Latest Updates
-
iPhone 18 Pro and 18 Pro Max: அமெரிக்காவை விட இந்தியாவில் ஐபோனின் விலை ஏன் மிக அதிகமாக உள்ளது தெரியுமா? -
விநாயகர் சதுர்த்திக்கு இப்படி பால் கொழுக்கட்டை செய்யுங்க.. க்ரீமியாவும், ருசியாவும் இருக்கும்.. -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் செட்டிநாடு உப்பு அப்பம் ரெசிபி - இதை ட்ரை பண்ணி பாருங்க - காரமா சூப்பரா இருக்கும் -
மழைக் காலத்தில் கண்களில் அரிப்பு ஏற்படுகிறதா? அதற்கான காரணங்களும், எச்சரிக்கை அறிகுறிகளும்- விளக்கும் டாக்டர்! -
தலைசுற்ற வைக்கும் இந்திய அரசர்களின் ஆடம்பரம் - எதுக்கெல்லாம் கோடிக்கணக்குல செலவு பண்ணிருக்காங்க பாருங்க -
ராகு-கேது பெயர்ச்சி 2026: மேஷம் முதல் கன்னி வரை யாருக்கு ராஜயோகம்?- விளக்கும் ஜோதிடர்! -
கேரட் தோசையும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
செப்டம்பர் 11, 2026: இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது தெரியுமா? -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் 2027 வரை சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான்
உறவில் ஈடுபடும் போது ஆண்குறியில் வலி ஏற்படுகிறதா? - எச்சரிக்கை!
சிலருக்கு உடலுறவில் ஈடுபடும் போது வலி உண்டாகலாம். இதற்கு காரணம் அவர்கள் தாங்கள் ஈடுபடும் நிலை அல்லது முறை சரியில்லையோ என கருதுவதும் உண்டு. ஆனால், பல சமயங்களில் இவ்வாறு உடலுறவில் ஈடுபடும் போது வலி ஏற்படுவதற்கு காரணம் உடல்நலக் கோளாறுகள் தான் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இந்த அறிகுறிகளை சாதாரணமாக நினைத்து விட வேண்டாம் - எச்சரிக்கை!!!
சிறுநீர் பாதை நோய் தொற்று, ஈஸ்ட் தொற்று, சொரியாஸிஸ் போன்ற உடல்நலக் கோளாறுகளின் காரணங்களால் கூட உடலுறவில் ஈடுபடும் போது வலி உண்டாகலாம் என உடலியல் மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே, தொடர்ந்து உடலுறவில் ஈடுபடும் போது ஆண்குறியில் வலி ஏற்பட்டால் உடனே மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்....

யூ.டி.ஐ
யூ.டி.ஐ என்பது சிறுநீர் பாதை நோய் தொற்று ஆகும். இந்த பாதிப்பு ஏற்பட்டிருந்தால் கூட ஆண்கள் உடலுறவில் ஈடுபடும் போது வலி உண்டாகலாம். இதற்கான சிகிச்சை உடனடியாக மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

ஈஸ்ட் தொற்று
ஈஸ்ட் தொற்று என்பது பெண்களிடம் இருந்து பரவுவது. நீங்கள் உடலுறவுக் கொள்ளும் துணைக்கு இந்த ஈஸ்ட் தொற்று ஏற்பட்டிருந்தால் அதன் மூலம் ஆண்களுக்கு பரவி உடலுறவில் ஈடுபடும் போது வலியை உண்டாக்கலாம்.

சொரியாஸிஸ்
சருமத்தில் உண்டாகும் சொரியாஸிஸ் காரணமாக கூட ஆண்மை பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறதாம். இதனால் கூட உடலுறவில் ஈடுபடும் போது வலி ஏற்படலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

டெர்மட்டிட்டிஸ் (ஒவ்வாமை)
சில ஆண்களுக்கு சோப்பில் கலக்கப்படும் கெமிக்கல் சேராது. இதனால் ஏற்படும் அழற்சியினால் கூட பிறப்புறுப்பு பகுதியில் வலி உண்டாகலாம்.

ஹெர்ப்ஸ்
ஒரு வகையான பால்வினை நோய் தாக்கம் இந்த ஹெர்ப்ஸ். இது உடலுறவில் ஈடுபடும் போது வலியை ஏற்படுத்துவது மட்டுமின்றி, துணைக்கும் பரவும் வாய்ப்புகள் அதிகம்.

மேல்தோல்
ஆண்குறியின் மேல்தோல் மிக இறுக்கமாக இருந்தாலும் கூட உடலுறவில் ஈடுபடும் போது வலி உண்டாகலாம்.

சுக்கிலவழற்சி (Prostatitis)
புரோஸ்டேட் சுரப்பியில் அழற்சி / எதிர்வினை தாக்கம் உண்டானால் கூட ஆண்கள் உடலுறவில் ஈடுபடும் போது, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், வலி உண்டாகலாம்.

காயங்கள்
சிலர் ஆவேசமாக உடலுறவில் ஈடுபடும் போது மேல்தோலில் உராய்வு அல்லது கிழிசல் ஏற்பட்டால் கூட வலி உண்டாகலாம். அந்த காயம் சரியாகும் வரை உடலுறவில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.



Click it and Unblock the Notifications
