Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்
பல் வலி உங்களது மோசமான உடல் ஆரோக்கியத்தை தான் சுட்டிக் காட்டுகிறது என்று தெரியுமா?
இங்கு பல் வலி உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி சொல்லும் 6 விஷயங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
நம்மிடம் உள்ள மோசமான பழக்கவழக்கங்களால் அவஸ்தைப்படும் ஒரு பெரும் பிரச்சனை தான் பல் வலி. ஒருவருக்கு பல் வலி வருவதற்கு மோசமான வாய் சுகாதாரம் தான் முதன்மையான காரணம். இது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.
ஆனால் பல் வலி நம் மோசமான வாய் சுகாதாரத்தை மட்டும் சுட்டிக் காட்டுவதோடு, நம் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தைப் பற்றியும் தான் சொல்கிறது. இக்கட்டுரையில் பல் வலி உடல் ஆரோக்கியத்தைப் பற்றி கூறும் சில விஷயங்கள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து இனிமேல் பல் வலியை சாதாரணமாக விட்டுவிடாதீர்கள்.

சைனஸ் பிரச்சனை
ஒருவருக்கு மேல் பகுதியில் உள்ள பற்களில் கடுமையான வலி ஏற்பட்டால், அவர்களுக்கு சைனஸ் தொற்றுகள் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஏனெனில் சைனஸ் சுரப்பியானது வாயின் மேல்கூரை பற்களின் வேர்களுக்கு மேல் தான் அமைந்துள்ளது.

கீழ்தாடை இணைப்பு கோளாறு (Temporomandibular Joint Disorder)
இது ஒருவகையான அழற்சி. கீழ்தாடை மண்டையோட்டுடன் இணையும் பகுதியில் ஏதேனும் அழற்சி ஏற்பட்டிருந்தால், கீழ்பகுதியில் உள்ள பற்கள் வலிப்பது போன்ற உணர்வு ஏற்படும். அதுவும் பல் வலியுடன், கழுத்து வலி, தலை வலி போன்றவையும் இருந்தால், நிச்சயம் அது கீழ்தாடை இணைப்பு கோளாறின் காரணமாகத் தான் வருகிறது என்று அர்த்தம்.

சொத்தை பற்கள்
ஏதேனும் ஸ்நாக்ஸ் சாப்பிட்ட பின், பற்களில் வலி ஏற்பட்டால், அதற்கு பற்கள் மிகவும் தீவிரமாக சொத்தையாகி உள்ளது என்று அர்த்தம். இம்மாதிரியான நேரத்தில் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

ஞானப்பல்
இது ஒரு பெரிய பிரச்சனை அல்ல. இருப்பினும், ஒருவருக்கு ஞானப்பல் வருமாயின், அது பல் வரிசையின் கடைசியில், ஈறுகளை பிளந்து கொண்டு வெளியே வரும். இதனால் தாங்க முடியாத அளவில் வலியை அனுபவிக்கக்கூடும். இந்நேரத்தில் வலி நிவாரண மாத்திரைகளை எடுக்கும் முன், மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.

இதய நோய்
நெஞ்சு வலி போன்று, பற்கள் மற்றும் தாடைப்பகுதிகளில் கடுமையான வலியை அனுபவித்தால், இதயத்தில் ஏதோ பிரச்சனை உள்ளது என்று அர்த்தம். அதாவது இது மாரடைப்பிற்கான அறிகுறிகளுள் ஒன்றாகும். எனவே கவனமாக இருங்கள்.

தொற்றுகள்
கடுமையான வாய் துர்நாற்றத்துடன், பல் வலியும் சேர்ந்து இருந்தால், வாயில் தொற்றுகள் ஏராளமாக உள்ளது என்று அர்த்தம். அதிலும் ஈறுகளில் வீக்கத்துடன் வலியை சந்தித்தால், சற்றும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுங்கள்.



Click it and Unblock the Notifications