For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடலுறவின் போது முன்கூட்டியே விந்து வெளியேறுவதைத் தடுக்க வேண்டுமா? இத ஒரு மாதம் குடிங்க...

இங்கு முன்கூட்டியே விந்து வெளியேறுவதைத் தடுக்கும் வெண்டைக்காய் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

|

பெரும்பாலான ஆண்கள் சந்திக்கும் ஓர் பாலியல் பிரச்சனை தான் முன்கூட்டியே விந்து வெளியேறுவது. இப்பிரச்சனையால் பல ஆண்களால் தங்களது துணையை முழுமையாக திருப்திப்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. துணையைத் திருப்திப்படுத்த முடியவில்லையே என்ற கவலை அதிகரித்து, மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர்.

Lady's Finger To Stop Premature Ejaculation

ஆனால் இந்த பிரச்சனைக்கு ஓர் அருமையான தீர்வு உள்ளது. அதைப் பின்பற்றினால், நிச்சயம் விரைவில் இப்பிரச்சனைக்கு தீர்வு காண முடியும். சரி, இப்போது உடலுறவில் ஈடுபடும் போது முன்கூட்டியே விந்து வெளியேறுவதைத் தடுக்கும் ஓர் அற்புத பானம் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெண்டைக்காய்

வெண்டைக்காய்

மார்கெட்டில் விற்கப்படும் பொதுவான காய்கறிகளுள் ஒன்று தான் வெண்டைக்காய். நாட்டு மருந்துக் கடைகளில் இந்த வெண்டைக்காயின் பொடி விற்கப்படுகிறது. இந்த வெண்டைக்காய் பொடி முன்கூட்டியே விந்து வெளியேறுவதைத் தடுக்கும்.

தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

* வெண்டைக்காய் பொடி

* பனங்கற்கண்டு

* வெதுவெதுப்பான நீர்

தயாரிக்கும் முறை:

தயாரிக்கும் முறை:

ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில், சிறிது வெண்டைக்காய் பொடி மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து கலந்து, தினமும் குடிக்க வேண்டும்.

குறிப்பு

குறிப்பு

இந்த பானத்தை தினமும் குடிப்பதால் எவ்வித பக்கவிளைவும் ஏற்படாது. குறிப்பாக ஒரு மாதம் தொடர்ந்து இந்த பானத்தைக் குடித்து வந்தால், இப்பிரச்சனையில் இருந்து சற்று தீர்வு கிடைத்திருப்பதை உணர்வீர்கள். அதிலும் வெண்டைக்காயை ஆண்கள் அடிக்கடி உணவில் சேர்த்து வருவதன் மூலம், பாலியல் பிரச்சனை வராமல் தடுக்க முடியும்.

மேலும் சில அத்தியாவசிய உணவு நிபந்தனைகளைப் பின்பற்றுவதன் மூலம், முன்கூட்டியே விந்து வெளியேறுவதைத் தடுக்கலாம். அவையாவன:

#1

#1

பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் சர்க்கரை அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

#2

#2

ஆல்கஹால், சிகரெட் மற்றும் இதர போதைப் பொருட்களின் உபயோகத்தை முற்றிலும் கைவிட வேண்டும்.

#3

#3

காப்ஃபைன் நிறைந்த பொருட்களை, அதுவும் காபியை ஆண்கள் அதிகம் குடிக்கவே கூடாது.

#4

#4

அன்றாட உணவில் பழங்கள் மற்றும் காய்கறிகளை தவறாமல் போதுமான அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

#5

#5

முன்கூட்டியே விந்து வெளியேறும் பிரச்சனையில் கனிமச்சத்துக் குறைபாடுகள் முக்கிய பங்கை வகிக்கிறது. எனவே மீன், கடல் சிப்பி, நண்டு மற்றும் இதர கனிமச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை டயட்டில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Lady's Finger To Stop Premature Ejaculation

Lady’s finger is available as a powder that helps in treating premature ejaculation. Read on to know more...
Story first published: Tuesday, March 14, 2017, 9:37 [IST]
Desktop Bottom Promotion