For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நோயே இல்லாம வாழனும்னா இதை நீங்க கட்டாயம் தினமும் பார்க்கனும்!!!

ஆரோக்கியமாக 100 வயதுவரை வாழ மிக அடிப்படைத் தேவையானது ஒன்று சூரியன். சூரியனின் சத்தை நாம் முழுமையாக பெற செய்ய வேண்டியதை இந்த கட்டுரையில் காணலாம்.

By Gnaana
|

நம்மிடம் இருக்கும் வளங்களைப் பற்றி, நாம் பொருட்படுத்துவதில்லை, மாறாக நமக்கு கிடைக்காததையே, நாம் பெரிதும் எண்ணி, அதனால் உடல் மனநல பாதிப்புகளுக்கு ஆளாகிறோம்.

பகல் நேரங்களில்கூட, சூரியனைப்பார்ப்பதே அரிதான குளிர்பிரதேசங்களான மேலை நாடுகளில், சூரியக்கதிர்கள் அவர்கள் உடல் மீது பட்டால் மட்டுமே, அவர்களின் சருமம் மற்றும் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும், இதன் காரணமாகவே, உடலுக்கு தேவையான உயிர்ச்சத்து மிக்க காலை சூரியஒளியை அடையவே, அவர்கள் சூரியக் குளியல் இருப்பர்.

அந்த ஒருவிசயத்தில் நம்மைப்பார்த்து அவர்கள் வருந்துவர், அவர்கள் தேடி அடையும் சூரியஒளி, நமக்கு இயல்பாகக் கிடைக்கிறதே, என்பதால்தான். இதுவே, நமது கட்டுரையின் ஆரம்ப வரிகளுக்கு, காரணமானது!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 என்ன இருக்கிறது சூரிய ஒளியில்?

என்ன இருக்கிறது சூரிய ஒளியில்?

உலகில் தோன்றிய உயிர்கள் யாவும், வளர்ச்சி அடைய சூரிய ஒளி அவசியம் தேவை, அதுபோல, மனித வாழ்வில் தினசரி வாழ்வியல் கடமைகளை ஆற்ற, சில உயிர்ச்சத்துகள் தேவை, இந்த உயிர்ச்சத்துகள் நமக்கு காய்கறிகள், கீரைகள், பழங்கள், மீன்கள், இறைச்சி, தானியங்கள் மூலம் கிடைத்து வருகிறது. மேலும், உடல் இயக்கத்துக்கு தேவையான உயிர்ச்சத்துக்களை, தினசரி உணவின் மூலம் மட்டுமே பெறமுடியும்.

புரதங்கள், தாதுக்கள், வைட்டமின்கள் போன்ற உயிர்ச்சத்துக்கள் நமக்கு உணவின் மூலம் கிடைத்தாலும், ஒரு உயிர்ச்சத்து மட்டும் நமக்கு உணவின் மூலம் அதிகம் கிடைக்காது.

எப்படி கிடைக்கும் ?

எப்படி கிடைக்கும் ?

அந்த அத்தியாவசிய உயிர்ச்சத்தை, நாம் சூரிய ஒளியின் மூலம் மட்டுமே அடையமுடியும். அதனால்தான் மேலைநாட்டினர், அந்த உயிர்ச்சத்தை அடையவே, கடற்கரைகள், மலை அடிவாரங்கள் போன்ற இடங்களைத் தேடிச்சென்று, சூரியக்குளியல் இருப்பர். சூரியக்குளியல் என்பது, சூரியனின் கதிர்கள் தங்கள் உடல் மீது படுமாறு, குறைந்த ஆடைகளோடு, படுத்தோ அமர்ந்தோ இருப்பதாகும். நாம் தினசரி காலை வேளைகளில், சற்றுநேரம் நடந்தாலே, அந்த உயிர்ச்சத்து நமக்குக் கிடைத்துவிடும்.

எதில் அதிகம் ?

எதில் அதிகம் ?

இந்த சூரியஒளியினால் மட்டுமே, நமது உடலுக்கு முக்கிய ஆற்றலாக விளங்கும் வைட்டமின் D சத்து கிடைக்கிறது. சூரிய ஒளியின் மூலம் கிடைக்கும் இந்த வைட்டமின் Dயை, வேறு வகையில் நாம் அடையமுடியாது, செயற்கை முறையில் கிடைத்தாலும், இயற்கையின் வீரியம் அதில் இருக்காது என்பதே, உண்மை.

மற்ற எந்தஒரு சத்தையும் நாம் உணவுகளின் மூலம் எடுத்துக்கொள்ளலாம், ஆயினும், வைட்டமின் Dயை, சூரிய ஒளியின் மூலம் மட்டுமே, முழுமையாக அடையமுடியும் என்பதே, நாடுகள், மொழிகள், இனங்கள், மேலோர், கீழோர் என எல்லா நிலைகளையும், தன்னில் பொதுவாக்கிய இயற்கையின் நியதியானது!.

வைட்டமின் D எதற்காக நமக்கு தேவை?

வைட்டமின் D எதற்காக நமக்கு தேவை?

உடலின் வனப்புக்கும், ஆரோக்கியத்துக்கும் முக்கிய காரணிகளாக விளங்குபவை, எலும்புகள். அந்த எலும்புகள் உறுதியடைய நமக்கு வைட்டமின் D அவசியம் தேவை. குழந்தைகளின் எலும்பு வளர்ச்சியை தூண்டி, வயது மூத்தோரின் எலும்பு தேய்மானத்தை சரியாக்க, எலும்பு புற்றுவியாதி வராமல் காக்க, இரத்த ஓட்டத்தை சீராக்கி, இரத்த அழுத்த பாதிப்புகளை சரிசெய்ய, உடல் சரும பாதிப்புகள் அகல, உடல் திசுக்களின் வளர்ச்சியை அதிகரிக்க, சிறுநீரக இயக்கத்தை வலுவாக்க, நமக்கு அத்தியாவசிய தேவையாக அமைவது, வைட்டமின் D.

உடலில் இயங்கும் உயிர்வேதி வினைகளுக்கு அடிப்படையாக, வைட்டமின் D விளங்குகிறது. சுவாச பாதிப்பால் ஏற்படும் சளித்தொல்லை மற்றும் மன நலம் சார்ந்த பாதிப்புகளை போக்குகிறது.

வைட்டமின் D, பொதுவாக பால், காய்கறி மற்றும் மீன் போன்ற அசைவ உணவுகளில் கிடைத்தாலும், பெருமளவு கிடைப்பது, சூரியஒளியின் மூலம்தான்.

வைட்டமின் D உடலுக்கு கிடைக்காவிட்டால்?

வைட்டமின் D உடலுக்கு கிடைக்காவிட்டால்?

உடலில் முக்கியமான எலும்பான முதுகு தண்டெழும்புத் தொடர்களில் பாதிப்புகள் மற்றும் பற்கள், கணையத்தில் கோளாறுகள் ஏற்படும். உடல்சோர்வு மற்றும் தளர்ச்சியின் காரணமாக, உடலின் மூப்புத்தன்மை அதிகரித்து, இயல்பான வயதின் தன்மை மறைந்து, வயோதிக நிலை உண்டாகும்.

விட்டமின் டி குறைபாடு :

விட்டமின் டி குறைபாடு :

இரத்த அழுத்த, சர்க்கரை பாதிப்புகள் உள்ளவர்களுக்கு, வைட்டமின் D குறைபாடு காணப்படும்.

ரிக்கட்ஸ் :

ரிக்கட்ஸ் :

ரிக்கட்ஸ் எனும் வியாதி உண்டாக, வைட்டமின் D குறைபாடே காரணமாகும். வைட்டமின் D செயலிழப்பால், எலும்புகளில் உள்ள கால்சியம் அரிக்கப்பட்டு, எலும்புகள் வலுவிழக்கின்றன, இரத்தத்தில் இரும்புச்சத்து, புரதச்சத்து குறைந்து, இரத்த சமநிலை பாதிப்படைகிறது, இந்தக்குறைபாடே, மேலை மருத்துவத்தில், ரிக்கட்ஸ் வியாதி எனப்படுகிறது.

நோய் பாதிப்பு :

நோய் பாதிப்பு :

கூன் விழுந்த முதுகால், நிமிர்ந்து நடக்க முடியாமல் குனிந்தபடியே நடப்பவர்கள், முன்பக்கம் தலை பெருத்து இருப்பவர்கள், உடல் மூட்டுகள் வீங்கி இருப்பவர்கள், எலும்புருக்கி வியாதி எனப்படும் நெஞ்சு எலும்புகள் தேய்மானம் உள்ளவர்கள் எல்லாம், ரிக்கட்ஸ் வியாதியால் பாதிப்படைந்தவர்கள் என்று கருதப்படுகிறது.

புற்றுவியாதி :

புற்றுவியாதி :

இதுமட்டுமல்ல, புற்றுவியாதி, இதய பாதிப்புகள், சர்க்கரை பாதிப்புகள் போன்ற இன்றைய வியாதிகளுக்கும் காரணமாகிறது, வைட்டமின் D சத்து குறைபாடு.

நோய் எதிர்ப்பு :

நோய் எதிர்ப்பு :

நடுத்தர வயதினருக்கு ஏற்படும் வியாதிகள் எதிர்ப்பு பாதிப்பிற்கு, வைட்டமின் D குறைபாடு காரணமாக இருக்கிறது. மகப்பேறின்மை ஆண்மைக்குறைவு பாதிப்புகளும், வைட்டமின் D குறைபாட்டால் ஏற்பட வாய்ப்பிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தற்காலத்தில் ஏன் இந்த வைட்டமின் D குறைபாடுகள் அதிக அளவில் காணப்படுகிறது?

தற்காலத்தில் ஏன் இந்த வைட்டமின் D குறைபாடுகள் அதிக அளவில் காணப்படுகிறது?

நவீன பணி இடங்கள் இந்த பாதிப்புகளுக்கு, பெருங்காரணமாகிவிட்டது. தகவல் தொடர்பு சாதனை யுகத்தில், ஆண்களும், பெண்களும், இருபத்து நான்கு மணி நேர பணிச்சூழலில், முற்றிலும் குளிரூட்டப்பட்ட, வெளிக்காற்று உள் நுழைய முடியாத கான்க்ரீட் கட்டிடங்களில், பணிகளில் இருப்பதும், சூரியனைக் காண முடியாத நேரங்களில் பணியில் இருப்பதும், சூரியன் உதிக்கும் காலங்களில், வீடுகளில் குளிரூட்டப்பட்ட அறைகளில் உறங்குவதுமே, முதல் காரணம்.

விட்டமின் டி குறைப்பட்டிற்கு காரணம் :

விட்டமின் டி குறைப்பட்டிற்கு காரணம் :

உடலுக்கு நன்மைகள் செய்யாத, மேலை உணவு வகைகள், வைட்டமின் D குறைபாடுகளை இன்றைய இளைய தலைமுறையினரிடம் அதிக அளவில் உண்டாக்கிவிட்டது. மேலும், சூரியஒளி கிடைக்காத அடுக்கு மாடிக் குடியிருப்புகள், சூரியஒளி உடலில் பட வாய்ப்பில்லாத குழந்தைகளின் பள்ளிநேரங்கள் மற்றும் மறைந்துபோன மாலை நேர விளையாட்டுக்கள் போன்றவையும் பாதிப்புகளை அதிகரித்துவிட்டன.

முகத்தை முழுவதும் துணிகளால் மூடிக்கொண்டு, கண்களுக்கு மட்டும் இரண்டு திறப்பை வைத்துக்கொண்டு, கைகளுக்கு நீண்ட உறைகள் மாட்டிக்கொண்டு, வாகனத்தில் பறக்கும்போது, ஆற்றல் தரும் சூரியனின் செவ்வொளிக்கதிர்கள் எப்படி இக்கால இளையோர்மேல், படும்? இதோடுகூட, முகம் கைகளில், ஏதேதோ கிரீம்களை வேறு தடவிக்கொள்கின்றனர்.

உணவு வகைகள்

உணவு வகைகள்

பால், முட்டை, வைட்டமின் D சேர்க்கப்பட்ட பழரசங்கள், சிலவகை மீன்கள், இறைச்சி இவற்றின் மூலம் நாம் வைட்டமின் Dயை பெற முடிந்தாலும், இயற்கை முறையில், சூரிய ஒளியின் மூலம் மட்டுமே, உடலுக்குத் தேவையான அளவில், வைட்டமின் D யை அடைய முடியும்.

சூரிய ஒளி :

சூரிய ஒளி :

சூரிய உதயத்தில் இருந்து, உச்சிப்பொழுது நேரம் வரை, சூரியஒளியை உடலில் பெறுவது நலம். சூரியனின் ஒளியில் உள்ள புற ஊதாக்கதிர்கள், உடலில் பட்டு, உடலில் உள்ள சில ஹார்மோன்களைத் தூண்டி, மூளையின் முழு செயல் திறனால், உடலில் உள்ள நலம் செய்யும் கொழுப்பை, வைட்டமின் Dயாக மாற்றுகின்றன.

விட்டமின் டி :

விட்டமின் டி :

சூரியஒளியைப்பெற, வெறும் உடலோடு வீடுகளின் மேல் மாடிகளில் பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் நின்று வரலாம், இல்லையென்றால், ஜன்னல், கதவுகள் வழியே, சூரியஒளி படுமாறு, முகம், கைகால்களை வைத்திருக்கலாம். நீண்ட நேரம் ஒளியில் இருக்கத் தேவையில்லை. தினமும் இவ்வாறு செய்து வர, உடலில் வைட்டமின் D சத்து அதிகரித்து, உடல் பாதிப்புகள் நீங்கும்.

ஆயினும், உடலில், முகத்தில், கைகளில் பூசும் க்ரீம்களை தவிர்க்கவேண்டும், இவ்வாறு பூச்சுக்களை உடல் முகம் கைகளில் தடவிக்கொண்டு வெயிலில் நின்றாலும், வைட்டமின் D முழுமையாக உடலில் சேராது, இந்த கிரீம்கள் சூரியஒளிக்கதிர்களைத் தடுத்து, கிடைக்கும் ஆற்றலை வீணடித்துவிடும்.

 மூத்தோர் செய்யவேண்டியவை:

மூத்தோர் செய்யவேண்டியவை:

உடல் மற்றும் மூட்டுகளில் ஏற்படும் வலி, உடல் தளர்ச்சி, சோர்வு போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால், வைட்டமின் D அளவை பரிசோதித்து அறிந்துகொண்டு, குறைபாடுகள் எனில், சூரியக்குளியல் மூலம், உடல் நலப்பாதிப்புகள் நீங்கி, நலம் பெறலாம்.

வைட்டமின் D ஆற்றலின் தன்மைகள் பற்றிய அலட்சியத்தால், அதிக பாதிப்புகள் அடைந்தாலும், விரைவில் பாதிப்புகள் நீங்கி நலம்பெற முயன்றால், சூரியஒளி உறுதுணை புரியும்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Essential Vitamin source from Sun Bath – Vitamin D.

Essential Vitamin source from Sun Bath – Vitamin D.
Desktop Bottom Promotion