உயிரை குடிக்கும் ஆபத்தான இந்த எலக்ட்ரானிக் பொருட்களை பார்த்து உங்களுக்கு பயமில்லையா?

Written By:
Subscribe to Boldsky

தொழில்நுட்பங்கள் மிக வேகமாக வளர்ந்து வரும் இந்த காலத்தில், ஒவ்வொரும் நம்மை சுற்றி பல எலக்ரானிக் சாதனங்களை வைத்துள்ளோம். அவை நமக்கு கண்ணுக்கு தெரியாமல் எத்தனை ஆபத்தை ஏற்படுத்துகிறது என்று நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.

மூன்று தலைமுறைகளுக்கு முன் இந்த அளவுக்கு தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சியடையவில்லை. ஆனால் இன்றைய சூழலில் நாம் கையில் மொபைல் போன் இல்லாமல் எங்குமே செல்வதில்லை.. வீடுகளையும் ஆட்டோமேஷன் செய்து வைத்திருக்கிறோம். இந்த பகுதியில் நாம் தினசரி பயன்படுத்தும் கதிர்வீச்சை வெளியிடும் சில எலட்ரானிக் சாதங்களை பற்றி காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. செல்போன்

1. செல்போன்

செல்போன் நம் அனைவருக்கும் ஆறாவது விரலாக இருக்கிறது. செல்போன் இல்லாமல் நாளே நகராது என்று நினைக்கும் விதமாக நாம் மாறிவிட்டோம். சிறிய மைக்ரோ அலைகள் செல்போனை சுற்றி இருக்கிறது. தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கும் போது இந்த மைக்ரோ அலைகள் அதிகமாக வெளிப்படும். இது மூளையை பாதிக்கும்!

இயர் போன்களை பயன்படுத்துவதன் மூலம் செல்போன் கதிரியக்கத்தில் இருந்து 98% வரை தப்பிக்க முடியும்.

2. வை-பை :

2. வை-பை :

நமது செல்போன் டவர்கள் சரியாக வேலை செய்யாத போது, நமக்கென வீட்டில் இருக்கும், சிறிய செல்போன் டவர், அதாவது வை-பையை பயன்படுத்துவோம். இதுவும் கதிரியக்க தன்மை கொண்டது.

இதன் பாதிப்பிலிருந்து தப்பிக்க, பயன்படுத்தாத போது, வை-பையை அணைத்து வைக்கலாம். அல்லது இணையத்தை ஒயர்களின் மூலமாக பெறலாம்.

3. எலட்ரானிக் ஷேவர் மற்றும் ஹேர் டிரையர்

3. எலட்ரானிக் ஷேவர் மற்றும் ஹேர் டிரையர்

எலட்ரானிக் ஷேவர் மற்றும் டிரையர் ஆகியவற்றை பயன்படுத்தும் போது, இதிலிருந்து வரும் இ.எம்.எஃப் சில பாதிப்புகளை உண்டாக்கும். இதன் பாதிப்புகளில் இருந்து தப்பிக்க, ஹேர் டிரையரை பயனபடுத்தும் போது, மூக்கிற்கும் மற்றும் தலைக்கு ஒரு அடி தூரம் இடைவெளி இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

4. லேப்-டாப்

4. லேப்-டாப்

லேப்-டாப்பில் இ.எம்.எஃப் மற்றும் ரேடியேஷன் என இரண்டுமே இருக்கும். மிக அதிகமாக இது இருந்தால், கருவுறாமை பிரச்சனைக்கு கூட இது வழிவகுக்கும்.

5. மைக்ரோ வேவ் ஓவன்

5. மைக்ரோ வேவ் ஓவன்

மைக்ரோ வேவ் ஓவனில் அதிகமான கதிரியக்கம் இருக்கும். இது உடலுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். மிக நீண்ட நேரம் மைக்ரோவேக் ஓவனை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. மைக்ரோவேவ் கதிரியிக்கத்தில் இருந்து தப்பிக்க உதவும் கவசத்தை பயன்படுத்துவது சிறந்தது....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

radiation sources at your home

radiation sources at your home
Story first published: Monday, August 7, 2017, 17:21 [IST]