Latest Updates
-
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க..
தீராத கழுத்து வலிக்கு தீர்வுக் காண இதையும் கொஞ்சம் யோசிக்கணும்!
இன்று மக்கள் அதிகமாக அவதிப்படும் உடல்நல பிரச்சனைகளுள் ஒன்றாக திகழ்வது கழுத்து, முதுகு, இடுப்பு வலி. இதை அதிகமாக கூறுவது சமூகத்தில் அதிகமாக சம்பளம் வாங்கும் ஐ.டி ஊழியர்கள் தான். ஆம், கணினியின் முன்னே சிலையை போல அமர்ந்து ஒரே நேர் பார்வையில் விரல்களுக்கு மட்டும் வேலைக் கொடுத்து அமர்ந்திருந்தால் வேறு என்ன வரும்.
முதுகு வலியால் கஷ்டப்படுறீங்களா? அப்ப தினமும் இந்த யோகாக்களை செய்யுங்க!
சிறு, சிறு விஷயங்களில் நீங்கள் அக்கறை எடுத்துக் கொண்டாலே போதும், இந்த கழுத்து, முதுகு, இடுப்பு வலியில் இருந்து நீங்கள் நிரந்தர தீர்வுக் காண முடியும். அன்றாக வாழ்வில் கலந்திருக்கும் மொபைலில் துவங்கி, நீங்கள் உறங்க செல்லும் தருணம் வரை சிலவற்றில் கவனமாக இருக்க வேண்டும். இதற்கு முழு தீர்வுக் காண ஊட்டச்சத்தும் அவசியம்.

மொபைல்
அதிக நேரம் மொபைலை நோண்டிக் கொண்டிருப்பதை முதலில் நிறுத்துங்கள். அதிலும், சிலர் படுக்கைக்கு சென்றுவிட்டாலும், ஒருபுறமாக மொபைல் வைத்தப்படியே நோண்டிக் கொண்டிருப்பார்கள். இதனால், கழுத்து வலி மட்டுமின்றி, உடல் அசதி, தூக்கமின்மை, சுறுசுறுப்பு குறைவு போன்றவையும் கூட உண்டாகும்.

உடற்பயிற்சி
முடிந்த வரை தினமும் அரை மணி நேரமாவது உடற்பயிற்சி செய்யுங்கள். எலும்புகளின் வலிமையை ஊக்குவிப்பது போன்ற பயிற்சிகளில் ஈடுபட வேண்டியது அவசியம்.

வேலை
தொடர்ந்து ஒரே இடத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக உட்கார்ந்து வேலை செய்வதை நிறுத்திக் கொள்ளுங்கள். குறைந்தபட்சம் ஒரு ஐந்து நிமிடமாவது இடைவேளை எடுத்துக் கொண்டு மீண்டும் வேலை செய்ய துவங்குங்கள்.

அமரும் நிலை
இன்று கணினியின் முன் அமர்ந்து வேலை செய்யும் பலரும் செய்யும் தவறு. சாய்வாக, சரியான நிலையில் அமராமல் வேலை செய்வது தான், முதலில் நேராக அமர்ந்து வேலை செய்யுங்கள். இதை பின்பற்றினாலே முதுகு வலி, கழுத்து வலி அதிகம் ஏற்படாமல் தப்பிக்கலாம்.

யோகா
யோகா செய்வது உடலுக்கு மட்டுமின்றி, மனதுக்கும் மிகவும் நல்லது. இடுப்பு, முதுகு, கழுத்து வலியில் இருந்து தீர்வுக் காண யோகா ஒரு சிறந்த நிவாரணி.

உணவுகள்
எலும்புகளுக்கு வலுவளிக்கும் உணவுகளை தேர்வு செய்து சாப்பிடுங்கள். முக்கியமாக கால்சியம் மற்றும் காய்கறிகள் அதிகமாக உட்கொள்ளுங்கள். காய்கறிகளை வேகவைத்து உண்பது மிகவும் சிறந்தது.



Click it and Unblock the Notifications
