For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரு வேலைய முடிக்கவே முடியலன்னு கவலப்படுறீங்களா? இத ஒருதடவ படிச்சிடுங்க

சின்ன சின்ன மாற்றங்கள் செய்து சில குறிப்புகளை பின்பற்றினாலே ஒரு நாளை உற்சாகமானதாக மாற்றலாம்.

|

நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டுமா? உங்களுடைய வேலைகளை சோம்பலின்றி முடிக்க துணை புரிவது ஆரோக்கியமான உடல் நிலை தான். நமது இயக்க சக்திகளான உணவுகள் தான் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

Tips to feel energetic

நம்முடைய வாழ்க்கை முறையில் சின்ன சின்ன மாற்றங்களை செய்தாலே ஒரு நாளை சிறந்த முறையில் பயன்படுத்தலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உணவு :

உணவு :

காய்கறி,பழங்கள்,முழு தானியங்கள் இவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். சரிவிகித உணவாக எடுத்துக் கொள்ளுங்கள். கெட்ட கொழுப்புள்ள உணவுகளை தவிர்த்திடுங்கள்.

பசியை புறக்கணிக்காதீர்கள் :

பசியை புறக்கணிக்காதீர்கள் :

வேலைப் பளு காரணமாகவோ அல்லது அதீத ஆர்வத்தின் காரணமாகவோ உணவு உண்ணும் நேரத்தை மாற்றாதீர்கள் பசியுணர்வை புறக்கணிககாதீர்கள். உடல் உழைப்பு இருந்தால் தான் பசிக்கும் என்றில்லை என்பதால் அவ்வப்போது லைட் ஸ்நாக்ஸ் எடுத்துக் கொள்ளலாம். ஸ்நாக்ஸ்களாக பாக்கெட் உணவுகளை உண்ணக்கூடாது.

ப்ரேக் :

ப்ரேக் :

தொடர்ந்து ஒரே வேலையை செய்தால் அலுப்பு தட்டிவிடும். அவ்வப்போது பிரேக் எடுத்துக் கொள்ளுங்கள். உட்கார்ந்த இடத்திலேயே சாப்பிடுவது, உட்கார்ந்த இடத்திலேயே டீ காபி கொண்டுவரச் சொல்வது போன்றவற்றை தவிர்த்திடுங்கள். இந்த பிரேக் உங்கள் மனதுக்கு மட்டுமல்ல உடலுக்கும் அவசியம். நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்தே வேலை பார்க்கும் போது இப்படியான சில பயிற்சிகளை செய்யலாம்.

மனநிலை :

மனநிலை :

உணவு உட்கொள்ளும் போது நல்ல மனநிலையுடன் இருங்கள். வேலை அதிகம் என்று வேலை பார்த்துக் கொண்டே சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள். அவசரத்திற்கு என்றோ இன்று ஒரு நாள் தானே, சண்டே பார்ட்டி என்றோ வழக்கமாக எடுக்கும் உணவைத் தவிர்த்து மற்ற உணவுகளை எடுத்துக் கொள்ளாதீர்கள்.

உணவுச் சூழல் :

உணவுச் சூழல் :

வெளியிடங்களில் சாப்பிட வேண்டிய கட்டாயம் இருந்தால் ஒரு சில கடைகளில் வாடிக்கையாக உட்கொள்ளுங்கள். தினமும் புதுப்புது இடங்களில் சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள்.

அதிக சுவையுள்ள அதே நேரத்தில் செயற்கை நிறமூட்டிகள் கலந்த உணவுகளை தவிர்த்திடுங்கள். சாப்பிடும் இடம் சுத்தமாக இருக்கிறதா என்பதையும் கண்காணியுங்கள்

தண்ணீர் :

தண்ணீர் :

நமக்கு உணவு எவ்வளவு முக்கியமோ அதேயளவு முக்கியமானது தண்ணீர். சோர்வு, தலைவலி, போன்றவை வராமல் தடுத்திடும். உணவை ஜீரணிக்கச் செய்திடும், செய்யும் வேலையில் கவனத்தை செலுத்த வைக்கும். ஒரு நாளில் குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Tips to feel energetic

Tips to feel energetic
Story first published: Monday, August 21, 2017, 18:31 [IST]
Desktop Bottom Promotion