Latest Updates
-
2 மாம்பழமும் 6 பிரட்டும் இருந்தா.. ஸ்கூல் விட்டு வர பிள்ளைகளுக்கு 10 நிமிஷத்துல இந்த ஸ்வீட் செஞ்சு குடுங்க... -
International Yoga Day 2026: சர்வதேச யோகா தினத்தின் வரலாறு என்ன தெரியுமா? இந்த வருட யோகா தினத்தின் சிறப்பு என் -
சனி பகவான் நிலையால் இனி 2027 வரை இந்த 3 ராசிக்காரங்க நல்ல வளர்ச்சியை காண்பார்களாம்! -
ஆந்திரா மெஸ் ஸ்டைல் கோவைக்காய் துவையல் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க -
International Yoga Day 2026: முதுகு வலி அதிகமா இருக்கா? அப்ப இந்த 4 யோகாசனங்களை தினமும் செய்யுங்க.. -
சூரியன் மிதுன ராசி செல்வதால் உருவாகும் ராஜயோகம் இந்த 3 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் கொடுக்கப்போகுதாம் -
சாணக்கிய நீதி படி பெண்கள் இந்த 5 வகை ஆண்களுடன் நட்போ, காதலோ வைத்துக் கொள்ளக்கூடாதாம் - ஜாக்கிரதை -
ஜூன் 15-ல் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 4 ராசிக்கு நிதி, தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படப்போகுது! -
துவரம் பருப்பு தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
இந்த 4 ராசிக்காரங்க எல்லோருக்கும் பிரச்சினைகளை கொடுப்பதற்காகவே பிறந்த ஆபத்தான ஆன்மாக்களாம்
ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களும் ஒருவிதத்தில் தனித்துவமானவர்களாக இருப்பார்கள். சில ராசிகளில் பிறந்தவர்கள் மிகவும் நேர்மறையானவர்களாகவும், மற்றவர்கள் மீது அன்பு செலுத்துபவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் சில ராசிகளில் இதற்கு முற்றிலும் எதிர்மறையான குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இந்த ராசிகளில் பிறந்தவர்கள் பொதுவாக குழப்பத்தை உருவாக்குபவர்களாகவும், எதிர்மறையான சூழலை உருவாக்குபவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் சிக்கலானவர்கள் என்பதால் மிகவும் ஆபத்தானவர்கள் என்று அர்த்தமல்ல, ஏனெனில் இவர்களாலும் மற்றவர்களை நேசிக்க முடியும், அவர்களுக்கு நன்மைகளையும் செய்ய முடியும். இந்த பதிவில் எந்தெந்த ராசிகளில் பிறந்தவர்கள் சிக்கல்களை உருவாக்குபவர்களாகவும், தனித்துவமானவர்களாகவும் இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள், சக்தி மற்றும் உருமாற்றத்தின் கிரகமான புளூட்டோவாலும், செவ்வாயின் உக்கிரமான ஆற்றலாலும் ஆளப்படுகிறார்கள். அவர்கள் தீவிரமானவர்கள், ரகசியமானவர்கள், மற்றும் மற்றவர்களை அடிமையாக்கும் குணம் கொண்டவர்கள். மற்ற ராசிக்காரர்களை விட அவர்கள் நீண்ட காலம் மனக்கசப்புகளை மனதில் வைத்திருக்கும் குணம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு உண்டு.
அவர்களை எதிர்த்தால், திட்டமிட்டு மற்றும் குரூரமான பழிவாங்கும் உணர்வுடன் மற்றவர்களை தாக்குவார்கள். அவர்களின் சந்தேக குணம் மற்றும் பொறாமையில், அவர்களின் சிக்கலான குணம் வெளிப்படுகிறது. மற்றவர்களை அவர்களுக்கேத் தெரியாமல் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்வதில் அவர்கள் சிறந்தவர்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களின் அதிபதி, கிரகங்களின் இளவரசரான புதன் ஆகும். இது அவர்களுக்கு வசீகரத்தையும் நகைச்சுவை உணர்வையும் அளித்தாலும், அனைவரையும் எரிச்சலூட்டும் ஒரு இரட்டைத் தன்மையையும் தருகிறது. ஒரு நிமிடம் அவர்கள் உங்கள் சிறந்த நண்பராக இருப்பார்கள், அடுத்த நிமிடமே அவர்கள் உங்களின் எதிரியாக மாறுவார்கள்.
மிதுன ராசிக்காரர்கள் சமூக பட்டாம்பூச்சியாக இருந்தாலும், அவர்களின் நம்பகத்தன்மையற்ற குணம் அவர்களை அனைவருக்கும் தலைவலியாக மாற்றுகிறது. எந்தவொரு உறவிலும் அர்ப்பணிப்பாக இருப்பது என்பது அவர்களின் அமைதியற்ற மனதிற்கு ஒரு பலவீனமாகத் தோன்றுகிறது, மேலும் புறம் பேசும் அவர்களின் குணம் அவர்களை அனைவருக்கும் பிரச்சினையாக மாற்றுகிறது.
மேஷம்
மேஷ ராசியின் அதிபதியாக இருப்பவர் போர் மற்றும் ஆக்கிரமிப்பின் கிரகமான செவ்வாய் ஆகும். அதனாலேயே அவர்கள் எப்போதும் எதிர்மறையான சூழலை உருவாக்குபவர்களாக இருப்பார்கள். துணிச்சல், லட்சியம் மற்றும் அச்சமின்மை கொண்ட மேஷ ராசிக்காரர்கள், ஒரு எந்த தடை வந்தாலும் அதை கடந்து முன்னேறி செல்வார்கள், அவர்களின் ஒரே இலக்கு வெற்றி மட்டும்தான். எனவே அதற்காக அவர்கள் எந்த குறுக்கு வழியிலும் செல்வார்கள், யாரை வேண்டுமென்றாலும் கீழே தள்ளுவார்கள்.
அவர்களின் சிக்கலான குணம், மனக்கிளர்ச்சி மற்றும் எளிதில் கோபப்படுவதிலிருந்து வருகிறது. மேஷ ராசிக்காரர்கள் அற்பமான விஷயங்களுக்காக சண்டையைத் தொடங்குவார்கள், அர்த்தமில்லாத விஷயங்களுக்குக் கூட சண்டையிடுவார்கள். இதுவே அவர்களை மிகவும் ஆபத்தானவர்களாக மாற்றுகிறது.
மகரம்
மகர ராசிக்காரர்கள் ஒழுக்கம் மற்றும் கர்மாவின் கிரகமான சனியால் ஆளப்படுகிறார்கள், இது அவர்களை ராசி சக்கரத்தின் மிகவும் கடினமானவர்களாக மாற்றுகிறது. அவர்கள் மன உறுதி கொண்டவர்கள், எதார்த்தமானவர்கள் மற்றும் நம்பகமானவர்கள்.
அவர்களின் சிக்கலான குணமே மகர ராசிக்காரர்கள் அக்கறை கொண்டிருந்தாலும், உணர்ச்சியற்றவர்களாகத் தோன்றலாம். அந்தஸ்து மற்றும் வெற்றி மீதான அவர்களின் வெறி பெரும்பாலும் மற்ற எல்லாவற்றையும் விட மேலோங்கி நிற்கிறது. வெற்றிக்காக அவர்கள் எந்த உறவையும் தவிர்ப்பார்கள், யாருக்கு வேண்டுமென்றாலும் துரோகம் செய்வார்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
