Latest Updates
-
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
திருமணத்திற்கு பிறகு இந்திய ஆண்களின் உடல்நலத்தில் ஏற்படும் மாற்றங்கள்!
திருமணத்திற்கு பிறகு ஓர் புதிய வாழ்க்கை ஆரம்பிக்கும் என்பார்கள். இந்த புதிய வாழ்க்கை உங்களுக்கு ஓர் புதிய உலகையும், எல்லையற்ற மகிழ்ச்சியையும் தரும் என்றும் கூறுவார்கள். ஆனால், இந்திய ஆண்களுக்கு இது கொஞ்சம் வித்தியாசமாக ஆரோக்கிய தொல்லைகளையும் சேர்த்து தருகிறது. இதற்கு முழுக் காரணம் நாமே தான்.
நாற்பது வயதை நெருங்க, நெருங்க சந்திக்கும் உடல்நல பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க சில டிப்ஸ்...!
கடைபிடித்து வந்த கொஞ்சநஞ்ச டயட் மற்றும் உடற்பயிற்சியையும் திருமணத்திற்கு பிறகு மறந்துவிடுவோம். மேலும், சமுதாய அந்தஸ்து என்ற பெயரில் தேவைகள் அதிகரிக்கும். இவற்றின் காரணமாக திருமணத்திற்கு பிறகு நிறைய உடல்நலப் பிரச்சனைகளை சந்திக்கிறான் ஒவ்வொரு இந்திய ஆணும்....
உங்களுக்கு முப்பது வயசு ஆகபோகுதா? அப்ப இதெல்லா நீங்க கண்டிப்பா மாத்திக்கணும்!!!

உடல் எடை அதிகரிப்பு
திருமணம் நிச்சயமான பிறகு ஜிம்மிற்கு சேரும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஆனால், திருமணமான பிறகு இவர்கள் அப்படியே நின்றுவிடுவார்கள். பல ஆண்கள் தங்களது திருமண ஆல்பத்தில் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக தான் உடல் எடையில் கொஞ்சம் கரிசனமான அக்கறை எடுத்துக் கொள்கின்றனர். பிறகு உடல் எடை பற்றி எந்த கவலையும் கொள்வதில்லை.

டயட்
பெரும்பாலும் திருமணத்திற்கு பிறகு டயட்டை ஆண்கள் கடைபிடிப்பதில்லை. திருமணம் முடிந்தவுடன் பல விருந்துகள், மனைவியின் கையால் சமைத்த சாப்பாடு என டயட் என்றால் என்ன என்பதை மறப்பது தான், திருமணத்திற்கு பிறகு திடீரென உடல் எடை அதிகரிக்க காரணமாக இருக்கிறது.

அன்பு, பூரிப்பு
மனைவியிடம் இருந்து வெளிவரும் அந்த ஆரம்பக்கட்ட அன்பில் திளைத்து, பூரித்து போய். அவர்கள் அதிகமாக இரண்டு இட்லி என்ன, நூறு இட்லி வைத்தாலும் வயிற்றில் அடுக்கிக் கொள்ளும் தன்மை ஆண்களுக்கு வந்துவிடுகிறது.

அலட்சியம்
"அதான் கல்யாணம் ஆயிடுச்சே, இனி யாருக்காக போய் கட்டுமஸ்தா இருக்கணும்.." என்ற அலச்சியமும் கூட இந்திய ஆண்களின் மத்தியில் அதிகமாக இருக்கிறது.

உடற்பயிற்சி
குறைந்தபட்சம் காலையில் நடைபயிற்சி செய்துக் கொண்டிருந்த ஆண்கள் கூட, திருமணத்திற்கு பிறகு அதை சிறிது காலத்திற்கு மறந்துவிடுகிறார்கள். இந்த ஞாபக மறதியினால் தான் உடல் எடை கண்டமேனிக்கு ஏறுகிறது.

அதிக உழைப்பு / தேவைகள்
பெரும்பாலும் திருமணதிற்கு பிறகு தேவைகள் அதிகரிப்பதால், ஆண்கள் அதிக நேரம் உழைக்க வேண்டும் என்ற நிர்பந்தத்திற்கு ஆளாகின்றனர். இதனால் தூக்கமின்மை, மன சோர்வு, உடல் சோர்வு போன்ற பிரச்சனைகள் ஆண்களிடம் 40 வயதிற்குள்ளாகவே வந்துவிடுகிறது. இதனால் தான் அதிக ஆண்களுக்கு இளம் வயதிலேயே நிறைய உடல்நல பாதிப்பு ஏற்படுகிறது.

மன அழுத்தம்
வீடு, நிலம், சமூக அந்தஸ்து மற்றும் பல காரணத்திற்காக ஓயாமல் உழைக்க வேண்டிய கட்டாயத்தில் ஆண் இருக்கிறான். அதிலும் ஐ.டி-யில் பணிபுரியும் ஆண்களுக்கு இதனாலேயே மன அழுத்தம் அதிகமாகிவிடுகிறது.

முடிவு
உடல் பருமன், தூக்கமின்மை, மன அழுத்தம் போன்றவை தான் நீரிழிவு, இதய பாதிப்புகள் போன்றவை அதிகம் ஏற்பட காரணமாக இருக்கிறது. எனவே, முடிந்த வரை டயட், உடற்பயிச்சி, சரியான நேரத்திற்கு தூக்கத்தை கடைபிடிக்க மறந்துவிட வேண்டாம்.



Click it and Unblock the Notifications
