Latest Updates
-
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
1/2 கிலோ சிக்கன் வாங்குனா.. ஒருடைம் இந்த பக்குவத்துல மிளகு சிக்கன் செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்..
Pepper Chicken Recipe In Tamil: நீங்கள் சிக்கன் பிரியரா? உங்கள் வீட்டில் அடிக்கடி சிக்கன் வாங்கி சமைப்பீர்களா? சிக்கனை எப்போதும் ஒரே சுவையில் தான் சமைத்து சாப்பிடுவீர்களா? அப்படியானால் ஒருமுறை பெப்பர் சிக்கனை வீட்டில் செய்து சாப்பிடுங்கள். பொதுவாக பெப்பர் சிக்கனை பலவாறு செய்வார்கள்.

ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு பெப்பர் சிக்கன் செய்தால், பின் இந்த சுவையில் தான் எப்போதும் பெப்பர் சிக்கனை செய்வீர்கள். அந்த அளவில் இதன் சுவை பிரமாதமாக இருக்கும். அதோடு இந்த பெப்பர் சிக்கன் செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும். இந்த பெப்பர் சிக்கன் சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்தியுடன் சாப்பிடவும் அருமையாக இருக்கும்.
இந்த பெப்பர் சிக்கன் ரெசிபி குறித்து டாக்டர் நைத்திய வரதராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். உங்களுக்கு இந்த பெப்பர் சிக்கன் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பெப்பர் சிக்கன் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சிக்கன் - 1/2 கிலோ
* மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
* தயிர் - 1/2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது
வறுத்து பொடி செய்வதற்கு...
* மிளகு - 2 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் சிக்கனை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் கழுவிய சிக்கனை எடுத்துக் கொண்டு,
அத்துடன் மிளகாய் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், மல்லித் தூள்
ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
* அதன் பின் அதில் 1/2 கப் கெட்டி தயிரை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு
தூவி நன்கு பிரட்டி, 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி
சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, பொன்னிறமாகும் வரை
வதக்க வேண்டும்.
* பிறகு அதில் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து ஒருமுறை கிளறி விட்டு,
மூடி வைத்து குறைவான தீயில் வைத்து 15 நிமிடம் வேக வைக்க
வேண்டும்.
* அதற்குள் மற்றொரு அடுப்பில் மிளகு மற்றும் சோம்பு சேர்த்து வறுத்து
இறக்கி, மிக்சர் ஜாரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்து பொடி செய்து
கொள்ள வேண்டும்.
* சிக்கன் வெந்ததும், மூடியைத் திறந்து, அதில் அரைத்து வைத்துள்ள
பொடியை சேர்த்து நன்கு கிளறி, கறிவேப்பிலைத் தூவி கிளறி, 10-15
நிமிடம் எண்ணெய் பிரிய வேக வைத்து இறக்கினால், சுவையான பெப்பர்
சிக்கன் தயார்.



Click it and Unblock the Notifications