Latest Updates
-
தமிழ் சினிமாவிலிருந்து சென்று அரசியலில் ஜொலித்த நடிகர்களின் லிஸ்ட்... யாரெல்லாம் இருக்காங்க பாருங்க...! -
வாழைத்தண்டு வாங்குனா இந்த மாதிரி மோர் கூட்டு செய்யுங்க... வெயில் காலத்துக்கு சூப்பரா குளுகுளுனு இருக்கும்...! -
பிரியாணியின் தலைநகரம் என்று அழைக்கப்படும் இந்திய நகரம் எது தெரியுமா? உங்களுக்கு எந்த பிரியாணி பிடிக்கும்? -
நாவூறும்.. சிக்கன் ரா ரா - சிம்பிளா எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
KFC ஸ்டைல் பாப்கார்ன் சிக்கன் ரெசிபி... சிக்கனை இந்த மாதிரி செஞ்சு பாருங்க... எல்லாரும் ஆசையா சாப்பிடுவாங்க... -
சொந்த நட்சத்திரம் செல்லும் சுக்கிரன்: ஏப்ரலில் இந்த 4 ராசிக்காரர்களின் கையில் பணம் குவியப்போகுது.. -
புதனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்.... உங்க ராசி இதுல இருக்கா? -
கொங்குநாடு ஸ்டைல் மட்டன் குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 29 மார்ச் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு சோகங்கள் நிறைந்த நாளாக இருக்குமாம்...! -
வார ராசிபலன் (29 March 2026-04 April 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்..
ஆண்கள் வெளிப்படையாக கேட்கத் தயங்கும் சில கேள்விகள்!
சமீபத்திய ஆய்வு ஒன்றில் ஆண்களுக்கு மருத்துவர்கள் என்றால் பயம் என்பது தெரிய வந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம், அவர்கள் சந்திக்கும் சில பிரச்சனைகளுக்கான காரணத்தைக் கேட்கத் தயக்கமாக இருப்பது தான்.
பொதுவாக ஆண்கள் சிறுநீரக சம்பந்தப்பட்ட சுகாதார பிரச்சனைகளை அதிகம் சந்திப்பார்கள். ஏனெனில் அவர்கள் தாங்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து மருத்துவர்களிடம் வெளிப்படையாக கேட்காதது தான்.
மேலும் உடல்நல நிபுணர்களும், இனப்பெருக்க உறுப்புக்களில் ஏதேனும் பிரச்சனை இருந்தால், அதை மருத்துவரிடம் வெளிப்படையாக கூறி வேண்டும் என்கின்றனர். அதை விட்டு, அமைதியாக இருந்தால், பிரச்சனை முற்றி பின் கடும் விளைவை சந்திக்க நேரிடும்.
சமீபத்திய ஆண்டுகளில் புரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 89 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கு மருத்துவர்களிடம் ஆண்கள் வெளிப்படையாக பேசாமல் இருப்பது தான் காரணம்.
இங்கு ஆண்கள் மருத்துவர்களிடம் கேட்கத் தயங்கும் சில கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.

ஆண் விதைகளில் அசாதாரண உணர்வு
பெரும்பாலான ஆண்கள் சொல்லத் தயங்கும் ஓர் பிரச்சனை தான் ஆண் விதைகளில் ஓர் அசாதாரண உணர்வை சந்திப்பது. அதாவது ஆண் விதைகளின் இடது புறத்தில் ஏதேனும் கூச்சத்தை ஏற்படுத்துவது போன்ற உணர்வு இருந்தால், அப்பகுதியில் வழக்கத்திற்கு மாறாக இரத்த நாளங்கள் பெரிதாகியுள்ளது என்று அர்த்தம். இந்நிலையை varicocele என்று சொல்வார்கள். இந்த பிரச்சனையை அப்படியே விட்டுவிட்டால், அதனால் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை மற்றும் ஆண் விதையின் அளவு குறைய ஆரம்பிக்கும். எனவே ஆண்களே கவனமாக இருங்கள்.

ஆண்குறி முறிவு ஏற்படுமா?
ஆம், ஆண்குறி முறிவடையக்கூடும். அதுவும் உடலுறவில் ஈடுபடும் போது இழைம இணைப்புத்திசுக்கள் உடையும் போது, ஆண்குறி முறிவு ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே உடலுறவில் பாதுகாப்பாகவும், மென்மையாகவும் ஈடுபட வேண்டியது அவசியம்.

விந்து சாதாரணமாக எப்படி இருக்கும்?
விந்து சாதாரணமாக அடர்த்தியாகவும், வெள்ளையாகவும் மற்றும் வெவ்வேறு நிலைத்தன்மையையும் கொண்டிருக்கும். இருப்பினும், உங்கள் விந்துவில் இரத்தத்தைக் கண்டால், அதனை சாதாரணமாக நினைத்துவிடாமல், உடனே மருத்துவரை அணுகுங்கள். ஏனெனில் விந்துவில் இரத்தம் கலந்திருந்தால், அந்நிலையை ஹெமடோஸ்பெர்மியா என்று அழைப்பார்கள். இது புரோஸ்டேட் சுரப்பியில் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

இளமையிலேயே விறைப்புத்தன்மை பிரச்சனை ஏன் வருகிறது?
விறைப்புத்தன்மை குறைபாடு யாருக்கு வேண்டுமானாலும் எந்த வயதிலும் ஏற்படலாம். இதற்கு முக்கிய காரணம், வாஸ்குலர் பிரச்சனைகள் நரம்புகள் அல்லது இரத்த நாளங்களை பாதிப்பது தான். குறிப்பாக மன அழுத்தம், டென்சன் போன்றவற்றால் தான் இந்நிலை ஏற்படும். எனவே உங்கள் பாலியல் வாழ்க்கை சுமுகமாக இருப்பதற்கு, மன அழுத்தம் மற்றும் டென்சனைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபடுங்கள்.

ஆண்குறியை பெரிதாக்க முடியுமா?
சாதாரணமாக ஆண்குறியின் அளவு 3.5 முதல் 7.5 இன்ச் வரை தான் இருக்கும். மேலும் யாராலும் ஆண்குறியின் அளவை பெரிதாக்க முடியாது.

ஆண்குறியில் பருக்கள் இருப்பது பிரச்சனையா?
ஆண்குறியின் மேல் பருக்கள், புண் அல்லது தோல் உரிந்து காயங்கள் இருந்தால், அதனை சாதாரணமாக விட வேண்டாம். இல்லாவிட்டால், அது தீவிரமான பிரச்சனைக்கு வழிவகுக்கும். எனவே இம்மாதிரியான நிலையில் மருத்துவரை தவறாமல் அணுகுங்கள்.

மலச்சிக்கல் தீவிர பிரச்சனையை ஏற்படுத்துமா?
சில ஆண்களுக்கு மலம் கழிப்பதில் கஷ்டமாக இருக்கும். அதிலும் சிலர் 4-5 நாட்கள் வரை மலம் கழிக்காமல் இருப்பார்கள். பலர் இப்பிரச்சனையைக் குறித்து மருத்துவர்களிடம் கேட்கமாட்டார்கள். இப்படியே பல நாட்களாக இப்பிரச்சனையால் கஷ்டப்பட்டால், மருத்துவரை அணுகி காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள். ஏனெனில் அமெரிக்க புற்றுநோய் சங்கம் நீண்ட நாட்கள் மலச்சிக்கலால் கஷ்டப்பட்டு வந்தால், அது பெருங்குடல் புற்றுநோய்க்கு அறிகுறியாக கூறுகின்றனர். எனவே இப்பிரச்சனையை சாதாரணமாக விடாதீர்கள்.

சிறுநீரில் இரத்தம்
சிறுநீரில் இரத்தம் வந்தால், ஒருமுறை தானே என்று நினைத்து விட வேண்டாம். இது உங்கள் சிறுநீரக மண்டலத்தில் தொற்றுக்கள் உள்ளது என்பதைக் குறிக்கிறது. குறிப்பாக ஆண்களுக்கு இந்நிலை ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இதற்கு அவர்கள் அதிக சுகாதாரத்தைப் பின்பற்றாமல் இருப்பது என்று சொல்லலாம். இப்பிரச்சனையை ஆண்கள் மருத்துவர்களிடம் கூறாமல் சாதாரணமாக விட்டால், சிறுநீரக பாதை மற்றும் சிறுநீர்ப்பையில் தொற்றுக்கள் அதிகரித்து, அதனால் விரை வீக்கம், சிறுநீரக கற்கள் போன்ற பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.



Click it and Unblock the Notifications











