பல் வலி வராமல் இருக்க இதனை எல்லாம் சாப்பிடுங்க!

Posted By:
Subscribe to Boldsky

பி்றரை தைரியமாக எதிர்கொள்ள நமக்கு தன்னம்பிக்கை மிகவும் அவசியமான ஒன்று. தன்னம்பிக்கையை நம்முடைய அனுபவத்தால், தோற்றத்தால் கொண்டு வரலாம். அந்த தன்னம்பிக்கையை அளிக்கும் பல விஷயங்களில் ஒன்றாக இருப்பது நம்முடைய தோற்றம். பற்கள்... பற்களில் இருக்கும் கறைகளால் நிம்மதியாக வாய்விட்டு சிரிக்க கூட முடியாது.

விதவிதமான உணவுகளை சாப்பிடுகிறோம். ஆனால் பற்களின் ஆரோக்கியத்திற்கு ஏதாவது முயற்சி எடுக்கிறோமா என்றால் இல்லை என்பது தான் பதிலாக இருக்கும். பற்களுக்கு அடிப்படை ஆரோக்கியத்தை பராமரித்தாலே போதும் அதைத்தவிர தனிப்பட்ட முறையில் விஷேச கவனங்கள் எல்லாம் தேவையில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அதிக ஃபைபர் :

அதிக ஃபைபர் :

உணவுகளில் அதிக ஃபைபர் இருக்கும் உணவுகளை நிறைய எடுத்துக் கொள்ளுங்கள். ப்ரோக்கோலி,காலிப்ளவர்,முட்டைகோஸ் போன்றவை சாப்பிடலாம்.

இவற்றில் கால்சியம் மற்றும் பாஸ்பேட் இருக்கிறது. இது வாயில் சுரக்கும் அமிலத்தை அதிகப்படுத்துகிறது. இது உணவை விரைவாக கடித்து முழுங்க பயன்படும்.

சீஸ் :

சீஸ் :

சீஸ்ஸில் கால்சியம் இருக்கிறது. இவை பற்களுக்கு தேவையான மினரல்ஸ் கிடைக்கச் செய்திடும். அதோடு பற்களின் நிறத்தை பாதுகாக்கும்.

இதைத் தவிர பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை சாப்பிடலாம்.

விட்டமின் சி :

விட்டமின் சி :

உங்களுடைய டயட்டில் விட்டமின் சி குறைவாக இருந்தால் அவை பற்களுக்கு பாதிப்பை உண்டாக்கும். விட்டமின் சி பற்களுக்கும் எலும்புகளுக்கும் மிகவும் நல்லது.

ஆரஞ்சு, திராட்சை, ஸ்ட்ராபெர்ரீ,கிவி,கேரட் போன்றவற்றை அடிக்கடி எடுத்துக் கொள்ளுங்கள். காய்கறி மற்றும் பழங்களை சாலட் அல்லது ஜூஸ் செய்து சாப்பிடுவதை விட கடித்து, மென்று சாப்பிடுவது தான் நல்லது.

சுகர் ஃப்ரீ கம் :

சுகர் ஃப்ரீ கம் :

மருந்து கடைகளில் கிடைக்கும். இதனை மென்று கடிப்பதால் பற்களின் ஓரங்களில் ஒட்டியிருக்ககூடிய மிகவும் மெல்லிய உணவுப்பொருளைக் கூட எளிதாக எடுத்துவிட முடியும்.

வாய்க்கும் புத்துணர்ச்சியை அளித்திடும். பாக்டீரியா வளர்சியை தடுக்கும் என்பதால் பற் சொத்தை, பற் குழி போன்றவற்றிலிருந்து தப்பிக்கலாம்.

டீ :

டீ :

டீயில் க்ரீன் டீ உடல் நலத்திற்கு மிகவும் நல்லது என்று சொல்லப்படுகிறது. இதே போல ப்ளாக் டீ பற்களுக்கு மிகவும் நல்லது, ப்ளாக் டீயில் பாலிஃபினால்ஸ் இருக்கிறது. இவரை பாக்டீரியாவை கொன்றிடும்.

இதனால் பற்களுக்கு பாதிப்பை உண்டாக்கும் அமிலம் சுரக்காது.

 அசைவம் :

அசைவம் :

ஆட்டுக்கறி, மீன் போன்றவற்றில் பாஸ்பரஸ் அதிகமிருக்கும் இவை பற்களின் எனாமலை பாதுகாத்திடும். சைவ உணவு சாப்பிடுகிறவர்கள் என்றால் பச்சைக் காய்கறிகள், பீன்ஸ் மற்றும் தானியங்களை எடுத்துக் கொள்ளலாம்.

நட்ஸ் :

நட்ஸ் :

பற்களுக்கு தேவையான விட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸ் நட்ஸ்களில் அதிகமிருக்கின்றன. வேர் கடலையில் கால்சியம் மற்றும் விட்டமின் டீ இருக்கிறது. பாதாமில் கால்சியம் இருக்கிறது. முந்திரி சாப்பிட்டால் வாயில் எச்சில் சுரப்பு அதிகரிக்கும்.

வால்நட்டில் ஃபைபர், இரும்புச்சத்து, மக்னீசியம்,ஃபோலிக் ஆசிட் இருக்கிறது. இவை ஈறுகளை வலுப்படுத்தும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Foods for Oral Health

Foods for Oral Health
Story first published: Thursday, September 14, 2017, 14:01 [IST]
Subscribe Newsletter