For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நம்ம தாத்தா, பாட்டி நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ்ந்ததன் பின்னணியில் இருந்த ரகசியம் இதுதாங்க...

|

பண்டைய இந்தியர்களின் ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் தான் அவர்கள் நீண்ட நாள் வாழ்வதற்கு உதவியாக இருந்தது. அக்காலத்தில் கிராமப் பகுதியில் மருத்துவ வசதிகள் அவ்வளவாக இல்லை. இருப்பினும் பண்டைய இந்தியர்கள் 100 வருடங்கள் வாழ்ந்தனர்.

ஆனால் இன்றோ 60 வயது வரை வாழ்வதே அரிதாக உள்ளது. அப்படியே 60 வயதை எட்டியவர்களும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுடன் தான் வாழ்ந்து வருகின்றனர். இதற்கு முதன்மையான காரணம் அயல்நாட்டு உணவுகளின் மீதுள்ள மோகத்தால், நம் இந்திய பாரம்பரிய உணவுகளை மறந்து தவிர்ப்பது தான்.

எனவே நீங்களும், உங்கள் வருங்கால சந்ததிகளும் ஆரோக்கியமாக நீண்ட நாட்கள் வாழ வேண்டுமானால், கீழே கொடுக்கப்பட்டுள்ள நம் பண்டைய இந்தியர்களின் பழக்கவழக்கங்களைப் பின்பற்றுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உணவே மருந்து

உணவே மருந்து

அதிகாலையில் சூரியன் உதிப்பதற்கு முன்பே எழுந்து, உடலுக்கு கடுமையான வேலையைக் கொடுத்து உணவை உட்கொண்டு வந்தனர். அதிலும் தானிய உணவுகளைத் தான் அதிகம் உட்கொண்டு வந்தனர். அதனால் அதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்துக்களால் செரிமானம் சீராக நடைபெற்று, உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்பட்டது. மேலும் நம் முன்னோர்கள் சுவைக்காக உணவை உட்கொள்ளாமல், உடல் ஆரோக்கியத்தின் தேவைக்காக உணவை உட்கொண்டு வந்தனர்.

தரமான உணவு, தண்ணீர் மற்றும் காற்று

தரமான உணவு, தண்ணீர் மற்றும் காற்று

அக்காலத்தில் விவசாயம் முதன்மையான தொழிலாக இருந்தது. இதனால் உண்ணும் உணவுகள் அக்காலத்தில் தரமானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருந்தது. மேலும் விளையும் அனைத்து பயிர்களும், இயற்கை உரம் பயன்படுத்தி வளர்க்கப்பட்டதால், உண்ணும் காய்கறி மற்றும் பழங்களில் சத்துக்களானது ஏராளமாக இருந்தது. முக்கியமாக அக்காலத்தில் மரங்கள் அதிகம் இருந்ததால், சுவாசிக்கும் காற்றும் சுத்தமாக இருந்தது.

அளவான இறைச்சி

அளவான இறைச்சி

பண்டைய இந்தியர்கள் இறைச்சிகளை அளவாகத் தான் உட்கொண்டு வந்தனர். மேலும் அக்காலத்தில் இருந்த ஆடு மற்றும் கோழிக்கு சரியான உணவை வழங்கி வளர்த்து, அவற்றை உட்கொண்டதால், அவர்கள் நன்கு வலிமையான உடலைப் பெற்றிருந்தனர்.

குடல் ஆரோக்கியம்

குடல் ஆரோக்கியம்

பண்டைய இந்தியர்கள் தங்களது அன்றாட உணவில் தவறாமல் தயிரை சேர்த்து வந்தனர். இதனால் தயிரில் உள்ள நுண்ணுயிரிகளால், அவர்களது குடல் ஆரோக்கியம் மேம்பட்டு இருந்தது.

விவசாயம் என்னும் சிறந்த உடற்பயிற்சி

விவசாயம் என்னும் சிறந்த உடற்பயிற்சி

பண்டைய காலத்தில் விவசாயம் முதன்மைத் தொழிலாக இருந்ததால், நம் தாத்தா, பாட்டி இருவரும் விவசாயம் செய்யும் நிலத்தில் பெரும்பாலான நேரத்தை செலவிட்டனர். மேலும் விவசாயம் செய்யும் போது சூரியனிடமிருந்து போதிய வைட்டமின் டி சத்துக்கள் கிடைத்து, உடல் ஆரோக்கியத்திறகு தேவையான வைட்டமின் டி சத்து கிடைத்தது. முக்கியமாக எங்கும் நடந்தே செல்வதால், பல நோய்களுக்குக் காரணமான கொழுப்புக்களின் தேக்கத்திற்கு வழி இல்லாமலே இருந்தது.

அமைதியான மற்றும் சந்தோஷமான வாழ்க்கை

அமைதியான மற்றும் சந்தோஷமான வாழ்க்கை

குறிப்பாக பண்டைய காலத்தில் மன அழுத்தம் என்ற ஒன்றே இருந்ததில்லை. தற்போது தான் அதிகப்படியான வேலைப்பளுவின் காரணமாக அது இல்லாதவர்களைக் காண்பது என்பது அரிதாக உள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How Ancient Indians Managed To Live Long

The health habits of ancient Indians helped them live longer than us. Now, let us know how some tribes managed to live for more than 100 years.
Story first published: Thursday, July 14, 2016, 13:54 [IST]
Desktop Bottom Promotion