For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விந்து வெளியேற்றத்தின் போது சத்துக்களும் வெளியேறுமா? படிச்சு தெரிஞ்சுக்கோங்க...

இங்கு விந்து வெளியேற்றுவது குறித்து கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

|

சில ஆண்கள் விந்தணுக்களை வெளியேற்றுவதால், உடல் பலவீனாகும் என்று நினைக்கின்றனர். இன்னும் சில ஆண்கள், விந்துவில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளது. ஆகவே விந்து வெளியேறும் போது, உடலில் இருந்து ஏராளமான அளவில் ஊட்டச்சத்துக்களும் வெளியேறுவதாக நினைக்கின்றனர்.

மேலும் சில ஆண்கள், சுய இன்பம் உடல் ஆரோக்கியத்தை பாதிப்பதாக நினைக்கின்றனர். இன்னும் சிலர் ஒவ்வொரு துளி விந்துவிலும் 90 துளிகள் இரத்தம் உள்ளது. ஆகவே விந்து வெளியேறுவதால் இரத்த அளவு குறைவதாக நம்புகின்றனர். ஆனால், இவை அனைத்துமே ஒரு கட்டுக்கதைகள் தான்.

இக்கட்டுரையில் விந்து வெளியேற்றுவது குறித்து கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உண்மை #1

உண்மை #1

சாதாரணமாக ஒரு ஆண் விந்துவை வெளியேற்றும் போது, குறைந்தது 1 டீஸ்பூன் அளவு இருக்கும். ஆனால் இது வயது, முந்தைய விந்து வெளியேற்றம் மற்றும் கிளர்ச்சி நிலை போன்றவற்றைப் பொறுத்து வேறுபடும்.

உண்மை #2

உண்மை #2

ஆண் வெளியேற்றும் ஒரு டீஸ்பூன் விந்துவில் சுமார் 200-500 மில்லியன் விந்தணுக்கள் இருக்கும். இதுவும் ஒரு ஆணின் வயது, உடல் நிலை மற்றும் இதர காரணிகளைப் பொறுத்தது.

உண்மை #3

உண்மை #3

ஆண் வெளியேற்றும் விந்துவில் வெறும் 1% தான் விந்தணுக்கள் இருக்கும். எஞ்சிய விந்துவில் ஃபுருக்டோஸ், அஸ்கார்பிக் அமிலம், நீர், நொதிகள், சிட்ரிக் அமிலம், புரோட்டீன், ஜிங்க் மற்றும் பாஸ்பேட் போன்றவை இருக்கும்.

உண்மை #4

உண்மை #4

பலரும் விந்துவில் கலோரிகள் அதிகம் இருப்பதாக நம்புகின்றனர். ஆனால் ஒரு டீஸ்பூன் விந்துவில் வெறும் 5-7 கலோரிகள் தான் உள்ளது.

உண்மை #5

உண்மை #5

விந்துவை உற்பத்தி செய்வதற்கு உடலுக்கு போதிய நேரம் தேவைப்படுகிறது. ஆனால், விந்துப்பை நிரம்பி வழிந்து, நீங்கள் விந்துவை வெளியேற்றாமல் இருந்தால், உடல் மூளைக்கு சமிஞ்கைகளை அனுப்பும். இதன் மூலம் உடலினுள் பாலுணர்ச்சி தூண்டப்பட்டு, உடனே சுய இன்பம் காண அல்லது உறவில் ஈடுபட தோன்றுகிறது.

உண்மை #6

உண்மை #6

உண்மையில் விந்துவை வெளியேற்றுவது நல்லது தான். ஏனெனில் விந்துவை வெளியேற்றுவதால், ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட விந்து வெளியேற்றப்பட்டு, புதிதாக மீண்டும் விந்து உற்பத்தி செய்யப்படும். சில ஆண்கள் ஒரு நாளைக்கு ஒருமுறையும், இன்னும் சிலர் வாரத்திற்கு ஒருமுறையும் மற்றும் சிலர் மாதத்திற்கு ஒருமுறையும் விந்துவை வெளியேற்றுவார்கள்.

சில ஆண்களுக்கு தூக்கத்திலேயே தானாக விந்து வெளியேறும். இதற்கு காரணம், விந்துப்பை அளவுக்கு அதிகமாக நிரம்பும் போது, உடல் தானாக அதனை வெளியேற்ற முயற்சிக்கும். ஆகவே, சுய இன்பம் காண்பது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு அல்ல. இருப்பினும், அளவுக்கு அதிகமானால், எப்பேற்பட்டதும் கட்டாயம் தீங்கை உண்டாக்கும் என்பதை மறவாதீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Do You Lose Nutrients Through Semen?

Does sperm contain blood? Do you lose nutrients through semen? Read on to know...
Desktop Bottom Promotion