Latest Updates
-
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க..
ஒற்றைத் தலைவலிக்கு நாம் இதுவரை அறிந்திராத சில பாட்டி வைத்தியங்கள்!
தலைவலி!. இது ஒரு வார்த்தை இல்லை. நம்முடைய வாழ்க்கையை சில சமயங்களில் மிகவும் சிக்கலாக்கிவிடும் ஒரு பிரச்சனை. அதிலும் ஒற்றைத் தலைவலி என்பது அனைத்திலும் மேலானது.
பல்வேறு மருத்துவ முறைகள், மாத்திரைகள் போன்றவற்றை முயன்று பார்த்தும், எதற்கும் கட்டுப்படாமல் உங்களின் தலைக்கு உள்ளே தொடர்ந்து வரும் இந்த ஒற்றைத் தலைவலியை விரட்ட நம்முடைய பாரம்பரிய பாட்டி வைத்தியம் இருக்கும் பொழுது கவலை எதற்கு.
வரும் முன் காப்பதே மிகவும் சிறந்த மூலோபாயமானாலும் இந்த ஒற்றைத் தலைவலியை தூண்டி விடும் காரணிகளை கண்டறிந்து தடுப்பது என்பது மிகவும் இயலாத காரியம் ஆகும். உங்களை அறியாமலே, ஒற்றை தலைவலியானது உங்களை ஆட்கொண்டு, நேரம் செல்லச் செல்ல அதிகரிப்பதை நீங்கள் சில சமயங்களில் உணரலாம்.
அத்தகைய நேரங்களில், நீங்கள் ஒரு இருண்ட அறையில் படுக்கையில் படுத்துக் கொண்டே கழிக்கப் போகின்றீர்களா? அல்லது வலி இல்லாத வாழ்க்கையை வாழப் போகின்றீர்களா? இது இரண்டுமே உங்களின் கைகளில் தான் உள்ளது.

உச்சந்தலை மசாஜ்
ஒற்றை தலைவலியை போக்க மிகவும் சிறந்த வழியானது, உங்களுடைய உச்சந்தலையில் மசாஜ் செய்வதே. உங்களுடைய மசாஜ் பொறுப்புகளை கவனித்து கொள்ள மற்றொரு நபர் இருந்தால் ஒரு பிரச்சனையும் இல்லை. அவ்வாறு இல்லையெனில், நீங்களே செய்யக்கூடிய சில வழி முறைகள் உள்ளன.

உச்சந்தலை மசாஜ்
ஒரு அமைதியான அறையில் தனிமையில் அமர்ந்து கொண்டு உங்களுடைய உச்சந்தலையில், உங்களின் விரல்களைப் பயன்படுத்தி மெதுவாக மசாஜ் செய்திடுங்கள். குறைந்த அளவில் அழுத்தம் கொடுத்து சிறிய வட்டங்களாக மசாஜ் செய்திடுங்கள். உங்களுடைய முழு உச்சந்தலையையும் நீங்கள் இவ்வாறு மசாஜ் செய்யலாம். இது உங்களுடைய ஒற்றைத் தலைவலியை விரட்ட உதவலாம்.

சூடான குளியல்
உங்களுடைய ஒற்றைத் தலைவலியை நீக்கும் மற்றொரு சிகிச்சையானது மிகவும் பழமையானது. நீங்கள் ஒரு சூடான குளியல் எடுத்துக் கொள்வது உங்களுக்கு புத்துணர்ச்சி தருவதுடன், உங்களுடைய ஒற்றைத் தலைவலியையும் ஓட ஓட விரட்டி விடும்.

லாவெண்டர் எண்ணெய்
நீங்கள் ஒரு பெண்ணாக இருந்தால், உங்களூடைய குளிக்கும் நீரில், லாவெண்டர் வாசனை எண்ணெயை சேர்ப்பது நல்ல பலன் தரும். சிறிது நேரம் நீரின் அருகே அமர்ந்து, நீரை நன்கு கலக்கி, லாவெண்டரின் வாசனையை நன்கு அனுபவியுங்கள். அது உங்களுடைய தலைவலிக்கு இதம் தரும். உங்களுக்கு வாசனை திரவியம் பிடிக்கவில்லை எனில், சூடான நீரில் கண்டிப்பாக குளிக்க முயற்சி செய்யுங்கள். அது கண்டிப்பாக உங்களூடைய தலைவலிக்கு இதம் தரும்.

ஐஸ் கட்டி ஒத்தடம்
நாம் அனைவரும் முழங்கால் அல்லது முழங்கை காயத்திற்கு ஐஸ் கட்டி கொண்டு ஒத்தடம் கொடுத்திருப்போம். அதையே இப்பொழுது நாம் ஒற்றைத் தலைவலிக்கும் செய்து பார்க்கலாம். உங்களுக்கு ஒற்றைத் தலைவலி வரும் பொழுது ஐஸ் கட்டி கொண்டு மெதுவாக ஒத்தடம் கொடுங்கள். அது உங்களுடைய ஒற்றைத் தலைவலிக்கு கண்டிப்பாக நிவாரணம் தரும்.

ஐஸ் கட்டி ஒத்தடம்
உங்களுடைய உச்சந்தலையில் எங்கு வலி உள்ளதோ, அங்கு ஐஸ் பேக்கை பயன்படுத்தி, ஒத்தடத்தை ஆரம்பிக்கலாம். அது ஒரு நல்ல தொடக்கமாக இருக்கலாம். உங்களிடம் ஐஸ் பேக் இல்லை எனில், ஒரு துணியில் ஐஸ் கட்டிகளைச் சுற்றி ஒத்தடத்தை ஆரம்பிக்கலாம். இது உங்களுடைய உச்சந்தலையை எரிச்சலில் இருந்து பாதுகாக்கும்.

ஐஸ் கட்டி ஒத்தடம்
நீங்கள் இந்த சிகிச்சை முறையை சுமார் 10 அல்லது 15 நிமிடங்கள் வரை தொடர வேண்டும். மேலும் உங்களுக்கு எப்பொழுதெல்லாம் தேவை என நினைக்கின்றீர்களோ அப்பொழுதெல்லாம் இந்த சிகிச்சையைத் தொடரலாம். இது ஒற்றை தலைவலியை போக்க செலவு குறைந்த நம்ம முடியாத சிறந்த இயற்கை சிகிச்சை முறை என நம்பப்படுகின்றது.

குறிப்பு
நீங்கள் இதைத் தவிர்த்து ஏதேனும் பாட்டி வைத்தியத்தைப் பின்பற்றி ஒற்றைத் தலைவலிக்கு பலன் அடைந்திருந்தால், அதை தயவு செய்து கீழே உள்பகுதியில் குறிப்பிட மறக்காதீர்கள்.



Click it and Unblock the Notifications
