For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெரிகோஸ் எதனால் ஏற்படுகிறது? இதை சரி செய்யும் மருத்துவ முறைகள் என்னென்ன?

நரம்பு சம்மந்தப்பட்ட கோளாறான வெரிகோஸ் வெயின் பற்றி நீங்கள் அறிந்துக் கொள்ள வேண்டியவை மற்றும் மருத்துவம் பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது.

|

வெரிகோஸ் வெயின் என்பது வயதானவர்களுக்கு உடல் பருமன் அதிகமுள்ளவர்களுக்கு பரவலாக ஏற்பட வாய்ப்பிருக்கும் ஒரு நரம்பியல் பிரச்சனை ஆகும். சாதாரணமாக அல்லாமல், இவர்களது கால் மூட்டு பின்பகுதியில் இருந்து குதிகால் பகுதி வரையில் நரம்பு வெளியே புடைத்துக் காணப்படும்.

சற்றே வீங்கியது போல வெளிப்புற தோற்றத்தில் நன்கு நரம்புகள் தெரியும் . இது காலப்போக்கில் மரத்துப்போன உணர்வு தரும், இரத்த ஓட்டம் பாதிக்கப்படும். இரத்த ஓட்டம் பாதித்தால், உடல் உறுப்புகளின் செயற்திறன் சீராக குறைய துவங்கும்.

இந்த வெரிகோஸ் எதனால் உண்டாகிறது? யாருக்கெல்லாம் இது உண்டாகும் அபாயம் இருக்கிறது? காரணிகள் என்னென்ன? இதற்கான மருத்துவம் என்ன? என்பது பற்றி இனிக் காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெரிகோஸ் வெயின் உண்டாவதன் காரணிகள்!

வெரிகோஸ் வெயின் உண்டாவதன் காரணிகள்!

  1. நோய் எதிர்ப்பு மண்டலம், காயம் அல்லது சிகிச்சை காரணமாக நரம்பில் சேதம் உண்டாவதால் வெரிகோஸ் வெயின் உண்டாகலாம்.
  2. இரத்தம் தடிமனாக தடித்து, இரத்த ஓட்டம் குறைந்து கட்டிகள் உண்டாகியிருந்தால் வெரிகோஸ் வெயின் உண்டாகலாம்.
  3. மரபணு கோளாறுகள்.
  4. உடலில் அதிக அளவில் ஈஸ்ட்ரோஜன் இருந்தால்.

யாருக்கு எல்லாம் வெரிகோஸ் வெயின் அபாயம் அதிகம் இருக்கிறது?

யாருக்கு எல்லாம் வெரிகோஸ் வெயின் அபாயம் அதிகம் இருக்கிறது?

  • வயதானவர்கள்
  • புகைப்பவர்கள்
  • உடல் பருமனாக இருப்பவர்கள்
  • அதிக நேரம் உட்கார்ந்தே வேலை பார்ப்பவர்கள்.
  • புற்றுநோய் உள்ளவர்கள்
  • அறுவை சிகிச்சை செய்துக் கொண்டவர்கள்
  • மூளையில் தாக்கம் / காயம் உண்டானவர்கள்
  • அதிக ஓய்வில் இருப்பவர்கள்
  • பிரசவம் ஆனபிறகு பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் மாற்றத்தால் வெரிகோஸ் வெயின் உண்டாகலாம்.
  • அறிகுறிகள்!

    அறிகுறிகள்!

    1. வெரிகோஸ் வெயின் பாதிப்பு ஏற்படும் நபர்களில் பாதி பேருக்கு எந்த அறிகுறியும் தென்படுவதில்லை.
    2. கால்களின் மூட்டு பகுதிகளில் வீக்கம் உண்டாகும்
    3. வெரிகோஸ் வெயின் உண்டாகப்போகும் இடத்தில் சிவந்து காணப்படுதல் / வலி உண்டாகும்.
    வெரிகோஸ் வெயின் எப்படி கண்டறிவது?

    வெரிகோஸ் வெயின் எப்படி கண்டறிவது?

    • டி- டிம்மர் எனும் இரத்த பரிசோதனை மூலம் கண்டறியலாம்.
    • அல்ட்ராசவுண்ட் மூலம் வெரிகோஸ் வெயின் உண்டாகியிருப்பதை கண்டறிய முடியும்.
    • அபாய காரணிகள், நீங்கள் எடுத்துக் கொள்ளும் மருந்துகள், உங்கள் மருத்துவ அறிக்கை தகவல்கள் போன்றவற்றை வைத்து மருத்துவர்களால் இதை கண்டறிய முடியும்.
    • மருத்துவ முறை #1

      மருத்துவ முறை #1

      டி.வி.டி (DVT) எனப்படும் இரத்த கட்டிகளை உருவாவதை தடுக்கும் சிகிச்சை மூலமாக வெரிகோஸ் வெயினை சரி செய்ய முடியும். இது இரத்த கட்டிகள் உண்டாவதை தடுக்குமே தவிர, உண்டான இரத்த கட்டிகளை அழிக்காது என கூறப்படுகிறது.

      மருத்துவ முறை #2

      மருத்துவ முறை #2

      "Vena cava filter" மூலமாக இரத்த கட்டிகளை உடைத்து அவை நுரையீரல், இதயத்திற்கு செல்லாமல் தடுக்கும் முறை இருக்கிறது. ஆனால், இந்த முறை எமர்ஜென்சி என்றால் மட்டும் தான் மருத்துவர்கள் கையாள்வார்கள்.

      மருத்துவ முறை #3

      மருத்துவ முறை #3

      "Vena cava filter" மூலமாக இரத்த கட்டிகளை உடைத்து அவை நுரையீரல், இதயத்திற்கு செல்லாமல் தடுக்கும் முறை இருக்கிறது. ஆனால், இந்த முறை எமர்ஜென்சி என்றால் மட்டும் தான் மருத்துவர்கள் கையாள்வார்கள்.

      மருத்துவ முறை #4

      மருத்துவ முறை #4

      நீண்ட நேரம் பயணம் செய்யும் போது இறுக்கமான உடை உடுத்த வேண்டாம். ஓரிரு மணி நேரத்திற்கு மேல் ஒரே இடத்தில் உட்காராமல், சில நிமிடங்கள் நடந்து வரலாம். கால்களுக்கு பயிற்சி தர வேண்டியது மிகவும் அவசியம். உடல் பருமன் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

You May Have Deep Vein Thrombosis (DVT), Causes And Symptoms

You May Have Deep Vein Thrombosis (DVT), Causes And Symptoms
Desktop Bottom Promotion