இந்தியாவில் எட்டில் ஒருவருக்கு புற்றுநோய்! தெரியுமா?

Written By: Hemalatha V
Subscribe to Boldsky

நமது இந்தியாவில் புற்று நோய்களால் மட்டும் சுமார் 2,5 மில்லியன் மக்கள் பாதிப்பட்டிருக்கிறார்கள். இதில் நுரையீரல், வாய் புற்று நோயால் ஆண்களும், மார்பகம், மற்றும் கர்ப்பப்பை வாய் புற்று நோயாலும் பெண்களும் தாக்கப்படுகிறார்கள். இதில் 50 % பெர் இறக்கிறார்கள்.

One in eight Men may develop cancer

இதற்கு முக்கிய காரணம் என்ன தெரியுமா? மரபணு மாற்றம். இயல்பான இயக்கங்களிலிருக்கும் ஒரு டி. என் ஏ, தன் பாதையை விட்டு விலகி திடீரென வேறு மாதிரி பயணிக்கும். அங்கே குழப்பங்கள் விளைவிக்கும் இதற்குதான் மரபணு மாற்றம் அல்லது (Gene mutation) என்று பெயர். இதனால்தான் புற்று நோய் உண்டாகிறது.

One in eight Men may develop cancer

இதற்கான காரணங்களை சொல்லாத மருத்துவர்கள் இல்லை. எழுதாத பத்திரைக்கள் இல்லை. இங்கு போல்ட் ஸ்கையிலும் நிறைய இது தொடர்பான கட்டுரைகளை பார்க்கின்றோம்.

புகை பிடித்தல், மது அருந்துதல், அதிகப்படியான சக்தி வாய்ந்த கதிர்வீச்சுக்களின் பாதிப்பு, உடல் பருமன், ஹார்மோன் மாற்றங்கள், உடற்பயிற்சி இல்லாதது என காரணங்கள் இதுதான் என்றில்லை.

One in eight Men may develop cancer

நமது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் புற்று நோயால் பாதிக்கப்பட்ட மக்களை கணக்கெடுப்பு நடத்தியது. இதில் எட்டில் ஒரு ஆணிற்கும், ஒன்பதில் ஒரு பெண்ணிற்கும் புற்று நோய்கள் தாக்கப்படுவதாக கடந்த மே மாதம் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதியாவிலுள்ள சுகாதாரத்துறையினால் NPCDCS எனப்படும் புற்று நோய், சர்க்கரை வியாதி , பக்க வாதம், இதய நோய்களை தடுக்கும் தற்காப்புஅமைப்பில் இது தொடர்பான பல்வேறு விழிப்புணர்வு திட்டங்கள் மக்களிடம் சேரும் வகையில் நடத்தப்படுகின்றன.

One in eight Men may develop cancer

2020 களில் 17.3 லட்சம் மக்கள் புற்று நோய்க்கான் அறிகுறிகளுடன் கண்டறியப்படலாம். 8.8 லட்சம் மக்கள் இதனால் இறப்புகளை சந்திக்கலாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் ஒரு ஔதிய கணக்கெடுப்பு எடுத்து வெளியிட்டுள்ளது.

English summary

One in eight Men may develop cancer

One in eight Men may develop cancer
Subscribe Newsletter