வீட்ல யூஸ் பண்ற இந்த பொருட்கள்தான் தைராய்டு பிரச்சனைக்கு காரணம்னு சொன்னா அதிர்ச்சியாவீங்க!

Written By:
Subscribe to Boldsky

தைராய்டு பிரச்சனை ஹார்மோன் பாதிப்பால வருவதுதான். ஆனால் ரயில் தண்டவாளம் போல் சீராக போய்கொண்டிருக்கும் ஹார்மோனில் நாம் உபயோக்கிக்கும் சில கெமிக்கல் பொருட்களால தடம் புரண்டு போய்விடுகிறது.

இப்படி ஹார்மோனில் உண்டாகும் குழப்பத்தால் உடல் நலத்தில் கோளாறு ஏற்படுகிறது.

நீங்கள் சாதரணமாக உபயோகிக்கும் இந்த பொருட்கள் எல்லாம் தைராய்டு ஹார்மோனை பெருமளவு பாதிக்கும் என்பது தெரியுமா? தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 அதென்ன PFOA ?

அதென்ன PFOA ?

PFOA என்பது நான்- ஸ்டிக் பொருட்களில் பூசப்படும் ஒரு ரசாயனம்.

இது கறையை ஏற்படுத்தாதவாறும் எண்ணெய் ஒட்டாதவாறும் பூசப்படுகிற ஒரு தீங்கு விளைவிக்கும் ரசாயனம்.

இந்த ரசாயனம் புற்று நோய், ஆண்மை குறைபாடு, குறைபாடுள்ள குழந்தை பிறத்தல் என பல்வேறு நோய்களை தரும் என்பதொடு முக்கியமான ஹார்மோனான தைராய்டு சுரப்பதிலும் பிரச்சனைகளை உண்டாக்குகிறது என்பது அதிர்ச்சிக்குள்ளான விஷயம்தானே.

பற்களை ஃப்ளாஸ் செய்கிறீர்களா?

பற்களை ஃப்ளாஸ் செய்கிறீர்களா?

சிலர் பற்களின் ஆரோக்கியத்திற்காக பல் மருத்துவரின் ஆலோசனையின்படி தடிமனான நூல் போன்ற இழையில் சுத்தம் செய்வார்கள்.

ஆனால் சில நிறுவனங்கள் இந்த இழையை பாலிஃப்ளூரோனேட்டட் (PFOA) கொண்டுதான் செய்கிறார்கள்.

இந்த இழை மிகவும் ஆபத்தினை தரும். எனவே இதனை தவிர்த்திடுங்கள்.

நான்- ஸ்டிக் பாத்திரங்கள் :

நான்- ஸ்டிக் பாத்திரங்கள் :

நாம் உபயோகித்த மண், செம்பு மற்றும் ஈய பாத்திரங்களை தூர எறிந்துவிட்டோம்.

இப்போது கழுவும் வேலை மிச்சம் என்றும் உடலுக்கு ஆரோக்கியம் என தவறாக நினைத்து நான்- ஸ்டிக் பாத்திரங்களை உபயோகிக்கிறோம்.

அதனை நார் கொண்டு தேய்க்கும்போது அல்லது சமைக்கும் போது கீறினால், சூட்டில் அந்த ரசாயனப் பொருள் சமைக்கும் பொருளுடன் கலந்து உடலுக்கு மோசமான தீங்கை விளைவிக்கும். முக்கியமாய் தைராய்டு பாதிப்பை உண்டாக்கும்.

மழை கோட் :

மழை கோட் :

நீர் ஒட்டாதவரையில் இந்த பாலி ஃப்ளூரோனேட்டட் வேதிப் பொருள் கொண்டுதான் மழைக் கோட், ஷூ, மற்றும் குடை தயார் செய்கிறார்கள்.

இதுவும் பாதிப்புகளை உண்டாக்குகிறது என்ரு வல்லுநர்கள் கூறுகிறார்கள்

பீஸா பாக்ஸ் :

பீஸா பாக்ஸ் :

பீஸா மட்டுமல்லாது பேக் செய்யப்ப்படும் பல உணவுப் பொருட்களின் பெட்டிகள் இந்த வேதிப் பொருள் கொண்டுதான் செய்யப்படுகின்றன. இவைகளையும் தவிருங்கள்.

ஃபர்னிச்சர் மற்றும் விரிப்புகள் :

ஃபர்னிச்சர் மற்றும் விரிப்புகள் :

வாங்கும் சோஃபா, டீபாய், தரை விரிப்புகள் மற்றும் கார் போன்றவை பளபள வென மின்னுவதற்கு உபயோகிக்கப்படும் டெஃப்லான் கோட்டிங் இந்த ரசாயனம் கொண்டே செய்ப்படுகிறது. இவையும் தைராய்டு பிரச்சனையை உண்டாக்கும்.

பேப்பர் தட்டுக்கள் :

பேப்பர் தட்டுக்கள் :

பிளாஸ்டிக் வேண்டாம் என்று கெட்டியான பேப்பர் தட்டுக்களை உபயோகிக்கிறோம்.

நம்புங்கள் அவையும் இந்த ரசாயனத்தால் செய்ப்படுகிறதாம். எது இருந்தாலும் கெடு விளைவிக்காத எவர்சில்வர் பாத்திரங்களியே உபயோகியுங்கள்.

ஷாம்பு :

ஷாம்பு :

நீங்கள் தலைக்கு போடும் ஷாம்புவிலும் இந்த நான்ஸ்டிக் சமாச்சாரம் உள்ளது என தெரியுமா?

கற்பனை செய்து பாருங்கள் இந்த ஷாம்புவை உபயோகித்தால் சருமத்தில் எப்படிப்பட்ட பாதிப்பை உண்டாக்கும் என்று. சீகைக்காய்தானே பெஸ்ட் என் இப்போது நினைக்கிறீர்கள்.

பாப்கார்ன் பாக்கெட் :

பாப்கார்ன் பாக்கெட் :

மைக்ரோவேவில் நேரடியாக உபயோகப்படுத்தப்படும் பாப்கார்ன் பாக்கெட்டிலும் இந்த நான்- ஸ்டிக் ரசாயன பொருட்கள் உள்ளன. அதனால்தான் பாப்கார்ன் ஒட்டாமல்டியே நம் கைக்கு கிடைக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Thing using at home may cause for Thyroid problems

These things using at home may lead to harmful diseases including thyroid disorders
Story first published: Friday, October 7, 2016, 18:30 [IST]
Subscribe Newsletter