மூக்கின் உள்ளே உண்டாகும் பருக்களைப் பற்றித் தெரியுமா? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

பருக்கள் தோன்றுவதை பெரும்பாலும் பெரும்பிரச்சனைகளை எடுத்துக் கொள்வது கிடையாது, ஆனால் அதனை போக்க என்ன செய்ய வேண்டுமோ அதனை மெதுவாக செய்து கொண்டிருக்கிறோம். முகத்தில் பருக்கள் தோன்றினாள் சரி இதுவே உள்ளுருப்புகளில் தோன்றினால், அதுவும் சுவாச வழிப்பாதையில் தோன்றினால்?

சுவாச வழிப்பாதையில் பருக்கள் தோன்றாது என்று நினைக்காதீர்கள். நம் மூக்கின் உட்பகுதியில் பருக்கள் தோன்றுவதற்கான அதிக வாய்ப்புகள்.

Did you know about inner nose pimple?

அதனைப் பற்றிய முழு விவரங்களையும் இந்தக் கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உள் மூக்கில் பரு :

உள் மூக்கில் பரு :

இது ஒரு வகையான இன்ஃபெக்‌ஷனால் ஏற்படக்கூடியது. இதனை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை எடுத்துக் கொள்வதால் இதனை மேலும் வளர விடாமல் தவிர்க்க முடியும்.

சரியாக நேரத்தில் அதனை கணிக்கத் தவறிவிட்டால் பெரிதாகி பெரும் அவஸ்தைகளை உண்டாக்கிடும்.

பருக்கள் :

பருக்கள் :

நம்முடைய சருமத்தில் ஏராளமான துளைகள் இருக்கின்றன. அவற்றிலிருந்து செபாசியஸ் கிளாண்ட் உதவியுடன் எண்ணெய் சுரக்கும்.அப்படிச் சுரப்பதால் தான் சருமம் சாஃப்டாக இருக்கிறது.

சில நேரங்கள் அந்த துவாரங்கள் அடைத்துக் கொள்ளும் இதனால் எண்ணெய் சுரப்பு இல்லாமலும் இறந்த செல்கள் வெளியேற முடியாமல் அப்படியே தங்கிடும் அதனால் தான் சருமத்தில் பருக்கள் தோன்றிடுகிறது.

மூக்கின் உள்ளே :

மூக்கின் உள்ளே :

இதே போல மூக்கின் உள்ளேயும் பருக்கள் தோன்றிடும். அதனை folliculitis என்று அழைப்பார்கள். சிகப்பு அல்லது வெள்ளை நிறத்தில் கொப்புளங்கள் போலத்தோன்றிடும்.

இதற்கு Staphylococcus என்ற பாக்டீரியா தான் மூலக்காரணம்.மூக்கினை அடிக்கடி நோண்டுவது, கைகளை சுத்தமாக கழுவாமல் மூக்கினைத்தொடுவது ஆகியவற்றால் இந்த பாக்டீரியா தொற்று ஏற்படுகிறது.

ஆபத்தானதா?

ஆபத்தானதா?

மூக்கின் உள்ளே இந்தப் பரு தோன்றிய இரண்டு அல்லது மூன்று தினங்களுக்குள் மறைந்திடும். அதையும் தாண்டிச் சென்றால் மருத்துவரிடம் செல்ல வேண்டியது மிகவும் அவசியம்.

அதிலும் தோல் சற்று தடிமானாகவோ அல்லது உங்களுக்கு வலியோ ஏற்ப்பட்டால் அதனை அசால்ல்டாக விட்டுவிடாதீர்கள். ஏனென்றால் அப்படியே விட்டால் cellulitis ஆக அது மாறிடும்.

cellulitis :

cellulitis :

செல்லுலிடிஸ் என்பது ஒரு வகை சரும வியாதி. அது கொஞ்சம் கொஞ்சமாக பரவி நம்முடைய ரத்த நாளங்களையே அழித்திடும்.இதனால் பெரும் பிரச்சனைகள் ஏற்படக்கூடும்

மூளைக்குச் செல்லக்கூடிய ரத்த நாளங்கள் மூக்கின் வழியாகவும் செல்வதால் இந்தப்பருக்களை கொஞ்சம் ஜாக்கிறதையாகத் தான் கையாள வேண்டும்.

அறிகுறிகள் :

அறிகுறிகள் :

இந்தப் பருக்களை நாமாக அடையாளம் கண்டுகொள்ளலாம். இவற்றுடன் சேர்த்து தலைவலி, அல்லது மூக்கின் மடல்களில் வலி, கண் பார்வையில் குறைபாடு ஏற்படுவது,அதீத காய்ச்சல் ஆகிய அறிகுறிகளும் உடன் தெரிந்தால் மருத்துவரிடம் செல்ல வேண்டியது அவசியம்.

சிகிச்சைகள் :

சிகிச்சைகள் :

எம்.ஆர்.ஐ மற்றும் சிடி ஸ்கேன்,ரத்தப்பரிசோதனை மூலமாக உங்களுக்கு என்ன மாதிரியான பாக்டீரியா தொற்று ஏற்ப்பட்டிருக்கிறது என்பதை கண்டறிவார்கள்.

அந்த பருவினைப் பொருத்து, அதன் வளர்ச்சியைப் பொருத்து அதற்கான சிகிச்சை முறைகள் இருக்கும்.

சாதராணமாக வெளியில் தோன்றும் பருக்களை ஹோம்கேர் மூலமாக சரி செய்யலாம் ஆனால் பாக்டீரியா தொற்றினால் ஏற்பட்டிருக்கும் இது போன்ற பருக்களை ஆண்ட்டிபயடிக் மூலமாக மட்டுமே சரி செய்ய முடியும்.

பெரும்பாலும் ஆண்ட்டிபயாட்டிக் மருந்துகளாலும் ஆயின்மெண்ட்களாலும் சரி செய்து விடலாம். மிகவும் அரிதான நேரங்களில் அறுவை சிகிச்சையும் செய்யப்படுவதுண்டு.

வீட்டில் :

வீட்டில் :

மூக்கின் உள்ளே பருக்கள் இருப்பதை நீங்கள் உணர்ந்தால் , அல்லது உங்களுக்கு வலி ஏற்ப்பட்டால் மூக்கில் லேசாக ஒத்தடம் கொடுத்திடுங்கள்.

அரை மணி நேரத்திற்கு ஒரு முறையென இரண்டு மணி நேரம் வரை ஒத்தடம் கொடுத்திடுங்கள்.

இதைத் தாண்டி அதைப் பிய்ப்பதோ,அல்லது நோண்டுவதோ கூடாது. இது அதிகத் தொல்லையை ஏற்படுத்திடும்.

வெப்பம் :

வெப்பம் :

இதன் ஆரம்ப கட்டங்களில் சில யோசனைகளை பின்பற்றி வந்தால் பாதிப்புகளிலிருந்து நீங்கள் தப்பிக்கலாம்.

சூடாக ஒத்தம் கொடுத்திடுங்கள், இது ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.இதனால் பருக்களால் ஏற்படுகிற பாதிப்பு குறைந்திடும். துணியை சூடான நீரில் நனைத்து நன்றாக பிழிந்து விடுங்கள். பின்னர் அந்த துணியைக் கொண்டு வலியிருக்கும் இடத்தில் லேசாக ஒத்தியெடுங்கள்.

டீ ட்ரீ ஆயில் :

டீ ட்ரீ ஆயில் :

டீ ட்ரீ ஆயிலில் இருக்கக்கூடிய ஆண்ட்டி பாக்டீரியல் துகள்கள் பருக்களை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழித்திடும்.அதோடு சருமத்தையும் அழகாக பாதுகாத்திடும்.இது சிறந்த கிளன்ஸராகவும் செயல்படுகிறது.

சருமத்துவாரஙக்ள் அடைத்திருந்தால் அதனை திறந்து விடச்செய்திடும். ஒரு கிளாஸ் தண்ணீரில் இரண்டு சொட்டு டி ட்ரீ ஆயிலைச் சேர்த்திடுங்கள் அதில் காட்டனை டிப் செய்து பருக்கள் உள்ள இடத்தில் தடவிடுங்கள். இதனை ஒரு நாளைக்கு மூன்று முறை செய்திடலாம்.

பற்பசை :

பற்பசை :

அதிக கெமிக்கல் சேராத பற்பசையைத் தான் இதற்கு பயன்படுத்த வேண்டும். ஒரு வேளை உங்களுக்கு சென்சிட்டிவ் ஸ்கின்னாக இருந்தால் பேஸ்ட் பயன்படுத்த வேண்டாம்.

கிராம்பு எண்ணெய் மற்றும் புதினா ஆகியவை இருக்கும் பேஸ்ட் இதற்கு மிகவும் நல்லது.

தேன் :

தேன் :

தேனில் இருக்கும் ஆண்ட்டிசெப்டிக் மற்றும் ஆண்ட்டி மைக்ரோபியல் ப்ராபர்டீஸ் நிறைய இருப்பதால் இவை பாக்டீரியாவை எதிர்த்து போரிடும். சுத்தமான பஞ்சை தேனில் முக்கியெடுத்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வேண்டும்.

பின்னர் இருபது நிமிடங்கள் வரை அப்படியே இருக்க வேண்டும். அதன் பின்னர் கழுவிவிடலாம்.

பால் :

பால் :

பாலில் அல்ஃபா ஹைட்ராக்ஸி அமிலங்கள் நிறைய இருக்கிறது. இவை சருமத்துளைகள் விரிவாக்கிடும் இதனால் இறந்த செல்கள் நீங்கிடும். அதோடு எண்ணெய் மற்றும் அழுக்குகளும் நீக்கப்படுவதால் சருமம் மிகவும் ஸ்மூத்தாக மாறிடும்.

வெள்ளை பிரட்டினை பாலில் ஊற வைத்திடுங்கள். அது நன்றாக பேஸ்ட் பதத்திற்கு ஆனதும் அதனை அப்படியே பரு உள்ள இடத்தில் தடவலாம்.

கற்றாழை :

கற்றாழை :

கற்றாழை குளிர்ச்சியை தரக்கூடியது. சில நேரங்களில் உடலில் அதீத சூடு ஏற்பட்டாலும் இது போன்ற பருக்கள் உண்டாகும்.

அதனால் கற்றாழை ஜெல்லை அப்படியே தடவி சில நிமிடங்கள் காய்ந்த பிறகு கழுவிடலாம். இதனைச் செய்வதால் பருக்களால் உண்டாகியிருக்கும் வீக்கம், வலி,சிவந்திருப்பது ஆகியவை தவிர்க்கப்படும்.

ஒரு நாளைக்கு இரண்டு முறை இப்படிச் செய்யலாம்.

பெட்ரோலியம் ஜெல்லி :

பெட்ரோலியம் ஜெல்லி :

இது மூக்கில் ஏற்படக்கூடிய அதிகப்படியான வறட்சியை தடுத்திடும் அதோடு ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும். பருவினால் உண்டாகும் வலி குறைந்திடும். மேற்புற மூக்கில் தடவிவிடுங்கள். சில நிமிடங்களால் தானாக மறைந்திடும்.

தண்ணீர் :

தண்ணீர் :

உடலுக்கு போதிய அளவு தண்ணீர் கிடைக்கவில்லை என்றாலும் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படும். அதனால் எப்போதும் உங்களை ஹைட்ரேட்டாக வைத்துக் கொள்ளுங்கள்.

குறைந்தது ஒரு நாளைக்கு மூன்று லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். சத்தான காய்கறி சூப்,ஜூஸ் ஆகியவை குடிக்கலாம்.

ஸ்ட்ரஸ் :

ஸ்ட்ரஸ் :

இது மிகவும் முக்கியமானது. மனதளவில் நமக்கு ஏற்படக்கூடிய ஸ்ட்ரஸினால் ஏராளமான உடல் நல பாதிப்புகளை சந்தித்துக் கொண்டிருக்கிறோம். இது நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்திடும்.

அதோடு உணவுப் பொருள்களிலிருந்து சத்துக்கள் உறிஞ்சப்படுவதையும் தடுத்திடும். இதனால் உள்ளுறுப்புகள் செயல்படுவதில் பெரும் சிரமங்கள் உண்டாகும்.

எப்போதும் மனதளவிலும், உடலளவிலும் ஆரோக்கியத்துடன் இருங்கள்.உடற்பயிற்சி, யோகா போன்றவற்றை செய்திடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Did you know about inner nose pimple?

Did you know about inner nose pimple?
Story first published: Thursday, November 23, 2017, 18:28 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter