Latest Updates
-
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்!
உங்களின் ஞாபக சக்தியை அழிக்கும் உணவுகள்!
நாம் உண்ணும் உணவுகள் ஞாபக சக்தியை அதிகரிக்கும் அதே சமயம் சில உணவுகள் நம் ஞாபக சக்தியை அழித்தும் வருகிறது. அதிலும் இன்றைய காலத்தில் மக்களால் அதிகம் விரும்பி சாப்பிடப்பட்டு வரும் சில உணவுகளால் உடலில் பல நோய்கள் வருவதோடு, மூளையின் செயல்பாட்டில் இடையூறை ஏற்படுத்தி பெரிதும் பாதித்து ஞாபக சக்தியை அழிக்கவும் செய்கின்றன.
ஞாபக சக்தியை அதிகரிக்கும் சிறந்த உணவுகள்!!!
இதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அதுமட்டுமின்றி அந்த உணவுகள் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டியதும் மிகவும் முக்கியம். அப்படி தெரிந்து கொண்டு அந்த உணவுகளை அதிகம் சாப்பிடுவதைத் தவிர்ப்பதோடு, படிக்கும் குழந்தைகளுக்கு அந்த உணவுகளைக் கொடுப்பதை அறவே தவிர்க்கவும் வேண்டும்.
ஞாபக மறதியை அதிகரிக்கும் சில தீயப் பழக்கவழக்கங்கள்!!
சரி, இப்போது நம் மூளையின் செயல்பாட்டைப் பாதித்து ஞாபக சக்தியை இழக்கச் செய்யும் அந்த உணவுப் பொருட்கள் என்னவென்று பார்ப்போம்.

பதப்படுத்தப்பட்ட சீஸ்
அமெரிக்கன் சீஸ் மற்றும் மொசரெல்லா போன்றவை உடலில் புரோட்டீன் அளவை அதிகரித்து, ஞாபக சக்தியை இழக்கச் செய்யும். ஆகவே பதப்படுத்தப்பட்ட சீஸ் வகைகளை அதிகம் உணவில் சேர்க்க வேண்டாம்.

பீர்
ஆண்கள் அதிகம் பருகும் ஒரு வகை ஆல்கஹால் தான் பீர். இந்த பீரை அளவாக பருகினால் உடலுக்கு நன்மை விளையும். ஆனால் அதுவே அளவுக்கு அதிகமானால், நாளடைவில் ஞாபக மறதி பிரச்சனைக்கு உள்ளாகக்கூடும். மேலும் தற்போது கடைகளில் விற்கப்படும் பீர்களில் அல்சைமர் நோயை உண்டாக்கும் நைட்ரைட்டுகள் அதிகம் உள்ளது.

மைக்ரோவேப் பாப்கார்ன்
சினிமா சென்றால் இடைவெளி நேரத்தில் பாப்-கார்ன் சாப்பிட நிறைய பேருக்கு பிடிக்கும். ஆனால் இப்படி சாப்பிடுவதால் ஞாபக சக்தி குறையும் என்பது தெரியுமா? ஏனெனில், மைக்ரோவேவ் பாப்கார்னில் டையாசெடில் என்னும் கெமிக்கல் உள்ளது. இந்த கெமிக்கல் ஏமிலாய்டு ப்ளேக்குகளை உற்பத்தி செய்து, மூளையில் படியச் செய்துவிடும். இப்படி மூளையில் ப்ளேக்குகள் அதிகம் படிந்தால், ஞாபக மறதிக்கு உள்ளாகக்கூடும்.

பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள்
பொதுவாக பதப்படுத்தப்பட்ட உணவுகள் உடலுக்கு மிகவும் ஆபத்தானது. அதிலும் இறைச்சிகள் என்றால் சொல்லவே வேண்டாம். இறைச்சிகளைப் பதப்படுத்த சேர்க்கப்படும் நைட்ரோசமைன்கள் என்னும் கெமிக்கல், கல்லீரலில் மூளைக்கு தீங்கு விளைவிக்கும் நச்சுமிக்க கொழுப்புக்களை உற்பத்தி செய்யும். ஆகவே எக்காரணம் கொண்டும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை வாங்கி சமைத்து சாப்பிடாதீர்கள்.

உப்புமிக்க உணவுகள்
அனைவருக்குமே உப்புமிக்க உணவுகள் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் மற்றும் இதயத்தை பாதிக்கும் என்று தெரியும். இருப்பினும் சமீபத்திய ஆராய்ச்சி ஒன்றில், உப்பு அதிகம் நிறைந்த உணவுகளை உட்கொண்டால், புலனுணர்வு செயல்பாடு பாதிக்கப்படுவதாகவும், ஞாபக சக்தி குறைவதாகவும் தெரிய வந்துள்ளது. ஆகவே கவனமாக இருங்கள்.

எண்ணெயில் பொரித்த உணவுகள்
எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகமாக உட்கொண்டால், அது மூளையில் உள்ள நரம்பு செல்களை மெதுவாக அழிக்கும். எனவே எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகம் சாப்பிடாதீர்கள்.

சர்க்கரைமிக்க உணவுகள்
சர்க்கரை அதிகம் நிறைந்த உணவுகளை நீண்ட நாட்களாக உட்கொண்டு வந்தால், நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். நரம்பு பிரச்சனைகள் எழுந்தால், மூளையின் செயல்பாடு பாதிக்கப்பட்டு, அதனால் கற்கும் திறன், சிந்திக்கும் திறன் போன்றவை குறைய ஆரம்பிக்கும். ஆகவே சர்க்கரை நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடாதீர்கள்.



Click it and Unblock the Notifications
