For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அசிடிட்டிக்கு அடிக்கடி மாத்திரை எடுக்கும் நபரா நீங்கள்?

உணவுக்குழாயை ஆரோக்கியமாக பராமரிக்க பயனுள்ள தகவல்கள்

|

சாப்பிட்டவுடன் படுக்ககூடாது என்று பலரும் சொல்லக் கேள்விப்பட்டிருப்போம். அதற்கான காரணம் தெரியுமா? நாம் உட்கொள்ளும் உணவை செரிமானத்துக்கு உகந்ததாக மாற்ற, இரைப்பையில் ஹைட்ரோகுளோரிக் அமிலம் சுரக்கிறது. சாப்பிட்டவுடன் படுக்கும்போது, இந்த அமிலம் உணவுக்குழாயில் பயணிக்க வாய்ப்பு அதிகம். அதாவது, மேல்நோக்கியும் பின்னோக்கியும் அமிலங்கள் போகும். இதனால், உணவுக்குழாய் பாதிக்கப்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நெஞ்செரிச்சல் :

நெஞ்செரிச்சல் :

உணவுக்குழாயின் தசைகள் காரமான, சூடான, குளிர்ச்சியான உணவுகளைத் தாங்குமே தவிர, அமிலத்தின் வீரியத்தைத் தாங்கும் சக்தி அவற்றுக்கு இல்லை.

இந்த அமில அலைகள் அடிக்கடி மேலேறி வரும்போது அங்குள்ள திசுப்படலத்தை அரித்துப் புண்ணாக்கிவிடும். இதனால் அழற்சி ஏற்பட்டு நெஞ்செரிச்சல் உண்டாகும்.

மிகவும் இனிப்பான, காரமான, கொழுப்பு மிகுந்த உணவுகளை அடிக்கடி சாப்பிட்டால், உணவுக்குழாயின் கீழ்முனை ‘தொள தொள' வென்று தொங்கி விடும்.

விளைவு, இரைப்பையில் இருக்கும் அமிலம் மேல்நோக்கி வரும்போது அதைத் தடுக்க முடியாமல் உணவுக் குழாய்க்குள் அனுமதித்துவிடும்.

இரைப்பையில் அளவுக்கு அதிகமாக அமிலம் சுரந்தாலும் அது உணவுக்குழாயின் கீழ்ப்பகுதிக்குச் சென்று காயத்தை ஏற்படுத்தும்.

‘அல்சர்' எனப்படும் இரைப்பைப் புண் உள்ளவர்களுக்கு இப்படித்தான் நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது.

அசிடிட்டி மாத்திரை :

அசிடிட்டி மாத்திரை :

அசிடிட்டி என்றதுமே கடைகளில் விற்கும் மருந்துகள் வாங்கி குடிப்பது வழக்கமாக இருக்கிறது. இந்த மருந்துகள் குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டுமே வேலை செய்யும். தொடர்ந்து எடுத்துவந்தால், ஒரு கட்டத்தில் அமிலத்தை சுரக்காமலேயே (HCL Secretion) செய்துவிடுவதுதான் இந்த மருந்துகளின் மிகப் பெரிய பக்கவிளைவு. மேலும், பசியின்மை, மஞ்சள் காமாலை, செரிமானப் பிரச்னை போன்றவையும் ஏற்படலாம்.

அறிகுறிகள் :

அறிகுறிகள் :

உணவுக்குழாய் பாதிப்பு ஏற்படுமானால், திட உணவை விழுங்க கடினமாக இருக்கும்; நெஞ்சு எரிச்சல் இருக்கும். உணவுக்குழாயின் கீழ் உணவு செல்லாமல், அதன் பாதையில் நின்றிருப்பது போன்ற உணர்வு ஏற்படும், வலியும் ஏற்படும்.

நாளுக்கு நாள், உணவு சாப்பிடக்கூடிய தன்மை குறைந்து, முற்றிலுமாக சாப்பிட முடியாத நிலை ஏற்படும். அமிலத் தன்மையுள்ள ஏப்பம் அடிக்கடி வரும்.

ரத்த வாந்தி , தொடர் இருமல் , மூச்சு விட சிரமம் போன்றவை உணவுக்குழாயில் கேன்சர் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் காட்டும்.

அஜாக்கிறதை :

அஜாக்கிறதை :

நெஞ்செரிச்சல்தானே.......தன்னால் சரியாகிவிடும் என்று மட்டும் அலட்சியமாக இருக்க வேண்டாம். இந்தப் பிரச்னை உணவுக் குழாயிலிருந்து வருகிறதா, இதயத்திலிருந்து வருகிறதா என்று தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டியது மிக அவசியம்.

காரணம், சிலருக்கு மாரடைப்பு ஏற்படும்போது ஆரம்ப அறிகுறியாக நெஞ்செரிச்சல் மட்டுமே உண்டாகலாம். இந்தக் குழப்பத்தைத் தவிர்க்க, நெஞ்சில் எரிச்சல் உள்ளவர்கள் நோயின் துவக்கத்திலேயே ‘கேஸ்ட்ரோ எண்டோஸ்கோப்பி' (Gastro endoscopy) மற்றும் இசிஜி (ECG) பரிசோதனைகளைச் செய்து கொண்டால் காரணம் தெரிந்து விடும்.

தொப்பை காரணமா? :

தொப்பை காரணமா? :

உடற்பயிற்சியே இல்லாதது, அமர்ந்த இடத்திலேயே வேலை செய்தல், பரபரப்பான வாழ்க்கை முறை போன்றவை. முக்கிய காரணமாக இருக்கிறது.

உடல் பருமன் அதிகரிப்பதால், வயிற்றுப் பகுதியில் கொழுப்பு அதிகரித்து, தொப்பை உருவாகிறது.

தொப்பை வெளியே இருப்பதோடு, உள் பகுதியில் உள்ள இரைப்பையையும் அழுத்துகிறது. அழுத்தம் அதிகரித்தால், இரைப்பை அமிலம் உணவுக்குழாயின் வால்வுகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

சிகிச்சை முறை :

சிகிச்சை முறை :

உணவுக் குழாயில் ஏற்படும் நோய்களுக்கான சிகிச்சை, அதன் தன்மையைப் பொறுத்து மாறுபடும். உணவுக் குழாயில், மூன்று வகையான நோய்கள் ஏற்படுகின்றன. இதில், அமிலத் தன்மையால் ஏற்படும் புண்களை எளிதாக குணப்படுத்தலாம்.

அக்லேசியா எனப்படும் இரண்டாம் வகை, உணவுக்குழாய் சுருங்கி விரியும் தன்மையில் ஏற்படும் மாற்றம். உணவுக்குழாயில் ஏற்படும் சுருக்கம் (சிரோசிஸ்) மற்றும் வீக்கம், உணவுக்குழாயில் அடைப்பை ஏற்படுத்தும். சில சமயங்களில், இந்த வீக்கத்தை சரி செய்வது கடினமாக இருக்கும். எளிதாக இதை, லேப்ராஸ்கோபிக் சிகிச்சையில் சரி செய்யலாம்.

உணவுக்குழாய் கேன்சர் :

உணவுக்குழாய் கேன்சர் :

உணவுக்குழாய் கேன்சர், ஆரம்ப கட்டத்தில் இருக்குமானால், எளிதாக எண்டோஸ்கோபி முறையிலான அறுவை சிகிச்சை முறையில் குணப்படுத்தலாம். அடுத்த சில கட்டங்களை தாண்டியிருந்தால், பாதிக்கப்பட்ட இடத்தை வெட்டி எடுத்து விட்டு, அங்கு செயற்கை உணவுக் குழாய் பொருத்தப்படும்.

அதிக அளவில் பரவிய கேன்சராக இருந்தால், கீமோதெரபி, கதிர்வீச்சு முறை போன்ற சிகிச்சை முறைகளை கையாள வேண்டிய கட்டாயம் ஏற்படும். இது, கடினமான சிகிச்சையாக இருக்கும்.

தவிர்க்கும் வழிமுறைகள் :

தவிர்க்கும் வழிமுறைகள் :

உங்களுக்குத் தேவையான அளவுக்கு உணவு சாப்பிடுங்கள். ருசிக்காகவோ, மற்றவர்களை திருப்திப்படுத்தவோ சாப்பிடுவதைத் தவிருங்கள். அதிக சூடாக எதையும் சாப்பிடாதீர்கள். காரம் அதிகமாக உள்ள உணவுகளும் வேண்டாம்.

மசாலா கலந்த, எண்ணெய் மிகுந்த, கொழுப்பு நிறைந்த, புளிப்பேறிய உணவு களைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

ஒரே நேரத்தில் வயிறு நிறையச் சாப்பிடுவதைவிட மூன்று அல்லது நான்கு மணிநேர இடைவெளிகளில் சிறிது சிறிதாகச் சாப்பிடலாம்.

அவசரம் அவசரமாக சாப்பிடுவது தவறு. அப்படிச் சாப்பிடும்போது உணவோடு சேர்ந்து காற்றும் இரைப்பைக்குள் நுழைந்துவிடும். இதனால் நெஞ்செரிச்சல் அதிகமாகும்.

ஆகையால், உணவை நன்றாக மென்று,நிதானமாக விழுங்குங்கள்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Are you taking tablets for acidity?

Are you taking tablets for acidity?
Story first published: Tuesday, September 26, 2017, 17:35 [IST]
Desktop Bottom Promotion