For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

24x7 ஸ்மார்ட் போனில் கேம் விளையாடிய 21 வயது இளம்பெண் பார்வை பறிபோனது!

24x7 ஸ்மார்ட் போனில் கேம் விளையாடிய 21 வயது இளம்பெண் பார்வை பறிபோனது!

|

சீனாவின் டொங்குன் பகுதியில் வசித்து வந்தவர் க்ஸியாவோ வு எனும் 21 வயது இளம் பெண். கஹானர் ஆப் கிங்க்ஸ் என்ற ஸ்மார்ட் போன் விளையாட்டை தொடர்ந்து இடைவிடாமல் 24 மணிநேரம் விளையாடி வந்த இவரது கண்பார்வை பறிபோன செய்தி உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

21 YO Goes Blind After 24 Hrs Smart Phone Game Addiction

Image Credit: Sun0769.com

ஹானர் ஆப் கிங்க்ஸ் என்பது ஒரு ஆன்லைன் ஸ்மார்ட் போன் விளையாட்டாகும். இந்த மல்டி ப்ளேயர் விளையாட்டில் மிகுந்த ஆர்வத்துடன் விளையாடி வந்தார் க்ஸியாவோ வு.

எதிர்பாராதவிதமாக அதிக நேரம் கண்களுக்கு மிகுந்த அழுத்தம் கொடுத்து ஸ்மார்ட் போன் திரை கண்டு ஆடியதன் காரணத்தால் இவரது கண்பார்வை பறிபோயுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மருத்துவமனை!

மருத்துவமனை!

இவரை உள்ளூரில் இயங்கி வரும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு க்ஸியாவோ வு ஆர்.எ.ஓ எனப்படும் விழித்திரை இடையூறு பிரச்சனையின் கடை நிலையில் இருக்கிறார் என்பது அறியப்பட்டது.

ஆர்.எ.ஓவின் கடைநிலையில் இருக்கும் போது கண்களுக்கு அதிக அழுத்தம் கொடுக்க கூடாது என்றும், ஸ்மார்ட் போன் திரையை நீண்ட நேரம் கண்களுக்கு அழுத்தம் கொடுத்து பார்த்துக் கொண்டே இருந்த காரணத்தால் க்ஸியாவோ வு-ன் பார்வை பரி போயுள்ளது என்றும் மருத்துவர்கள் கூறினர்.

பைனான்ஸ்!

பைனான்ஸ்!

க்ஸியாவோ வு ஒரு பைனான்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். வேலை நேரம் முடிந்த பிறகு மற்ற வேளையில் ஹானர் ஆப் கிங்க்ஸ் என்ற விளையாட்டை விளையாடுவதில் அதிக ஆர்வம் காட்டியுள்ளார் க்ஸியாவோ வு. அதிக வேலை இல்லை எனில், அவ்வப்போது மொபைலை எடுத்து விளையாட ஆரம்பித்துவிடுவாராம்.

நாள் முழுக்க!

நாள் முழுக்க!

ஒருநாள் அதிகாலை ஆறு மணிக்கு துவங்கி மாலை நான்கு மணி வரை இதே விளையாட்டை விளையாடி வந்துள்ளார் க்ஸியாவோ வு. பிறகு கொஞ்சம் உணவு சாப்பிட்டுவிட்டு நள்ளிரவு ஒரு மணி வரைக்கும் அதே ஆட்டத்தை தொடர்ந்துள்ளார்.

அடிக்ஷன்!

அடிக்ஷன்!

சில சமயங்களில் சாப்பிடுவதற்கு மறந்தும் கூட க்ஸியாவோ வு அந்த விளையாட்டை ஆடிவந்துள்ளார். பெற்றோர் எத்தனையோ முறை கூறியும் நான் அவர்களது பேச்சை கேட்கவில்லை என இப்போது வருத்தப்படுகிறார் க்ஸியாவோ வு.

எட்டு மணிநேரம்!

எட்டு மணிநேரம்!

சராசரியாக ஒருமுறை விளையாட ஆரம்பித்தால் எட்டு மணிநேரம் வரை இந்த விளையாட்டை விளையாடி வந்துள்ளார் க்ஸியாவோ வு. இதனால் இப்போது கண்பார்வை இழந்து தவிக்கிறார் க்ஸியாவோ வு.

கண்களுக்கு அதிக அழுத்தம்!

கண்களுக்கு அதிக அழுத்தம்!

மிக குறுகிய இடைவேளையில் ஒரு பொருளை அதிக நேரம் பார்த்துக் கொண்டே இருப்பது கண்களுக்கு அதிக அழுத்தம் கொடுக்கும்.

இதனால் தான் லேப்டாப், டெஸ்க்டாப், மொபைல் பயன்படுத்துவோர் அரைமணிநேரம் முதல் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை சீரான இடைவேளை எடுத்துக் கொள்ளுங்கள். கண்களுக்கு ஓய்வு அளியுங்கள் என நாங்கள் கூறுகிறோம்.

இன்று அதிகளவு கண் பிரச்சனை வருவதற்கும், தூக்கமின்மை ஏற்படுவதற்கும் இதுதான் காரணம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

21 YO Goes Blind After 24 Hrs Smart Phone Game Addiction

21 YO Goes Blind After 24 Hrs Smart Phone Game Addiction
Story first published: Tuesday, October 10, 2017, 15:43 [IST]
Desktop Bottom Promotion