு

ஃபுட் பாய்சனிங், பாக்டீரியா தொற்றுகள், உங்கள் உடலுக்கு ஒவ்வாத உணவுகள் உட்கொள்வது, மருந்துகள், ரேடியேஷன் தெரபி போன்றவை வயிற்ருப் போக்கு ஏற்பட காரணிகளாக இருக்கின்றன.

கைகழுவி உணவு சாப்பிடுவது, உணவு, இருக்கும் இடத்தை சுத்தமாவைத்துக் கொள்வது என சுய சுகாதாரம் பின்பற்றுதலில் கவனமாக இருந்தாலே இந்த தொந்தரவு இருக்காது.

# விபத்து

# விபத்து

விபத்து, இயற்கை சீற்றங்கள், போன்றவையும் அதிக மரணங்கள் ஏற்படும் டாப் 10 காரணிகளில் ஒன்றாக இருக்கிறது. இயற்கை சீற்றத்தை தவிர்க்க முடியாது. ஆனால், நாம் கண்ட்ரோலாக இருந்தால் விபத்தை தவிர்க்க முடியும்.

# மன நோய் / தற்கொலை

# மன நோய் / தற்கொலை

தற்கொலைகள் காரணமாக ஏற்படும் உயிரிழப்பு அதிகளவில் இந்தியாவில் ஏற்படுகிறது. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது மன அழுத்தம். அன்பானவர்களுடன், உங்களை விரும்பும் நபர்களுடன் அதிகம் பேசுங்கள். கவுன்சிலிங் செல்லுங்கள் நல்ல பலன் கிடைக்கும்.

# மலேரியா

# மலேரியா

சில வகை கொசுக்களால் உண்டாகும் நோய். சுகாதாரம் அற்ற இடங்களுக்கு செல்ல வேண்டாம், கொசு கடிப்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். கொசு கடிக்காமல் இருக்க உதவும் கிரீம்கள் பயன்படுத்துங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Top Ten Killer Diseases in India!

Top Ten Killer Diseases in India!
Story first published: Thursday, July 27, 2017, 17:56 [IST]
Subscribe Newsletter