For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நமக்கே தெரியாமல் விந்தணு எண்ணிக்கையை குறைக்கும் தினசரி செயல்பாடுகள்!!

|

ஆண்மைக் குறைபாடு அல்லது கருத்தரிக்கும் வாய்ப்புகள் குறைய முக்கிய காரணங்களாக இருப்பவை விந்தணு திறன் குறைபாடு மற்றும் விந்தணு எண்ணிக்கை குறைபாடு. பெரும்பாலும் மது அருந்துவது, புகைப்பிடிப்பது போன்ற காரணங்கள் தான் இவை ஏற்பட காரணமாக இருக்கின்றன என நாம் எண்ணுவது உண்டு.

ஆனால், நமக்கே தெரியாமல், நமது அன்றாட செயல்பாடுகளும் கூட விந்தணு குறைபாடு மற்றும் எண்ணிக்கை குறைய காரணிகளாக இருக்கின்றன. பாக்ஸர் வகை உள்ளாடை அணிவது, அதிக நேரம் உட்கார்ந்தே வேலை செய்வது, டிவி பார்த்துக் கொண்டே இருப்பது போன்ற சில அன்றாட செயல்பாடுகள் தான் வலுவாக விந்தணு எண்ணிக்கையை பாதிக்கின்றன....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அதிகமான டிவி பார்க்கும் பழக்கம்

அதிகமான டிவி பார்க்கும் பழக்கம்

ஹார்வர்ட் பொது உடல்நல பள்ளியில் நடத்தப்பட்ட ஆய்வில், வாரம் 20 மணிநேரத்திற்கு மேல் டிவி பார்க்கும் ஆண்களுக்கு 44% விந்தணு எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் 18 - 22 வயது நிரம்பியவர்கள் பங்கெடுத்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிக நேரம் உட்கார்ந்தே இருப்பது

அதிக நேரம் உட்கார்ந்தே இருப்பது

அதிக நேரம் உட்கார்ந்தே இருக்கும் ஆண்களுக்கு தான் விந்தணு எண்ணிக்கை குறைவாகிறது என்றும் இவர்கள் கண்டறிந்து கூறியுள்ளனர். இவர்களோடு ஒப்பிடுகையில் அன்றாடம் உடற்பயிற்சி செய்பவர்களுக்கு 73% அதிகமான விந்தணு எண்ணிக்கை இருக்கிறதாம்.

பாக்ஸர் வகை உள்ளாடைகள்

பாக்ஸர் வகை உள்ளாடைகள்

ஒருவருடம் நடத்தப்பட்ட ஆய்வில், 12 ஆண்கள் பாக்ஸர் வகை உள்ளாடை அணிய உட்படுத்தப்பட்டு பரிசோதனைகள் செய்யப்பட்டன. இவர்கள் அனைவரும் தினமும் குறிப்பிட்ட நேரம் வரையிலும் அணிய வேண்டும் என்ற நிபந்தனை இருந்தது. இந்த பாக்ஸர் வகை உள்ளாடை மற்றவர்களோடு ஒப்பிடுகையில் இரண்டில் இருந்து மூன்று மடங்கு வரை விந்தணு எண்ணிக்கை குறையக் காரணமாக இருக்கிறது.

பதப்படுத்தப்பட்ட இறைச்சி

பதப்படுத்தப்பட்ட இறைச்சி

இன்று ஷாப்பிங் மால்கள் மற்றும் பல இடங்களில் விற்கப்படும் பதபடுத்தப்பட்ட இறைச்சி உணவுகளும் கூட விந்தணு திறனையும், எண்ணிக்கையையும் குறைக்க காரணியாக இருக்கின்றது. ஏறத்தாழ இந்த பதப்படுத்தப்பட்ட இறைச்சி 7.2 சதவீதம் விந்தணு எண்ணிக்கை குறைய காரணமாக இருக்கிறது.

சோயா

சோயா

ஹார்வர்ட் பொது உடல்நல பள்ளியின் வேறொரு ஆய்வில், தினமும் சோயா சாப்பிடுவதும் கூட விந்தணு எண்ணிக்கையை குறைக்க செய்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.

சைவம்

சைவம்

லோமா லிண்டா பல்கலைக்கழக மருத்துவ பள்ளி நடத்திய ஓர் ஆய்வில், மாமிசம் சாப்பிடும் நபர்களோடு, சைவம் மட்டுமே சாப்பிடும் நபர்களின் விந்தணு எண்ணிக்கையில் வேறுபாடு ஏற்படுவதை கண்டறியப்பட்டது. இதில் சைவம் மட்டும் சாப்பிடும் நபர்களின் விந்தணு ஒரு மில்லி லிட்டரில் 50 மில்லியனும், மாமிசமும் சேர்த்து உண்ணும் நபர்களின் விந்தணு எண்ணிக்கை ஒரு மில்லி லிட்டரில் 70 மில்லியன் என்ற அளவிலும் இருந்தது கண்டறியப்பட்டது.

மற்ற காரணங்கள்

மற்ற காரணங்கள்

இதுப் போக, மது அருந்துவது, புகைப்பிடிப்பது, மடியில் வைத்து லேப்டாப் பயன்படுத்துவது, அதுகமாக ஸ்மார்ட் போன் பயன்படுத்துவது போன்ற ஏனைய காரணங்களும் கூட விந்தணு எண்ணிக்கை குறைய காரணிகளாக இருக்கின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Six Things You Do Every Day That Are Lowering Your Sperm Count

Six Things You Do Every Day That Are Lowering Your Sperm Count, take a look.
Story first published: Monday, January 25, 2016, 10:18 [IST]
Desktop Bottom Promotion