Latest Updates
-
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
உங்களுக்கு பாஸ்பரஸ் குறைபாடு உள்ளது என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!
உடலின் செயல்பாடு சீராக இருக்க வேண்டுமானால், அன்றாடம் உடலுக்கு போதிய சத்துக்கள் சரியான அளவில் கிடைக்க வேண்டும். அப்படி கிடைக்காவிட்டால், அதனால் ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்பட்டு, உடல்நல கோளாறுகளை சந்திக்க வேண்டியிருக்கும். அப்படி எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு தேவையான ஓர் சத்து தான் பாஸ்பரஸ்.
இந்த பாஸ்பரஸ் ஒருவருக்கு போதிய அளவில் கிடைக்காவிட்டால், அதனால் பாஸ்பரஸ் குறைபாடு ஏற்படும். சரி, உங்களுக்கு பாஸ்பரஸ் குறைபாடு உள்ளது என்பதை எப்படி அறிந்து கொள்வது என்று தெரியுமா? கீழே பாஸ்பரஸ் குறைபாட்டிற்கான சில அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மூட்டு வலிகள்
எலும்புகளின் வளர்ச்சியில் கால்சியம் மட்டுமின்றி, பாஸ்பரஸ் கூட முக்கிய பங்கை வகிக்கிறது. ஒருவேளை அந்த பாஸ்பரஸ் குறைபாடு ஒருவருக்கு ஏற்பட்டால், அதன் காரணமாக மூட்டுகளில் கடுமையான வலியை உணரக்கூடும்.

பலவீனமான எலும்பு மற்றும் பற்கள்
எலும்புகளின் மற்றும் பற்களின் கட்டமைப்பிற்கு கால்சியத்தைப் போன்றே பாஸ்பரஸ் சத்தும் அவசியமானது. உங்கள் டயட்டில் கால்சியம் குறைபாக இருந்தால், எப்படி பற்கள் மற்றும் எலும்புகள் பலவீனமாகிறதோ, அதேப் போல் பாஸ்பரஸ் குறைவாக இருந்தாலும் ஏற்படும்.

ஆற்றலின்மை
மன அழுத்தம், வைட்டமின் பி12 குறைபாடு போன்றவற்றால் மட்டும் உடலின் ஆற்றல் குறைவாக இருப்பதில்லை, பாஸ்பரஸ் குறைபாட்டின் காரணமாகவும் உடலின் ஆற்றல் குறையும். ஏனெனில் பாஸ்பரஸ் கொழுப்புக்கள், கார்போஹைட்ரேட் மற்றும் புரோட்டீன்களை வளர்சிதை மாற்றம் செய்து, உடலுக்கு வேண்டிய ஆற்றலை உற்பத்தி செய்யும். ஆனால் அது போதிய அளவில் கிடைக்காமல் போனால், மிகுதியான சோர்வைத் தான் உணரக்கூடும்.

பசியின்மை
பாஸ்பரஸ் குறைபாட்டினால், பசியின்மை ஏற்பட்டு, அதன் காரணமாக ஆற்றலின்மை, பலவீனமான எலும்புகள், மூட்டு வலிகள் போன்றவற்றை சந்திக்க நேரிடும்.

கை, கால் மரத்து போதல்
பாஸ்பரஸ் குறைபாட்டின் காரணமாகத் தான் ஒருவருக்கு அடிக்கடி கை, கால்கள் மரத்துப் போகும் நிலை ஏற்படும். மேலும் நடப்பதிலும் சிரமத்தை உணரக்கூடும்.



Click it and Unblock the Notifications
