Latest Updates
-
சர்க்கரை நோயாளிகளுக்கான டாப் 5 காய்கறிகளை பட்டியலிட்ட டாக்டர்! என்னன்னு தெரிஞ்சுக்கோங்க.. -
நெல்லை ஸ்டைல் தலக சாம்பார் ரெசிபி - ஒரு தடவை செஞ்சு பாருங்க - ஒரு வாரம் வைச்சு சூப்பரா சாப்பிடலாம் -
தலைசுற்ற வைக்கும் இந்தியாவிலுள்ள வினோதமான திருமண சடங்குகள் - இப்படிலாம் கல்யாணம் பண்ணுனா அவ்வளவுதான் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பணத்தையும், புகழையும் கொண்டு வரப்போகுது! -
சத்தான ரவா கீரை அடை - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 13 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கவலைகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் மாளவ்ய ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்! -
சிம்ம ராசியில் உருவாகும் புதாதித்ய யோகம் இந்த 3 ராசிக்காரர்களின் கஷ்டங்களை தீர்க்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
கர்நாடகா தக்காளி தம்பிலி ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் எங்கு சென்றாலும் மகாராணியாக ஆட்சி செய்வார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா?
பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க...
Instant Bun Dosa With Tomato Chutney Recipe In Tamil: காலையில் என்ன டிபன் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? சற்று சிம்பிளான, அதே சமயம் வித்தியாசமான சுவையைக் கொண்ட ஒரு டிபன் செய்ய நினைக்கிறீர்களா? அதுவும் உங்கள் வீட்டில் உள்ளோர் தோசை பிரியரா? ஆனால் தோசை மாவு தீர்ந்துவிட்டதா?அப்படியானால் பன் தோசை செய்யுங்கள்.

இந்த பன் தோசைக்கு தக்காளி சட்னி அருமையான சைடு டிஷ்ஷாக இருக்கும். இந்த டிபன் காம்போவை ஒருமுறை வீட்டில் உள்ளோருக்கு செய்து கொடுத்தால், பின் அடிக்கடி செய்ய சொல்லி கேட்பார்கள். இந்த பன் தோசை மற்றும் தக்காளி சட்னி குறித்து காத்துவாக்குல சமையல் என்னும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
உங்களுக்கு பன் தோசை மற்றும் தக்காளி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பன் தோசை மற்றும் தக்காளி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
பன் தோசைக்கு..
* ரவா - 1 கப்
* அரிசி மாவு - 2 ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* பெருங்காயத் தூள் - 1/2 ஸ்பூன்
* தயிர் - 1/2 கப்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1 (துருவியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பேக்கிங் சோடா - 1 சிட்டிகை
தக்காளி சட்னிக்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 ஸ்பூன்
* வரமிளகாய் - 5
* வெங்காயம் - 3
* தக்காளி - 3
* கறிவேப்பிலை - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* பூண்டு - 3 பல்
* இஞ்சி - 1 சிறிய துண்டு
செய்முறை:
* முதலில் ஒரு மிக்சர் ஜாரில் 1 கப் ரவா, அரிசி மாவு, சுவைக்கேற்ப
உப்பு, பெருங்காயத் தூள், தயிர் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு
மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவை எடுத்து, அத்துடன் பொடியாக
நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்க்க
வேண்டும்.
* அதன் பின் அதில் சீரகம், பேக்கிங் சோடா, துருவிய கேரட் சேர்த்து
நன்கு கலந்து, 10 நிமிடம் தனியாக ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு சட்னி செய்ய, ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடலை பருப்பு, வரமிளகாய், வெங்காயம், தக்காளி
ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் கறிவேப்பிலை, கொத்தமல்லி, சுவைக்கேற்ப உப்பு, பூண்டு,
இஞ்சி ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி இறக்கி குளிர வைத்து, மிக்சர்
ஜாரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* இப்போது சுவையான தக்காளி சட்னி தயார்.
* அடுத்து ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து, அதில் கலந்து
வைத்துள்ள மாவை ஊற்றி, மேலே எண்ணெய் ஊற்றி, 1 நிமிடம் மூடி வைத்து வேக
வைத்து, பின் திருப்பிப் போட்டு வேக வைத்து எடுத்தால், பன் தோசை
தயார்.



Click it and Unblock the Notifications