ஆஸ்துமா நோயை கட்டுக்குள் வைக்கும் பரிகாசனா !!

Written By: Hemalatha V
Subscribe to Boldsky

சுவாசப் பாதை எந்தவித தடங்களுமின்றி சீராக இருந்தால் , நுரையீரல் ஆக்ஸிஜனை பெற்றுக் கொள்ளும். இதனால் மற்ற பகுதிகளும் ஆக்ஸிஜனைப் பெற்று தங்கள் இயக்கங்களை செய்யும்.

ஆனால் அவற்றில் தூசு, மற்றும் தொற்று ஏற்படும்போது, நோய் எதிர்ப்பு செல்கள் ஜெல் போன்று சுரக்கிறது. அதுதான் சளி. இவை சுவாசப்பாதை அடைக்கும்போது, சுவாசம் தடைபெறுகிறது.

Parighasana to control Asthma

இதனால் இருமல், மூச்சிரைப்பு, மூச்சு விடுவதில் சிரமம் போன்றவை ஏற்படுகிறது. இவை ஆஸ்துமாவின் அறிகுறி. இது குழந்தைகளிலிருந்து பெரியவர்கள வரை யாருக்கும் உண்டாகும். குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு எளிதில் கிருமிகள் தாக்கும்.

Parighasana to control Asthma

ஆஸ்துமாவை குணப்படுத்த முடியாவிட்டாலும், அதனை கட்டுக்குள் வைத்திருக்க யோகாவில் முடியும். யோகாவிலுள்ள பல்வேறு ஆசனங்கள் ஆஸ்துமாவை கட்டுக்குள் வைக்கின்றன.

குறிப்பாக குளிர் மற்றும் மழைக்காலத்தில் ஆஸ்துமாவினால் உண்டாகும் தீவிர பிரச்சனைகளை யோகாவினால் தடுக்க முடியும். அந்த ஆசனங்களில் ஒன்றுதான் பரிகாசனா.

பரிகாசனா:

பரிகாசனாவிற்கு தடுப்பாசனா என்று இன்னொரு பெயரும் உண்டு. எப்படி செய்வது என பார்க்கலாம்.

Parighasana to control Asthma

முதலில் தடாசனாவில் நின்று கொள்ளுங்கள். ஆழ்ந்து மூச்சை இழுத்து விட்டவுடன், கீழே முட்டி போட்டு அமருங்கள். முதுகு நேராக வைக்க வேண்டும். இரு தொடைகளும் சமமாக இருக்க வேண்டும். இப்போது, வலது காலை பக்க வாட்டில் நீட்டிக் கொள்ளுங்கள்.

பின்னர் வலதுகையை நீட்டி வலது காலை தொட்டவாறு வலது பக்கம் சாயுங்கள். இப்போது இடது கையை தலைக்கு மேலே உயர்த்தி தலையை ஒட்டியவாறு நீட்டிக் கொள்ளுங்கள்.

Parighasana to control Asthma

இந்த நிலையில் அரை நிமிடம் இருக்கவும். பின்னர் இயல்பு நிலைக்கு வந்து, இப்போது காலை மாற்றி இடது காலுக்கும் இதே போன்று செய்யவும்.

இது போல் காலை மாலை செய்து வந்தால், சுவாசப்பாதை சீராகும். நோய் எதிர்ப்பு செல்கள் பலமாகும்.

பலன்கள் :

பாத முட்டிகளை பலப்படுத்தும். தோள்பட்டைகள் வலுவாகும். சுவாசத்தை சீராக்கும். அடிவயிற்றில் உள்ள உறுப்புகளை தூண்டும். முதுகு, இடுப்பிற்கு நெகிழ்வுத்தன்மையை அளிக்கிறது.

குறிப்பு :

முட்டு வலி, தோள்பட்டையில் காயம் இருப்பவர்கள் இந்த ஆசனத்தை தவிர்க்கவும்.

English summary

Parighasana to control Asthma

Parighasana to control Asthma
Story first published: Tuesday, August 16, 2016, 12:20 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter