Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?
ஆஸ்துமாவை கட்டுக்குள் வைக்கும் பாசாசனாவை செய்யுங்கள்!!
ஆஸ்துமா குணப்படுத்த முடியாத நோயாகும். இது நுரையீரலில் உள்ள சுவாசப் பாதையில் உண்டாகும் அலர்ஜி தொடர்ந்து கவனிக்கப்படாமல் இருந்தால் சுவாச அழற்சியாக மாறி பின் நாளடைவில் ஆஸ்துமா வந்துவிடும்.
ஆஸ்துமா குழந்தைகளிலிருந்து பெரியவ்ர்களை வரை தாக்கும். இன்னவென காரணம் சொல்ல முடியாது, மரபு சார்ந்து வரலாம்.

பருவ நிலை மாற்றம், குளிர்கால கிருமிகளின் தொற்று, மாசுபடிந்த காற்று, புகை என இவையெல்லாம் ஆஸ்துமாவை அதிகப்படுத்தும். இதனை குணப்படுத்த முடியாவிட்டாலும், அதனை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
ஆஸ்துமாவை கட்டுக்குள் வைத்திருக்க எளிய வழி, யோகா. எல்லாவித பிரச்சனைகளிலிருந்தும் விடுபடச் செய்து, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மிகச் சிறந்த வழி யோகா. ஆஸ்துமாவை கட்டுக்குள் வைத்திருக்க நிறைய ஆசனங்கள் உள்ளன. அவற்றில் பாசாசனாவும் உண்டு.
பாசாசனா :
பாச என்றால் சமஸ்கிருதத்தில் சுருக்கு என்று பெயர். உடலை சுருக்கி குறுகி அமர்ந்து செய்யப்படும் இந்த ஆசனத்திற்கு பாசாசனம் என்று பெயர் வந்துள்ளது. இதனை எப்படி செய்வது எனப் பார்க்கலாம்.
செய்முறை :
முதலில் தடாசனத்தில் நில்லுங்கள். நேராக நின்று ஆழ்ந்து மூசை இழுத்துவிடுங்கள். பின்னர் கீழே குத்தவைத்து அமர வேண்டும். முதுகு நேராக நிமிர்ந்தபடி இருக்க வேண்டும்.
இப்போது உடலை இடது பக்கம் திருகுங்கள். வலது கையை கையை இடது முட்டியில் படுமாறு வளைத்து பின்பக்கம் கொண்டு செல்ல வேண்டும். பின்னது இடது கையையும் பின்பக்கம் கொண்டு சென்று இரு உள்ளங்கைகளையும் கொக்கி போல பிணைத்துக் கொள்ளுங்கள்.
தலையே இடது பக்கம் மேலே பார்த்தவாறு வைக்க வேண்டும். ஆழ்ந்து மூச்சைஇழுத்து விடுங்கள். பின்னர் மெதுவாக கைகளை தளர்த்து இயல்பு நிலைக்கு வரலாம். இது போல வலது பக்கம் செய்ய வேண்டும்.
பலன்கள் :
முதுகுத்தண்டு நன்றாக நெகிழ்ச்சி பெறும். தோள்பட்டைகளில் இறுக்கம் குறைந்து புத்துணர்வு கிடைக்கும். மார்புக் கூடு விரிவடையும். சுவாசப் பாதை சுத்தமாகும். ஜீரண சக்தி அதிகமாகும். ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications


