தினமும் நீங்கள் எத்தனை புஷ் அப் பயிற்சி செய்யலாம் என்று தெரியுமா?

Written By:
Subscribe to Boldsky

புஷ் அப் உடற்பயிற்சி செய்வது மிகவும் ஆரோக்கியமானதாகும். இதனை செய்வதால் உடல் மிகவும் வலிமையாகிறது. தினசரி வேலைகளை செய்வதற்கு தேவையான சத்துக்கள் கிடைக்கின்றன. உடலை திடமாகவும், தொப்பை இல்லாமலும் வைத்துக்கொள்ள இந்த உடற்பயிற்சி உதவுகிறது. இந்த பகுதியில் ஒரு நாளைக்கு எத்தனை புஸ் அப் உடற்பயிற்சியை செய்யலாம் என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிரபலமானது!

பிரபலமானது!

உடற்பயிற்சியில் மிகவும் பிரபலமானது இது தான். இதனை செய்யும் போது சதைப்பகுதிகள் தேவையான இடத்தில் கட்டுக்கோப்பாக அமைகிறது. தினசரி இதனை செய்யலாம். இதனை செய்ய தரை அல்லது சுவர் மட்டுமே போதுமானது என்பதால், இதனை வீட்டிலேயே செய்யலாம். இது முக்கியமாக மார்பு பகுதி மற்றும் உடலின் மேல் பகுதிகளை வளப்படுத்த செய்யப்படுகிறது.

எத்தனை புஷ் அப்?

எத்தனை புஷ் அப்?

உண்மையில் ஒருநாளைக்கு இத்தனை புஷ் அப் தான் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. இது ஒருவரின் உடல் வலிமை மற்றும் சக்தி சார்ந்தது. ஒரு ஆரோக்கியமான 25 வயது ஆண் 39 புஷ் செய்யலாம். அதே நபரால் தினசரி இதனை செய்யும் போது 54 அல்லது அதற்கு மேல் கூட செய்ய முடியும். 50 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் 21 புஷ் அப் செய்வது நல்லது.

பெண்களுக்கு?

பெண்களுக்கு?

பெண்களும் இந்த புஷ் அப் உடற்பயிற்சியை செய்கின்றனர். 25 வயது மதிப்புடைய ஒரு பெண் 25 புஷ் அப் செய்யலாம். முயன்றால் அதற்கு மேலும் கூட செய்ய முடியும்.

மார்பு பகுதியை மேம்படுத்த

மார்பு பகுதியை மேம்படுத்த

உங்களது மார்பு பகுதி மற்றும் தோள் பகுதியை மேம்படுத்த விரும்பினால் இந்த புஷ் அப் உடற்பயிற்சி மிகவும் உதவியானதாக இருக்கும். உடனடியாக இதில் பலன் காண முடியாது. நீங்கள் தினசரி இந்த உடற்பயிற்சியை செய்து வந்தால் கட்டாயம் நல்ல பலன் கிடைக்கும்.

சுவரில் செய்வது!

சுவரில் செய்வது!

ஆரம்ப நிலையில் இருப்பவர்கள், சுவற்றில் கைகளை வைத்து, கைகளின் உந்துதல் மூலம் முன்னும் பின்னும் சென்று வரலாம். இதனை 12 தடவை, நாளுக்கு மூன்று முறைகள் செய்யலாம். இதில் நன்றாக உணர்ந்த உடன் நீங்கள் தரையில் செய்யும் புஷ் அப் உடற்பயிற்சிக்கு செல்லலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How many push ups you need every day

How many push ups you need every day
Story first published: Wednesday, September 13, 2017, 16:48 [IST]
Subscribe Newsletter