For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தினமும் எவ்வளவு நேரம் உறங்குவது இதயத்திற்கு நல்லது?

|

இதய பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்க வேண்டும் எனில், நல்ல உறக்கமும், வாரம் முழுவதும் சீரான உடற்பயிற்சியும் செய்ய வேண்டியது அவசியம் என நியூயார்க்கில் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில், எவ்வளவு நேரம் உறங்க வேண்டும். அளவுக்கு அதிகமாக மற்றும் குறைவாக உறங்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு இதய நோய் பாதிப்பு எவ்வளவு சதவீதம் அதிகரிக்கிறது என்பது பற்றியும் கண்டறியப்பட்டுள்ளது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உறக்கமும், பயிற்சியும்

உறக்கமும், பயிற்சியும்

சரியான அளவு உறக்கமும், வாரம் முழுதும் சீரான உடற்பயிற்சியும் மாரடைப்பு போன்ற இதய நோய்கள் ஏற்படும் விகிதத்தை குறைக்க உதவுகிறது.

நியூயார்க் பல்கலைகழகம்

நியூயார்க் பல்கலைகழகம்

சமீபத்தில் நியூயார்க் பல்கலைகழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் 7-8 மணிநேரம் சராசரியான உறக்கம், வாரத்தில் மூன்றிலிருந்து ஆறு முறை 30-60 நிமிடம் உடற்பயிற்சி இவை இரண்டும் இதயத்தின் வலிமையை அதிகரிக்க உதவுகிறது என கூறப்படுகிறது.

அளவு அவசியம்

அளவு அவசியம்

மிக குறைவாக மற்றும் மிக அதிகமாக உறங்குவதும் உடல் நலத்திற்கு தீங்கானது எனவும், எட்டு மணி நேரத்திற்கு மேல் தூங்குவதை தவிர்த்துவிடுங்கள் எனவும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

25%

25%

7-8 மணிநேரம் உறங்கும் நபர்களுக்கு 25% வரை இதய நோய்கள் குறைவாக தான் ஏற்படுகிறது என இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

அதிகமான உறக்கம்

அதிகமான உறக்கம்

எட்டு மணி நேரத்திற்கு அதிகமாக உறங்குபவர்கள் மத்தியில் இதய நோய் பாதிப்புகள் 146% அதிகமாக ஏற்படுகிறதாம். மேலும், குறைவான நேரம் உறங்குபவர்களுக்கு 22% அதிகமாக இதய பாதிப்புகள் ஏற்படுகிறதாம்.

ஆய்வு

ஆய்வு

இந்த ஆய்வு கடந்த 2004 - 2013 ஆண்டு வரை நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் 2,88,888 பேர் பங்கெடுத்துக் கொண்டனர். இதில் அதிகமாக மற்றும் குறைவாக உறங்கும் பழக்கம் கொண்டுள்ளதால் இதய நலனில் ஏற்படும் பாதிப்பு குறித்து ஆராய்ச்சி நடத்தப்பட்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Good Sleep, Exercise Can Cut Stroke Risk, Says Study

Good Sleep, Exercise Can Cut Stroke Risk, Says Study. Read here in tamil.
Desktop Bottom Promotion