உங்களுக்கு அதிகமா சோம்பேறித்தனம் இருக்கா? அதிலிருந்து மீண்டு வர சில மனோதத்துவ வழிகள்!!

Posted By: Aashika
Subscribe to Boldsky

காலையில் எழுந்ததிலிருந்து பல் விளக்க, கிட்சனுக்குள் நுழைந்து சமைக்க, என்பதில் ஆரம்பித்து எந்த ஒரு விஷயத்தை செய்யவதற்கும், அதை விட முன்னெடுப்பதற்கும் தயக்கம் காட்டுகிறீர்களா அப்போ இது உங்களுக்குத் தான்.ஏன் சோம்பேறித்தனம் உங்களுக்கு வருகிறது என்பதில் துவங்கி நீங்கள் என்னவெல்லாம் செய்வீர்கள் அதிலிருந்து எப்படி மீண்டு வரலாம் என்பதை விரிவாக பார்க்கலாம். சோம்பேறித்தனம் பாக்காம படிச்சிருங்க பாஸ்! உங்களுக்குதான் நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
யார் சோம்பேறி? :

யார் சோம்பேறி? :

சோம்பேறிகள் எப்போதும் சொகுசு வாழ்க்கை விரும்புவர்களாக இருப்பார்கள். அத்துடன் கனவு காண்பது என்பதுஅவர்களுக்கு மிக பிடித்தமான வேலை. சொகுசு வாழ்க்கையை அனுபவிப்பது போன்ற பகல் கனவுகளில் மூழ்கியிருப்பதயே பெரிதும் விரும்புவர்.

அந்த பேண்டஸி உலகத்திற்கு அடிமையாகி செல்லும் வேலையில் கோட்டை விடுவர். அதற்கான முன்னெடுப்புகள் என்பது அவர்கள் தரப்பிலிருந்து எதுவும் இருக்காது, எதுவுமே செய்யாமல் எல்லாமே வேண்டும் என்று நினைக்கும் சோம்பேறிகள் வேலையை வெறுப்பவர்களாக இருப்பார்கள். எப்போதும் இன்னொருவர் நிர்பந்திக்கும் வரை வேலையை ஊறப்போட்டு கடைசி நிமிடத்தில் செய்வார்கள்.

தொழில்நுட்பம் காரணமா?

தொழில்நுட்பம் காரணமா?

வளர்ந்து வரும் தொழில்நுட்பம் இதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நம்முடைய பங்களிப்பு இல்லாமல், அல்லது குறைவாக பயன்படுத்தி எளிதாக நடக்கக்கூடிய வேலைகளால் அவர்கள் சோம்பேறித்தனம் அதிகரிக்கிறது.

நாளடைவில் அவை அன்றாட வேலைகளில் மெத்தனப் போக்காக மாறுகிறது, இந்த சோம்பேறித்தனம் என்பது பெரும்பாலும் நாம் செய்யும் அனைத்து வேலைகளிலும் தெரிவதில்லை. விருப்பமில்லாத அல்லது போரிங் என்று நீங்கள் நினைக்கும் வேலைகள் மட்டுமே உங்களது சோம்பேறித்தனம் வெளிப்படுகிறது.

வாய்ப்புகள் இல்லை :

வாய்ப்புகள் இல்லை :

நிர்பந்தம் செய்யப்படும் போதும் கடைசி வாய்ப்பு எனும் போது தான். உள்ளிருக்கும் ஆற்றல் வெளிப்படுகிறது.உங்களுக்கு ஏற்ற சூழல் இருக்கும் போது உங்களையே அழிக்கும் சோம்பேறித்தனம் தான் மேலோங்குகிறது.

நீங்கள் யார்?

நீங்கள் யார்?

உண்மையைச் சொல்ல வேண்டுமானால் சோம்பேறிகள் என்பது சோம்பேறிகள் கிடையாது. அவர்கள் ஒரு நிர்பந்தத்தின் கீழே வேலை செய்ய விரும்புபவர்கள். இன்னொருவரின் கண்காணிப்பில் வேலை செய்பவர்கள். தங்களை தாங்களே உற்சாகப்படுத்திக் கொள்ள தெரியாதவர்கள்.

மாற்ற முடியும் :

மாற்ற முடியும் :

சோம்பேறித்தனம் என்பது கோளாறு கிடையாது, அது தவிர்க்கக்கூடியது. அதுவும் உங்களால் மட்டுமே தவிர்க்க முடிந்தது நடக்கவே சோம்பேறித்தனம் படும் ஒருவர், நாய் துரத்தும் போது, தன்னை காப்பாற்றிக் கொள்ள தலை தெறிக்க ஓடுவார். ஆக சோம்பேறித்தனம் என்பது நம் ஆற்றலை மழுங்கடிக்கச் செய்யும் மேற்பூச்சு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

முழு அதிகாரம் :

முழு அதிகாரம் :

எனக்கு என்னுடைய வெற்றிக்கு நானே முழுப் பொறுப்பு என்கிற புரிதல் அவர்களுக்கு இல்லை. அந்த புரிதல் இல்லாமலேயே சோம்பேறித்தனத்தின் உதவியுடன் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

சத்தமாக சொல்லுங்கள் :

சத்தமாக சொல்லுங்கள் :

"என் வாழ்க்கையை அழிக்கிறேன், என்னையே நான் அழித்துக் கொள்கிறேன், என் ஆற்றல் மழுங்கடிக்கப்படுகிறது " என்று சத்தமாக சொல்லுங்கள். சோம்பேறித்தனத்தால் ஒரு வேலையை ஒத்தி வைக்கலாம் என்று நினைக்கும் போதெல்லாம் இதனை சத்தமாக சொல்லுங்கள்.

நமக்காக இன்னொருவர் :

நமக்காக இன்னொருவர் :

நம்மை அறியாமலேயே நாம் காத்திருக்கிறோம். எழுந்திரிக்க முயற்சிக்காமலேயே எழுப்பி விட இன்னொருவர் வருவார் என்று காத்திருக்க ஆரம்பித்து யாரும் வராத பட்சத்தில் நீங்களாக எழும் முயற்சியையும் கைவிட்டு ஒரேயிடத்தில் இருப்பர்.முயற்சியை துவங்குங்கள் இன்னொருவருக்காக காத்திருப்பதை தவிருங்கள்.

வாரத ‘நாளை’ :

வாரத ‘நாளை’ :

பலரும், புதிதாக ஒரு விஷயத்தை செய்யவதற்கு முன்னால் ஆனால் அதை துவங்குவதற்கான தேதி குறிப்பதில் தான் பெரிய பிரச்சனை நடக்கும். ஒவ்வொரு முறையும் நாளையிலிருந்து ஆரம்பிப்பேன் என்று சமாதானம் கூறிக்கொள்ளும் வரை அந்த நாள் எப்போதும் வராது.

தாமதிக்கும் வெற்றி :

தாமதிக்கும் வெற்றி :

உங்களுக்கென்று ஒரு திட்டமிடல் எதுவும் இல்லாமல் ஒவ்வொரு வேலையும் தள்ளிப் போட்டுக் கொண்டேயிருப்பதால் எல்லாமே தாமதமாகும். உங்களுக்கான வெற்றியும் தள்ளிப்போய்கொண்டேயிருக்கும்.

கேள்வி கேளுங்கள் :

கேள்வி கேளுங்கள் :

உங்களையே நீங்கள் கேள்வி கேளுங்கள். ஒரு வேலையை செய்யாமல் பிறகு செய்து கொள்ளலாம் என்று நீங்கள் முடிவெடுக்கும் முன்னர். அந்த ‘பிறகு' எப்போது? இப்போது செய்தால் என்ன? என்று உங்களையே கேள்வி கேளுங்கள்.சோம்பேறிகளே! இது ஒன்றும் மிகப்பெரிய குறையோ தவறோ அல்ல எளிதாக மீண்டு வரலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: health tips
English summary

Tips To Get Rid Of Laziness

simplest ways to get rid of laziness
Story first published: Thursday, July 13, 2017, 18:12 [IST]
Subscribe Newsletter