மாத விடாய் சமயத்தில் உண்டாகும் தூக்கமின்மை பிரச்சனைக்கு எப்படி முடிவு கட்டலாம்?

Written By:
Subscribe to Boldsky

மாதவிடாய் சமயத்தில் சிலருக்கு தூக்கம் சரியாக இருக்காது. தலைவலி, வயிறு உப்புசம், மார்பு வலி , தசை பிடிப்பு என பல பிரச்சனைகள் தலை தூக்கும். இதனால் இரவில் தூக்கம் பாதிக்கப்படும்.

இதற்கு காரணம் மாதவிடாயின்போது ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவதால், வளர்சிதை மாற்றமும் குறைகிறது. அதனால் ஹார்மோன் சம நிலையில்லாமல் இருக்கும்.

periods messes your sleep ways to fix it

இந்த மாதவிடாய் காலத்தில் விரைவிலேயே தூக்கம் வரும். அதேபோல் வெகுசீக்கிரமே விழிப்பும் வந்துவிடும். ஆகவே அந்த ஸ்மாயங்களில் தூக்கம் வர என்ன செய்யலாம் என்பதுதான் இந்த கட்டுரை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அதிக நீராகாரம் :

அதிக நீராகாரம் :

அதிகமாக பழச்சாறு, நீர் எடுத்துக் கொள்வதால் அதிகளவு சோடியமும் உடலிலிருந்து வெளியேற்றப்படும். இதனால் வயிறு உப்புசம் தலை சுற்றலை சமாளிக்கலாம். இவை நரம்புகளுக்கும் ஆறுதல் அளிப்பதால் தூக்கம் வரும்.

 அதிகளவு கால்சியம் :

அதிகளவு கால்சியம் :

ஒரு ஆராய்ச்சியில் மாதவிடாயின் போது அதிக கால்சியம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொண்டால், தூக்க நேரம் நீடிப்பதாக தெரிய வந்துள்ளது. கால்சியத்தில் தூக்கத்தை தூண்டச் செய்யும் திறன் உள்ளதாம்.

400 மி.கி. மெக்னீசியம் :

400 மி.கி. மெக்னீசியம் :

மெக்னீசியம் செரடோனின் அளவை அதிகரிக்கச் செய்யும். நரம்பு மண்டலத்தை அமைதி பெறச் செய்கிறது. கால்சியம் மற்றும் மெக்னீசியம் அதிகம் எடுத்துக் கொள்ளும்போது உடலிற்கு புத்துணர்வு கிடைக்கிறது.

100 மி. கி விட்டமின் பி6 :

100 மி. கி விட்டமின் பி6 :

விட்டமின் பி6 இந்த சமயத்தில் எடுத்துக் கொண்டால் அது செரடோனின் ஹார்மோனை தூண்டுகிறது. பி6 நிறைந்த நட்ஸ், மீன் ஆகிவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

காஃபி :

காஃபி :

மாத விடாய் சமயத்தில் காஃபியை மதியத்திற்கு பிறகு குடிக்கக் கூடாது. அது பதட்டத்தை அதிகப்படுத்தும் என்று ஆய்வாளர்கல் கூறுகின்றனர். அதோடு அவை கால்சியம் அளவையும் உடலில் குறைக்கும்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

periods messes your sleep ways to fix it

7 ways to fix your sleeplessness during periods,
Story first published: Tuesday, December 6, 2016, 15:10 [IST]
Subscribe Newsletter