புற்று நோய்க்கும் மண்பாணை கலைக்கும் என்ன சம்பந்தம் ?? - இன்று உங்களுக்கு ஒரு தகவல்!!

Written By:
Subscribe to Boldsky

புற்று நோய் என்ற சொல்லை சொல்லவே பலரும் விரும்ப மாட்டார்கள்.

உங்கள் குடும்பத்திலோ அல்லது நெருங்கியவர்களோ யாராவது ஒரு குடும்பத்திலாவது புற்று நோய் இல்லாதவர்கள், இறந்தவர்கள் இல்லையென்று உங்களால் சொல்ல முடியுமா?

இது பயங்கரமான நோய் அதோடு நிம்மதியையும் குலைக்கச் செய்துவிடுகிறது. உலக புற்று நோய் தினமான இன்று மருத்துவர்கள் புற்று நோயை தடுக்க இந்த விஷயங்களை செய்யச் சொல்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆஸ்பிரின் :

ஆஸ்பிரின் :

தினமும் 80 மி.கி ஆஸ்பிரின் எடுத்துக் கொண்டால் பலவிதமான புற்று நோயை தடுக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆனால் இது குடல் நோய் , உணவுக் குழாய் நோய் , அல்சர் போன்ற நோய்களை கொண்டவர்களுக்கு பொருந்தாது. இது ரத்தப் போக்கை உண்டு பண்ணிவிடும்.

கர்ப்பத்தடை மாத்திரைகள் :

கர்ப்பத்தடை மாத்திரைகள் :

குழந்தை பிறப்பை தள்ளிப் போடுபவர்கள் தொடர்ந்து 5 வருடங்களுக்கு கர்ப்பத்தடை மாத்திரை எடுத்துக் கொண்டிருந்தால், அவர்களுக்கு கர்ப்பப்பை மற்றும் கர்ப்ப வாய் புற்று நோயை வருவதில்லை. இந்த மாத்திரைகள் புற்று நோயை தடுப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

மண்பானை செய்வினை :

மண்பானை செய்வினை :

மண்பானை செய்யும் கலையை கற்றுக் கொள்ளுங்கள். இது கலைதிறனையும் கற்பனா சக்தியை மட்டும் ஊக்குவிக்கவில்லை. மார்பக புற்று நோயும் தடுக்கிறதாம். அதிக கற்பனைத்திறனுடன் இருப்பவர்களுக்கு மார்பகபுற்று நோயும் விரைவில் குணமாகிறது என மருத்துவ உககம் கூறுகின்றது.

இறைச்சிக்கு தடா :

இறைச்சிக்கு தடா :

மிருகங்களிலிருந்து கிடைக்கும் புரதம் புற்று நோயை உண்டாக்கிறது என சமீப ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. குறிப்பாக குடல் புற்று நோய்க்கு இறைச்சியிலிருந்து கிடைக்கும் புரதமே காரணம் என்று கூறுகின்றனர்.

வேண்டாம் பாப் ஸ்மியர் டெஸ்ட் அடிக்கடி :

வேண்டாம் பாப் ஸ்மியர் டெஸ்ட் அடிக்கடி :

பாப் ஸ்மியர், கர்ப்பப்பை புற்று நோயின் ஆரம்ப காலக்கட்டத்தை தெரிந்து கொள்வதற்கான பரிசோதனை என்றாலும், அதனை வருடம் ஒருமுறை செய்வது கூடாது. ஏனென்றால் அவை கர்பப்ப்பையை இயல்பு நிலைக்கு கொண்டு வர தாமதப்படுத்தும். அதோட் அவை பக்கவிளைவாக புற்று நோயை தரும் வாய்ப்பும் அதிகம் என்று கூறுகின்றனர்.

தூக்கம் :

தூக்கம் :

தேவையான தூக்க அளவு குறைவாக இருப்பவர்களுக்கு புற்று நோய் வரும் வாய்ப்பு அதிகம் என்று கூறுகின்றனர். இரவில் தூங்காமல் இருந்தால் மெலடோனின் அளவி குறைவதால் புற்று நோய் செல்களின் தாக்கம் அதிகரிக்கும்.

 விட்டமின் டி :

விட்டமின் டி :

புற்று நோய் நோயாளிகளிடம் விட்டமின் டி சத்து குறைவாகவே இருக்கும். விட்டமின் டி குறைவாக இருந்தால் அவை புற்று நோயை உண்டாக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நீங்கள் பரிசோதித்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு குறைவாக இருந்தால் உடனடியாக சப்ளிமென்ட்ரி எடுத்துக் கொள்வது நலம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

These things we can do to avoid getting cancer- Cancer experts say

These things we can do to avoid getting cancer- Cancer experts say
Please Wait while comments are loading...
Subscribe Newsletter