Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
உடலுறவுக்கு பிறகு சிறுநீர் கழிக்க வேண்டியது எவ்வளவு அவசியம் என்று தெரியுமா?
உடலுறவில் ஈடுபடும் போது ஆணுறை, கருத்தடை மாத்திரை (அ) கருத்தடை உபகரணங்கள் பயன்படுத்துவது மட்டுமே பாதுகாப்பானது என்று நாம் கருதிவிட முடியாது. நாம் உடுத்தும் ஆடைகளில் இருந்து, பயன்படுத்தும் படுக்கை, அறை மற்றும் பிறப்புறுப்பு சுத்தமாக வைத்துக் கொள்தல் என பல விஷயங்களில் நாம் கவனமாக இருக்க வேண்டும்.
ஏனெனில், உடலுறவில் ஈடுபடும் போது பெண்களுக்கு தான் அதிகளவில் பிறப்புறுப்பு தொற்று பாதிப்புகள் ஏற்படும் அபாயம் இருக்கிறது. முக்கியமாக இனபெருக்க பாதையில் தொற்றுகள் ஏற்படலாம். உடலுறவில் ஈடுபடும் முன்னரே சிறுநீர் கழித்தவிட்டு சுத்தம் செய்த பிறகு ஈடுபட வேண்டியது அவசியம். இதனால் இனபெருக்க தொற்றுகள் ஏற்படாமல் காக்க முடியும்.....

உடலுறவுக்கு பிறகு சிறுநீர் கழித்தல்
பெண்கள் உடலுறவில் ஈடுபட்ட பிறகு சிறுநீர் கழிக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இதனால் உடலுறவிற்கு பிறகு தொற்றுகள் ஏற்படுத்தும் நச்சுக்கள் இனபெருக்க பாதையை எந்த பாதிப்பும் அடையாமல் பாதுகாக்க முடியும்.

ஆண்களுக்கு பொதுவான பாதை
ஆண்களுக்கு விந்தணு மற்றும் சிறுநீர் கழிக்க பொதுவான பாதை மட்டுமே இருப்பதால் நச்சுக்களும் கூட பெண்களின் இனபெருக்க பாதையினுள் செல்ல வாய்ப்புகள் உள்ளன.

பெண்ணுறுப்பை கழுவ வேண்டும்
உடலுறவில் ஈடுபட்ட பிறகு பெண்ணுறுப்பை கழுவ வேண்டியது அவசியம். இதனால் பெண்ணுறுப்பில் தொற்றுக்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள முடியும்.

சிறுது நேரம் இடைவேளை
உடலுறவில் ஈடுபட்ட உடனே கழுவ வேண்டாம். சிறிது நேரம் கழித்த பிறகு சுத்தம் செய்தல் வேண்டும். ஏனெனில், உடனடியாக பெண்ணுறுப்பை சுத்தம் செய்வதால் சில சமயங்களில் பெண்ணுறுப்பின் நுழைவில் இருக்கும் விந்தணு உட்சென்று கருத்தரிக்கும் வாய்ப்பு இழக்க நேரிடலாம்.

ஆண்களுக்கு வாய்ப்புகள் குறைவு
பெண்களுக்கு சிறுநீர் பாதை மற்றும் இனபெருக்க பாதை வெவ்வேறு ஆகும். எனவே, ஆண்களுக்கு தொற்று ஏற்பட வாய்புகள் குறைவு. ஆனால், ஆண்களுக்கு நாம் மேற்கூறியது போல இரண்டும் பொதுவான பாதையில் வெளியேறுவதால் பெண்களுக்கு தொற்று ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

சிறுநீர் கழித்து சுத்தம் செய்தல்
எனவே, உடலுறவிற்கு ஈடுபடும் முன்னர் மற்றும் பின்னர் சிறுநீர் கழித்துவிட்டு, பிறப்புறுப்பை சுத்தம் செய்துவிடுவது நல்லது. மேலும் பெண்களும் உடலுறவில் ஈடுபட்ட பிறகு சிறுநீர் கழிப்பதால் தொற்றுகள் ஏற்படாமல் தடுக்க முடியும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.



Click it and Unblock the Notifications
