மரணத்தை உண்டாக்கும் நுரையீரல் பாதிப்பைப் பற்றிய தகவல்கள்!!

By: Suganthi Rajalingam
Subscribe to Boldsky

நீங்கள் சிஓபிடி அதாவது நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் மற்றும் ஆஸ்துமா போன்றவற்றால் பாதிப்படைந்து இருந்தால் அதை கவனிக்காமல் விட்டு விடாதீர்கள். இது பிறகு அபாயகரமான பிரச்சினையை ஏற்படுத்தி விடும்.

இதைப் பற்றிய தகவல்கள் நாளிதழ் "லலான்ஷெட் மெடிக்கல் ரெஸ்பியர்ட்ரி மெடிசனில்" வெளியிடப்பட்டுள்ளது. இதன் படி பார்த்தால் 3.6 மில்லியன் மக்கள் சிஓபிடி மற்றும் ஆஸ்துமாவால் 2015 வரைக்கும் பாதிப்படைந்துள்ளனர் என்று ரிப்போர்ட் பதிவாகியுள்ளது.

Study Says These Two Are The Deadliest Lung Diseases

இதைப் பற்றிய ஆராய்ச்சியானது தியோ வாஸ் என்பவர் இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் மேட்ரிக்ஸ் ஆன்ட் எவாலுசன் அட் தி யுனிவர்சிட்டி ஆஃப் வாஷிங்டனின் புரபொசர் 188 நாடுகளில் 1990-2015 வரை உள்ள இறப்பு விகிதத்தை ஆராய்ந்தார்.

இதிலிருந்து தெரிய வந்தது என்னவென்றால் 3.2 மில்லியன் மக்கள் இந்த சிஓபிடி என்ற நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதும் இது புகைப்பிடித்தல் மற்றும் சுற்றுச்சூழல் மாசுக்களால் ஏற்படுகிறது என்பதையும் கண்டறிந்தார். மேலும் 400,000 மக்கள் ஆஸ்துமாவால் இறந்துள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது.

இந்த சிஓபிடி நோயால் பாதிக்கப்பட்டவர்களின் சராசரி இறப்பு விகிதத்தை கணக்கிட்டால் 12% இதில் மக்கள் தொகை பெருக்கத்தால் அதிகரித்துள்ளது.

ஆஸ்துமா பாதிப்பை எடுத்துக் கொண்டால் 13 % அளவில் 358 மில்லியன் மக்கள் உலகளவில் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். ஆனால் இறப்பு விகிதம் கால் பங்கு குறைந்துள்ளது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்த சிஓபிடி நோயால் 2015 ல் அதிகளவு பாதிப்படைந்த நாடுகளான பப்பியா நியூ கென்னியா, இந்தியா, லஸ்ஸோத்தோ மற்றும் நேபாள் ஆகும்.

Study Says These Two Are The Deadliest Lung Diseases

ஆஸ்துமா அதிகமாக பரவிய நாடுகளான ஆப்கானிஸ்தான், ஆப்பிரிக்கன் ரிபபளிக், பிஜி, கிருபதி, லஸ்ஸோத்தோ, பப்பியா நியூ கென்னியா, சுவிட்சர்லாந்து ஆகிய நகரங்கள் ஆகும்.

வருமானங்கள் அதிகமான வளர்ந்த நாடுகள் சிஓபிடி ஸல் குறைந்த அளவே பாதிப்படைந்து இருந்தனர். யூரோப், வட ஆப்பிரிக்க, மிடில் ஈஸ்ட் மற்றும் நார்த்தன் யூரோப் போன்றவை ஆகும். மேலும் சைனா, ஜப்பான் மற்றும் இத்தாலி போன்ற நாடுகளும் குறைந்த அளவே ஆஸ்துமாவால் பாதிப்படைந்தனர்.

ஆஸ்துமாவை ஒப்பிடும் போது சிஓபிடி 8 மடங்கு அளவிற்கு மரணத்தை வரவழைக்கும் நோய் ஆகும்.

நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் அறிகுறிகள்

இது ஒரு நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் ஆகும். இந்த நோய் வந்தால் உங்களுக்கு சுவாசிக்க கடினமாக இருக்கும்.

இருமல், மூச்சு இழுப்பு பிரச்சினை, குறுகிய மூச்சு விடுதல், மார்பக விறைப்பு போன்ற அறிகுறிகள் தென்படும்.

புகைப்பிடித்தல் பழக்கம் இந்த பிரச்சினை வருவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. மேலும் நுரையீரலுள் செல்லும் மாசு கலந்த காற்று, கெமிக்கல் புகை, தூசிகள் போன்றவைகளும் காரணமாக அமைகின்றன.

ஆஸ்துமா அறிகுறிகள்

இது ஒரு நாள்பட்ட நுரையீரல் பிரச்சினை ஆகும். மூச்சுக் குழல் பகுதிகளில் எரிச்சலை ஏற்படுத்தும். மூச்சு இழுப்பு விசில் போன்ற சத்தத்துடன், இருமல், மார்பக விறைப்பு, குறுகிய மூச்சு விடுதல் போன்ற அறிகுறிகள் ஏற்படும்.

ஆஸ்துமாவால் ஏற்படும் இருமல் இரவு அல்லது அதிகாலை நேரத்தில் அதிகமாக காணப்படும் என்று ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

English summary

Study Says These Two Are The Deadliest Lung Diseases

Study Says These Two Are The Deadliest Lung Diseases
Story first published: Sunday, August 27, 2017, 16:15 [IST]
Subscribe Newsletter