தினமும் ஆஸ்பிரின் உபயோகிப்பவர்களா நீங்கள்? அப்படியெனில் இதை படிங்க...

Posted By: Divyalakshmi Soundarrajan
Subscribe to Boldsky

பொதுவாக வாதம், மாரடைப்பு, இதய நாளம் சம்மத்தப்பட்ட இதய நோயாளர்களின் இதய நாளங்களில் ரத்தம் உறைதலை தடுக்கவும், ரத்தத்தின் அடர்த்தியை குறைத்து சீரான ரத்த ஓட்டத்தை தொடரவும் டாக்டர்களால் பரிந்துரைக்கப்படுவது ஆஸ்பிரின் மாத்திரை. அப்படியாக கொடுக்கப்படும் ஆஸ்பிரின் வகை மருந்துகள் சில பக்க விளைவுகளையும் கொண்டுள்ளது என்று சில புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

அதிலும் குறிப்பாக வயதானவர்கள் இரப்பை மற்றும் அதை சார்ந்த குடல் பகுதிகளில் ரத்தக் கசிவு நோயால் பாதிக்கப்படுகிறார்கள என தெரியவந்துள்ளது. இதில் கூட்டு மருந்தாக கொடுக்கப்படும் ப்ரோட்டான் பம்ப் இன்ஹிபிடர்ஸ் மற்றும் நெஞ்செரிச்சலுக்காக கொடுக்கும் மருந்துகளோடு ஆஸ்பிரினும் கொடுக்கப்படும் போது ரத்த கசிவு குறைந்து குறிப்பிட்டளவு மாற்றம் ஏற்படுகிறது என்பதும் தெரிய வருகிறது.

Risk of bleeds and death with daily aspirin use higher

ஒவ்வொரு வருடமும் லண்டனில் மட்டும் சுமார் 20,000பேர் வரை ரத்தக் கசிவினாலும், அதிலும் தோராயமாக சுமார் 3,000 பேர் வரை ரத்தக் கசிவால் இறக்க நேர்ந்துள்ளதாக பல்வேறு வெளிவட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் சில ஆய்வுப்படி இந்த எண்ணிக்கை உண்மையாக இருக்கவேண்டியதில்லை என்றே உணரப்படுகிறது.

இந்த ஆய்வில் இணைந்து செயல்பட்ட பீட்டர் ரூத்வெல் கூறுகையில், ஆஸ்பிரின் எடுத்துக்கொள்வதால் ஏற்படுவதாக குறிப்பிடப்படும் ரத்தக்கசிவு நோயாளிகளின் எண்ணிக்கை நம்ப முடியாத அளவுக்கு மிகைப்படுத்தப்படுகிறது என நான் ஒவ்வொரு பத்திரிகையாளர் சந்திப்பின்போதும் தெரிவித்துக்கொண்டு தான் இருக்கிறேன். ஆனாலும் அந்த தகவல்கள் வெளி உலகத்துக்கு சரியாக போய்சேரவில்லை.

Risk of bleeds and death with daily aspirin use higher

இந்த தகவல் உரிய இடங்களுக்கு சென்றடையாதது என் குற்றமல்ல ஆனாலும் பத்திரிக்கையாளர்களையும் குறை சொல்லமாட்டேன்,இதை தகவல் பரிமாற்றத்தின் குற்றமாக வேண்டுமானால் எடுத்துக்கொள்ளலாம் என்றார் லண்டனில் ரூத்வெல். அவரது குழுவினர் டாக்டர்களால் பரிந்துரைத்த ஆஸ்பிரினை தினமும் எடுத்துக்கொள்ளும் போது, பக்கவாதம் மற்றும் இதய நோயால் பாதிக்கப்பட்ட 3116 பேரை பின் தொடர்ந்து கவனித்ததில் ஒரு நிலைக்குப்பின் சுமார் 314 நோயாளிகள் ரத்தக்கசிவு நோயால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.

இது கண்காணித்த மொத்த நோயாளிகளின் எண்ணிக்கையில் 10 % ஆகும். அதிலும் குறிப்பாக 65 வயதுக்கு மேற்பட்ட வயோதிகர்களே இன் நோயால் அதிகம் பாதிப்படைகின்றனர் என கண்டறியப்பட்டது. இதில் 65 வயதுக்குட்பட்டோர் 0.5% என்ற ஆபத்து நிலையிலும், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் 2.5 %என்ற ஆபத்து நிலையிலும் இருப்பது கண்டறியப்பட்டது.

Risk of bleeds and death with daily aspirin use higher

ஆஸ்பிரின் மற்றும் அது தொடர்புடைய மருந்துகள் இதய அடைப்புகளால் வரும் மாரடைப்பு மற்றும் மூளைக்கு செல்லும் ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்புகளால் வரும் பக்கவாதம் போன்றவற்றை தடுப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது. இம்மருந்தை நடுநிலை கொண்டு கவனித்தால் இம்மருந்தை பயன்படுத்தும்போது ரத்தம் உறைதல் தடுக்கப்பட்டு இதய தமனிகளுக்கு சீராக ரத்த ஓட்டம் ஏற்பட வழிவகை செய்கிறது அதே சமயம் ரத்தம் உறைதல் தடுக்கப்படுவதால் எதிர்பாராவிதமாக ரத்தக் கசிவு ஏற்படும் போது உடனடியாக அதை நிறுத்துவதில் சிரம நிலை ஏற்படுகிறது.

அப்பொழுதும் ரூத்வெல் பிடிவாதமாக மாரடைப்பை விட ரத்தக்கசிவு ஆபத்து குறைவு என்ற வகையில் ஆஸ்பிரினை தொடர்ந்து எடுத்துக்கொள்வதில் தவறில்லை என குறிப்பிடுகிறார். மேலும் அவர் குறிப்பிடுகையில் மாரடைப்பு மற்றும் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட 75 வயதிற்குற்பட்டவர்கள் தங்கள் பாதுகாப்புக்காக ஆஸ்பிரின் மருந்துகளை தொடர்ந்து எடுத்துக்கொள்ளலாம் என்று குறிப்பிடுகிறார்.மேலும் ஆய்வுகளின் படி ஆஸ்பிரினோடு கூட்டு மருந்தாக எடுத்துக்கொள்ளும் ப்ரோட்டான் பம்ப் இன்ஹிபிடர்ஸ் (ppi)ரத்தக்கசிவை வெகுவாக குறைக்கும் தன்மைகொண்டது என்பதையும் முக்கியமாக குறிப்பிடுகிறார்.

Risk of bleeds and death with daily aspirin use higher
மேலும் இந்த ஆய்வை ஒத்துக்கொள்ளும் ஷெபீல்டு யுனிவர்சிட்டியை சேர்ந்த டாக்டர் சிம் "புற்றுநோய் மற்றும் மாரடைப்பு வராமல் தடுக்கும் நோக்கோடு முன்கூட்டியே இந்த ஆஸ்பிரின் மருந்தை எடுத்துகொள்பவர்கள் தயவுசெய்து தங்களது டாக்டர்களிடம் போய் ஆலோசனை பெற்று மருந்தை எடுத்துக்கொள்ளுங்கள்" என பரிந்துரைக்கிறார்.

ஏனெனில், ரத்தம் உறையாததற்கான சிகிச்சை முறையிலும் ஆபத்து அதிகம் என்கிறார். இந்த பின்விளைவுகள் பெரும்பாலும் வயதானவர்களுக்கும் மிகவும் வயதானவர்களுக்கு மட்டும்தான் எனும் போது மற்ற நோயாளிகளுக்கு ஆஸ்பிரின் நம்பிக்கையளிப்பதாக உள்ளது. மேலும் ரத்த கசிவுக்கும் ஆஸ்பிரினுக்குமான தொடர்பை கவனித்த ஈஸ்ட் ஆங்கிலியா பல்கலைகழகத்தை சேர்ந்த டாக்டர் யூன் லோக் "இது தவிர்க்க முடியாத அதே சமயம் வேறுவழியே இல்லாமல் வரவேற்கவேண்டிய மருத்துவ சிகிச்சை முறை" என்கிறார்.

மேலும் அவர் கூறுகையில் "மாரடைப்பு, பக்கவாதம் வந்தவர்கள் மறுபடியும் அதுபோல் வராமலிருக்க ஆஸ்பிரின் எடுத்துக்கொளும்போது குடல் சார்ந்த ஏற்படும் சிறிய ரத்தக்கசிவை பெரிது படுத்தாமல் மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தை தடுக்கிறோம் என்ற பெரிய நன்மையையே கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும்" என்றார். மேலும், ஊடகங்களுக்கு தெரிவிக்கையில் "பக்கவாதம் மற்றும் மாரடைப்பிற்கு பின் ஆஸ்பிரின் மிகச்சிறந்த மருந்து ஆனாலும் ரத்தக்கசிவு போன்ற அதன் பக்க விளைவுகளை சந்தித்துத்தான் ஆகவேண்டும்" என்றார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    Risk of bleeds and death with daily aspirin use higher

    Risk of bleeds and death with daily aspirin use higher dosage
    Story first published: Friday, June 23, 2017, 13:00 [IST]
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more