தினமும் ஒரு துண்டு காய்ந்த நெல்லிக்காயை சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்!

Posted By:
Subscribe to Boldsky

நெல்லிக்காயின் மருத்துவ குணத்தைப் பற்றி சொல்லித் தான் தெரிய வேண்டுமென்பதில்லை. மேலும் நெல்லிக்காயை எந்த வடிவில் எடுத்தால், அது கொடுக்கும் நன்மைகளுக்கு மட்டும் அளவே இல்லை. அதில் பலருக்கும் நெல்லிக்காய் ஜூஸ், நெல்லிக்காய் பொடி பற்றி தெரியும். ஆனால் நெல்லிக்காய் பாக்கு குறித்து தெரியுமா?

ஆம், நெல்லிக்காய் பாக்கு என்பது வெயிலில் உலர்த்தியது. இந்த ஒரு துண்டு காய்ந்த நெல்லிக்காய் அல்லது நெல்லிக்காய் பாக்கை உட்கொண்டால், அதனால் பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

இங்கு உலர்ந்த நெல்லிக்காயை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த உலர்ந்த நெல்லிக்காயை எப்படி வீட்டிலேயே செய்வதென்று கடைசி ஸ்லைடரில் கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கர்ப்ப கால குமட்டல்

கர்ப்ப கால குமட்டல்

கர்ப்ப காலத்தில் குமட்டல் ஏற்படுவது பொதுவானது தான். இத்தகைய குமட்டலில் இருந்து விடுபட ஒரு துண்டு உலர்ந்த நெல்லிக்காயை வாயில் போட்டு மெதுவான மென்று அதன் சாற்றினை விழுங்க, குமட்டல் குணமாகும்.

செரிமானம்

செரிமானம்

செரிமான பிரச்சனையால் அதிகம் அவஸ்தைப்படுபவர்கள், கண்ட மாத்திரைகளை எடுப்பதற்கு பதிலாக ஒரு துண்டு உலர்ந்த நெல்லிக்காயை வாயில் போட்டு மென்று விழுங்கினால், செரிமான பிரச்சனைகள் விரைவில் தடுக்கப்படும்.

நெஞ்செரிச்சல்

நெஞ்செரிச்சல்

அளவுக்கு அதிகமாக கார உணவுகளை உட்கொண்டால் நெஞ்செரிச்சல் அல்லது அசிடிட்டி ஏற்படும். நீங்கள் அம்மாதிரியான பிரச்சனை கொண்டவராயின், உணவு உட்கொண்ட பின் ஒரு துண்டு உலர்ந்த நெல்லிக்காயை உட்கொள்ளுங்கள். இதனால் செரிமானம் சீராக நடைபெறுவதோடு, செரிமான பிரச்சனையால் ஏற்படும் குமட்டல் அல்லது வாந்தியில் இருந்து நிவாரணம் தரும்.

வயிற்று வலி

வயிற்று வலி

நெல்லிக்காயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பாலிஃபீனால்கள் அதிகம் உள்ளது. இது வயிற்றில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, வயிற்று வலியில் இருந்து உடனடி நிவாரணம் தரும்.

வாய் துர்நாற்றம்

வாய் துர்நாற்றம்

உங்கள் வாய் கப்பு அடிக்குமா? அதைத் தடுக்க ஒரு துண்டு உலர்ந்த நெல்லிக்காய் துண்டை வாயில் போட்டு மெல்லுங்கள். இதனால் அதில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சிப் பொருள், பாக்டீரியாக்களை அழித்து, வாயை புத்துணர்ச்சியுடனும், துர்நாற்றமின்றியும் வைத்துக் கொள்ளும்.

நோயெதிர்ப்பு சக்தி

நோயெதிர்ப்பு சக்தி

நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். அதிலும் தினமும் ஒரு துண்டு உலர்ந்த நெல்லிக்காயை உட்கொண்டு வந்தால், அடிக்கடி ஏற்படும் காய்ச்சல், சளி போன்றவற்றின் தாக்குதல்களில் இருந்து விடுபடலாம்.

நெல்லி பாக்கு தயாரிப்பது எப்படி?

நெல்லி பாக்கு தயாரிப்பது எப்படி?

1/2 கப் நெல்லிக்காய் துண்டுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 1/2 டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு பிரட்டி, பின் அதனை ஒரு தட்டில் வைத்து, வெயிலில் வைத்து சில நாட்கள் உலர்த்தி, பின் காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Health Benefits Of Amla Supari You Need To Know

Why you need to eat amla supari? Here are some health benefits of amla supari. Read on to know more.
Subscribe Newsletter