நவராத்திரி விரதத்தின் போது வரும் அசிடிட்டியை விரட்ட சாப்பிட வேண்டிய உணவுகள்!

Written By:
Subscribe to Boldsky

நவராத்திரி காலத்தில் விரதம் இருப்பது சிறப்பு. விரதம் என்பது அருளை மட்டும் தராமல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது. ஆனால் விரதம் இருக்கும் போது எதுவுமே சாப்பிடாமல் இருந்தால் உங்களது ஆரோக்கியம் முற்றிலுமாக குறைந்துவிடும். முதல் முதலாக விரதம் இருப்பவர்களுக்கு எதுவுமே சாப்பிடாமல் இருந்தால், அசிடிட்டி பிரச்சனை உண்டாகும். இந்த அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட என்னென்ன உணவுகளை சாப்பிடலாம் என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வாழைப்பழம்

வாழைப்பழம்

வாழைப்பழம் அசிடிட்டிக்கு எதிரான ஒன்று. இதில் அதிகளவு பொட்டாசியம் உள்ளது. இது அசிடிட்டிக்கான அறிகுறிகளை குறைக்கிறது. இது உடலில் உள்ள பி.எச் அளவை நிலையாக வைத்திருக்க உதவுகிறது. மேலும் இதில் அதிகளவு நார்ச்சத்து உள்ளது. எனவே நீங்கள் விரத நாட்களில் வாழைப்பழத்தை சாப்பிடலாம்.

இளநீர்

இளநீர்

இளநீரில் எண்ணிலடங்காத ஆரோக்கிய நன்மைகள் உள்ளது. இது மிகவும் சுகாதாரமான பானமும் கூட, இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி உடலை தூய்மையாக வைத்துக்கொள்ள உதவுகிறது. இது அசிடிட்டிக்கு ஒரு வேகமான தீர்வாக உள்ளது.

குளிர்ந்த பால்

குளிர்ந்த பால்

குளிர்ந்த பால் உங்களது வயிற்றிற்கு மிகவும் நல்லது. இது அதிகமாக உள்ள ஆசிட்டை உறிஞ்சுகிறது. இதனால் வயிற்றில் எரிச்சல் இல்லாமல் இருக்கும். உங்களுக்கு அசிடிட்டி வருவது போல தோன்றினால் நீங்கள் ஒரு கப் குளிர்ச்சியான பாலை குடித்துவிடுங்கள்.

தயிர் / மோர்

தயிர் / மோர்

அசிடிட்டியால் அவதிப்படுபவர்களுக்கு பால் பொருட்கள் ஒரு உன்னதமான பரிசாகும். இவை உங்களது வயிற்றில் உண்டாகும் எரிச்சலை குணப்படுத்துகின்றன. இது எளிதாக செரிமானமாக கூடியதும் கூட..

சுடு தண்ணீர்

சுடு தண்ணீர்

சில சமயம் நமக்கு மிகவும் எளிதான மருத்துவமாகவும் அமைகிறது. இது பல ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாக்க உதவுகிறது. இது அசிடிட்டியை தடுப்பது மட்டுமில்லாமல், நெஞ்செரிச்சலையும் தடுக்கிறது. இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

how to escape from acidity during navratri

how to escape from acidity during navratri
Story first published: Tuesday, September 26, 2017, 15:16 [IST]