Latest Updates
-
ஆகஸ்ட் 05-ல் புதன் கடக ராசிக்கு செல்வதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தாபா ஸ்டைல் முட்டை பட்டாணி மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமா இருக்கும் -
Commonwealth Games 2026: காமன்வெல்த் போட்டிகளுக்கும், ஒலிம்பிக் போட்டிகளுக்கும் உள்ள வேறுபாடுகள் என்னென்ன? -
பீர்க்கங்காய் தக்காளி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 29 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பணமழை கொட்டும் நாளாக இருக்குமாம் -
56 ஆண்டுகளுக்கு பின் குரு பூர்ணிமா நாளில் உருவாகும் 3 ராஜயோகங்கள்: அதிர்ஷ்ட மழையில் நனையும் 3 ராசிகள்! -
லன்ச்பாக்ஸ்-க்கு தக்காளி சாதத்தை இப்படி செய்யுங்க.. பிரியாணி மாதிரி டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
கருவளையங்கள் உங்களை டல்லா காட்டுதா? அப்ப இந்த மாஸ்க்கை அடிக்கடி போடுங்க.. -
ஆடி பௌர்ணமியில் உருவாகும் கேந்திர திருஷ்டி யோகம்: இந்த 4 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
மணமணக்கும் மொச்சைப் பருப்பு கருவாட்டு குழம்பு - எப்படி செய்யணும் தெரியுமா?
நீங்கள் தூங்கும் போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?
இரவில் நன்றாக ஆழந்த தூக்கம் தூங்குவது ஆரோக்கியமான உடலுக்கு சான்று. அப்போதுதான் மூளை நிறைய எனர்ஜியுடன் முழித்திருக்கும். மற்ற உறுப்புகள் அமைதியாய் களைத்து தூங்கிக் கொண்டிருக்கும்.
இந்த நேரத்தில் மூளையில் உண்டாகும் கழிவுகளை எல்லாம் மூளை நிதானமாய் வெளியேற்றிக் கொண்டிருக்கும். அதனால்தான் நீங்கள் அடுத்த நாள் காலை மிகவும் புத்துணர்ச்சியோடு செயல்படுகிறீர்கள்.

தூங்காமலே இருந்தால், மூளையின் செயல்கள் ஒழுங்காக நடக்காது. பின் அடுத்த நாள் காலை சோர்வுடனே இருப்பீர்கள். ஆகவே குறைந்தது 7-8 மணி நேரம் தூங்க வேண்டும்.
தூங்காமலே இருப்பது ஒரு வகையென்றால், இன்னும் சிலர் எப்போதும் தூங்கிக் கொண்டேயிருப்பார்கள். அல்லது தூக்கத்தில் நடப்பார்கள், பேசுவார்கள். அவர்களைப் பற்றி சில விஷயங்களை நாம் தெரிந்து கொள்ளலாமா?
ஸ்லீப்பிங் பியூட்டி ஸிண்ட்ரோம் :
இது பொதுவாக 10 வயதிற்கு மேலே உள்ள டீன் ஏஜ் வயதினருக்கு ஏற்படும். நாள் பூராவும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் தூங்கிக் கொண்டேயிருப்பார்கள். குறைந்தது 20 மணி நேரமாவது தூங்குவார்கள் . இது மன நல பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு ஏற்படுவது. ஆழ்மனதில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருந்தாலோ, அல்லது தாங்க முடியாத மனபாதிப்பு அடைந்திருந்தாலோ, இவ்வகையில் தூங்கிக் கொண்டிருப்பார்கள்.
செக்ஸோம்னியா :
இது மிகவும் அரிதான தூக்க வியாதி . தூக்கத்திலேயே பாலுணர்வு தூண்டப்பட்டு, அதில் ஈடுபடுவது போலிருப்பார்கள். இது இயல்பாக இருப்பவர்களுக்கு வராது. ஆழ்ந்த மன வியாதிகளின் வெளிப்பாடாகவும் இருக்கக் கூடும்.
தூக்கத்தில் சிறு நீர் கழித்தல் :
குழந்தைகளில் படுக்கையில் சிறு நீர் கழிப்பது சாதாரணமானது. ஆனால் சிலர் வளர்ந்த பின்னும் படுக்கையில் சிறுநீர் கழிப்பார்கள். இதற்கு காரணம் நிறைய உண்டு. சிறு நீரக கற்கள் உருவாவது, சிறு நீரகத் தொற்று, அடிக்கடி பதட்டப்படுபவர்கள், மன அழுத்ததினால் பாதிக்கப்படுபவர்கள் தூக்கத்தில் சிறு நீர் கழிப்பார்கள்.
தூக்கத்தில் பேசுவது :
சிலர் தூங்கும்போது, தூக்கத்தில் உளறுவார்கள், அழுவார்கள், திடீரென கத்துவார்கள். சிறு குழந்தையாக இருக்கும் போதென்றால் பிரச்சனையில்லை. ஆனால் வளர்ந்தவுடன் இவ்வாறே இருந்தால் அவசியம் மருத்துவரை அணுக வேண்டும். இது உடல் நலம் சம்பந்தபட்ட பாதிப்பாக இருக்கும்.
தூக்கத்தில் நடப்பவர்கள் :
இதைப் பற்றி பரவலாக நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அவ்வாறு நடந்து கொள்பவர்களை பார்த்திருப்பது அரிதாக இருக்கும். தூக்கத்தில் நடப்பதற்கு காரணம், மன அழுத்தம், குடிப்பழக்கம், பதட்டத்தன்மை, மன நல பாதிப்பு ஆகியவைகளைச் சொல்லலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications



